
"ஹோட்டல் கிச்சன்ல எதுக்கு சிசிடிவி கேமரா வெச்சிருக்கீங்க?"
"தக்காளி, வெங்காயத்த அங்கேதானே வெச்சிருக்கோம்..."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டாக்டர் கமல் ஃபேன் போல!எப்படிச் சொல்ற?
மருந்து சீட்டுல பிக்பாஸ் பார்க்கும் முன், பின்னு எழுதிருக்காரே!
- அ.ரியாஸ்

”குழந்தைகள் ஸ்பெஷல் கேள்விப்பட்டிருக்கறேன், அதென்ன மாமியார் ஸ்பெஷல்?”
“அவர் கிட்ட அட்மிட் ஆன மாமியார்கள் யாரும் வீடு திரும்புனதில்லையாம்!”
- வி.சகிதாமுருகன்

``சிறையில் கூடுதல் சலுகைகள் கிடைப்பதற்கும் அதே சலுகைகள் அதிரடியாய் பறிபோவதற்கும் எது காரணம்னு நினைக்கறீங்க தலைவரே?’’
``ரூபாதான்!’’
- பாலா சரவணன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism