
``மன்னா...எதிரி, போரை பிக்-பாஸ் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்கிறான்.’’
``ஏன் அமைச்சரே..?’’
``தாங்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாதே.’’
- பர்வீன் யூனுஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``தரகரே... மாப்ள ஆர்மியில இருக்காருன்னீங்க, மேரேஜ் ஆகி ரெண்டு வருசமா வீட்லேயே இருக்காரு?”
``முன்னால தல ஆர்மியில இருந்தாரு, இப்போ ஓவியா ஆர்மியில மெம்பரா இருக்காரு.”
- செந்தில் சி.பி

“தலைவர் அப்பாவியா...எப்படிச் சொல்ற?”
“பிக்-பாஸ்ல ஓட்டுப் போட்டுட்டு, இதுக்கு கருத்துக்கணிப்பு எல்லாம் வெளியிட மாட்டாங்களான்னு கேட்கிறாரே?”
- பர்வீன் யூனுஸ்

“டெல்லிக்கு அனுப்பும் கடிதத்தில் என்ன எழுதுறது தலைவரே?”
“மீனவர் என்ற வார்த்தையை எடுத்துட்டு ‘நீட்’னு போட்டு அனுப்பு.”
- கி.ரவிக்குமார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism