Published:Updated:

``நெஞ்சாத்தியேன்னா நெஞ்சுக்கு இதமானவள்!’’

``நெஞ்சாத்தியேன்னா நெஞ்சுக்கு இதமானவள்!’’
பிரீமியம் ஸ்டோரி
``நெஞ்சாத்தியேன்னா நெஞ்சுக்கு இதமானவள்!’’

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: பா.காளிமுத்து

``நெஞ்சாத்தியேன்னா நெஞ்சுக்கு இதமானவள்!’’

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
``நெஞ்சாத்தியேன்னா நெஞ்சுக்கு இதமானவள்!’’
பிரீமியம் ஸ்டோரி
``நெஞ்சாத்தியேன்னா நெஞ்சுக்கு இதமானவள்!’’

காதலர்களுக்கு  ‘யாஞ்சி யாஞ்சி’; ஜாலியான ஃப்ரெண்ட்ஸுக்கு ‘டசக்கு டசக்கு’; மென்மை யான மெலடியாக ‘போகாத என்னைவிட்டு’; மிரட்டல்  பாடலாக ‘வாழ்க்கை ஓடிஓடி’ என்று நான்கு பாடல்களும், ஆறு அசத்தல் தீம்  மியூஸிக்குமாக ஃபுல் மீல்ஸ் படைத்திருக்கிறது ‘விக்ரம் வேதா’ ஆல்பம். விஜய் சேதுபதி என்ட்ரி ஆகும் அந்த ‘தனனனனனா... தனனனனனா’ இசையைப் படம் முடிந்தும் ரசிகர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துச் சொல்ல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-சைச் சந்தித்தேன். ஆறடி மனிதர் அளவாக மூன்று சென்டிமீட்டர் மட்டுமே புன்னகைக்கிறார்.

“மூணாறு சொந்த ஊர். காலேஜ் திருச்சியில. அப்புறமா ஐ.டி.வேலை. என் தாத்தாவுக்கு இசை ஆர்வம் உண்டு. அவரோட ஆர்மோனியத்துல அப்பப்போ வாசிப்பேன். படிச்சதெல்லாம் கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட்ங்கிறதாலேயும், சர்ச் ஆக்டிவிடீஸ்னாலேயும் அந்த ஆர்வம் அதிகமாச்சு. ஐ.டி-யில் வேலை பார்க்கிறப்போ ‘ஓர் இரவு’ங்கிற திகில் படத்துக்குப் பின்னணி இசை அமைக்க வாய்ப்புக் கிடைச்சது. அப்புறம் கீ போர்ட் ப்ரோகிராமரா சில படங்கள். மியூஸிக் டைரக்டரா முதல்ல கமிட் ஆன படம்  ‘புரியாத புதிர்’. அந்தப் படம் ரிலீஸுக்கு வெயிட்டிங். அடுத்ததா ‘கடலை’. மூணாவது `விக்ரம் வேதா’. மனைவி ஜேனட், பையன் சில்பர்னு அழகான குடும்பம். இதான் சாம்.”

``நெஞ்சாத்தியேன்னா நெஞ்சுக்கு இதமானவள்!’’

“ `விக்ரம் வேதா’ படத்துல கமிட் ஆன அனுபவம் சொல்லுங்க...”

“ `புரியாத புதிர்’, பின்னணி இசைக்கு ரொம்ப முக்கியத்துவம் உள்ள எமோஷனல் த்ரில்லர் படம். அதோட போஸ்ட் ப்ரொடக்‌ஷன் டைம்ல புஷ்கர் சார், காயத்ரி மேடம் பார்த்துட்டு என்னை `விக்ரம் வேதா’வுக்கு புக் பண்ணினாங்க. புக் பண்றப்போ வெறும் பின்னணி இசை மட்டும் பண்றதாதான் ப்ளான். அப்புறமா சில எமோஷன் களுக்குப் பாடல் வரிகள் தேவைப்பட்டன. அப்படித் தான் பாடல்களைச் சேர்த்தோம். பாடல்களுமே  புகுத்தப்பட்டதா இருக்காது. அதுதான் இத்தனை கவனம் ஈர்க்கக் காரணம்னு நினைக்கிறேன்.”

 “ஒரு பாட்டுக்கு விக்னேஷ் சிவன் வரிகள், இன்னொண்ணுல  அனிருத் வாய்ஸ்...”


“கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் இருக்கிற யுத்தத்தை ‘வாழ்க்கை ஓடி ஓடி’ பாட்டுல அவ்ளோ எளிமையா சொல்லிருப்பார் விக்னேஷ் சிவன். ‘எதுவும் இங்க சரியும் இல்ல... தவறும் இல்ல போடா’னு கேஷுவலா  கடகடனு எழுதிக்கொடுத்துட்டார். ‘யாஞ்சி யாஞ்சி’ பாடல் மாதவன் சாருக்கு டூயட். மான்டேஜ்னு முடிவானதும்,  அனிருத்  பாடினா  நல்லாருயிருக்கும்னு தயாரிப்பாளர் சஷிகாந்த் சொன்னார். எனக்கும் அனிருத் மெலடினா ரொம்பப் பிடிக்கும். அவர் வெறுமனே வந்து பாடிக் கொடுத்துட்டு மட்டும் போகாம, இம்ப்ரூவ் பண்ணிட்டே இருந்தார். செம எனர்ஜெட்டிக்.”

“டசக்கு டசக்கு, யாஞ்சி யாஞ்சி, நெஞ்சாத்தியே... எங்க புடிக்கறீங்க இந்த வார்த்தைகளையெல்லாம்?”

“டசக்கு டசக்கு, வாய்ல மியூஸிக் போடுறப்போ ‘டண்டக்கு டண்டக்கு’னு போடுற மாதிரிதான். ‘யாஞ்சி யாஞ்சி’ ட்யூன் போடறப்போ தோணினது. அப்பறமா பழந்தமிழ்ல `ஏண்டி’ங்கிறது மனைவியைக் கொஞ்சலா கூப்பிடும் தொனி. ‘நெஞ்சாத்தி’  மோகன்ராஜ் எழுதினது. ‘நெஞ்சுக்கு இதமானவளே’னு அர்த்தம்.”     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நெஞ்சாத்தியேன்னா நெஞ்சுக்கு இதமானவள்!’’

“படத்துல உங்களுக்குப் பிடிச்ச பாட்டு என்ன?”

“ `போகாதே என்னைவிட்டு.’ நானே எழுதினேன். படத்துல ஃபுல் சாங்கா இருக்காது. புலி- சந்திரா கேரக்டரோட உள்ளுணர்வா அந்தப் பாட்டு இருக்கும். அதனால் ரொம்பப் பிடிச்சது.”

“ஓர் இசையமைப்பாளர்கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்காம இருக்க முடியாது. உங்க லைஃப் ட்ராவல்ல உங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர் யாரு?”

“80-90-ஸ் பையன் நான். கண்ண மூடிட்டுச் சொல்லிடலாம். ராஜா சார்தான்னு. இப்பவுமே என்னிடம் அவரோட தாக்கம் இருக்கும். பி.ஜி.எம்-னா எல்லாத்துக்கும் ஒலிக்கணும்னு இல்லைனு சொல்லித் தந்தவர் அவர். எங்க மியூஸிக் போடணும்ங்கிறதைவிட, எங்கே போடக்கூடாதுனு கத்துக்கொடுப்பார். ரஹ்மான் சார் ஸ்பெஷல் என்னன்னா, சவுண்டிங். இப்படியெல்லாம் சவுண்டை மாற்றிப் பண்ணலாமானு ஆச்சர்யப்படுத்தினார். இந்த ரெண்டு பேரும் என்னோட ஃபேவரைட். இவங்க தாக்கம் உறுதியா இருக்கும். இவங்களை என் குருவா நெனச்சிக் கிட்டுதான் பயணிக்கிறேன்.’’ 

``இந்தப் படத்துக்குக் கிடைச்ச பெரிய பாராட்டு...”

“பேக்ரவுண்ட் மியூஸிக் பண்றப்போ அது இதுனு பல தடவை பார்த்துருக்கேன். நானும் பல படங்களுக்கு க்ளாப்ஸ் அடிச்சதுண்டு. ஆனால், தியேட்டர்ல முதல் ஷோ பார்த்துக்கிட்டிருக்கிறப்போ ஆடியன்ஸோட க்ளாப்ஸ்தான் கிடைச்சதுலேயே பெஸ்ட்னு நினைக்கிறேன். அந்த ஃபீல் தனி.”

“அடுத்து?”

“மூணு ப்ரோஜக்ட் பண்ணிட்டிருக்கேன். அதிகமான படங்கள் பண்ணணும்னு ஆசை இல்லை. எனக்கு டைம் வேணும். இம்ப்ரூவ் பண்ணிட்டே இருக்க ஆசை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism