Published:Updated:

“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்

“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்
பிரீமியம் ஸ்டோரி
“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்

ம.கா.செந்தில்குமார்

“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்
பிரீமியம் ஸ்டோரி
“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்

`விஐபி-2’ ரிலீஸ் டென்ஷன், ‘வடசென்னை’ படப்பிடிப்பு, ஹாலிவுட் பட வேலைகள், ‘காலா’ தயாரிப்பு, இவற்றுக்கிடையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயக் குடும்பத்துக்குப் பண உதவி... எனப் பரபரத்துக்கொண்டிருக்கும் தனுஷிடம் பேசினேன்.

“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்

‘‘ `விஐபி-2’ எப்படி வந்திருக்கு?’’

“இதன் முதல் பாகம், ஒரு மாஸ் ஃபேமிலி படம் என்பதைத் தாண்டி, அதில் வீட்டுக்கு எடுத்துட்டுப்போக மனசுக்கு நிறைவான ஓர் இதயம் இருக்கும். வில்லனை, ‘ஏய் என்னப்பா... வேணும்னா நான் ஸாரி சொல்லிக்கிறேன். வா, உட்கார். ஒண்ணாப் போலாம்’னு சொல்லி, அதே வண்டியில் அவனைக் கூட்டிட்டுப் போறதுன்னு மனிதத்தன்மை, எமோஷன்ஸ் கொஞ்சம் அதிகமா இருக்கும். இந்தத் தன்மை இருந்ததால்தான் அந்தப் படத்தை ஆறு வயசிலிருந்து 60 வயசுக்காரங்க வரை முகம் சுழிக்காமல் பார்த்தாங்க. அதே குவாலிட்டி பார்ட் 2-லயும் இருக்கும். கூடுதலா க்ளைமாக்ஸ்ல கொஞ்சம் பொயட்டிக்காக ஒரு விஷயம் சொல்லியிருக்கோம். பார்ட் 1-ல் ஏற்பட்ட மனநிறைவு இதிலும் நிச்சயம் கிடைக்கும்.’’

“வில்லன் கேரக்டருக்கு ஒரு பெண்ணை ஃபிக்ஸ் பண்ணலாம்னு எந்தச் சமயத்தில் முடிவு பண்ணினீங்க?’’


“என் இடத்திலிருந்து பார்க்கும்போது, நீங்க பண்றது தவறா தெரியலாம்.  உங்க இடத்திலிருந்து பார்க்கும்போது நான் பண்றது தவறா தெரியலாம். நம்ம அலைவரிசை ஒரே இடத்தில் இல்லைங்கிறதுக்காக ஒருத்தர் ஹீரோன்னும், இன்னொருத்தர் வில்லன்னும் ஆகிடப்போறது கிடையாது. அதேதான் இந்த ஸ்க்ரிப்ட்டிலும். சந்தர்ப்ப சூழலால் கஜோல் மேடம் கேரக்டரின் குணநலனில் மாறுதல்கள் வருதே தவிர, அவங்களை வில்லின்னு ஃபிக்ஸ் பண்ணி எதுவும் பண்ணலை. இதைத்தாண்டிப் பெண்களைச் சிறப்பான இடத்தில் காட்டியிருக்கும் படமா இது இருக்கும்.’’

“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்

“கஜோலோடு சேர்ந்து நடித்த அனுபவம் எப்படி இருந்தது?’’

“எப்பவுமே எதிரில் திறமையான ஒரு நடிகை இருந்தாங்கன்னா, நம்மை அறியாமலேயே நம் நடிப்பு என்ஹேன்ஸ் ஆகும். அப்படி டேலன்டட் பெர்ஃபாமர் இருக்கும்போது, எனக்கும் அது பூஸ்டிங்கா இருந்துச்சு. முதல் படம் பண்ற மாதிரி அவ்வளவு சின்சியர். உண்மையில் அவங்களோட கான்ட்ராக்ட்ல இருந்த நாள்களைவிட அதிக நாள்கள் பட புரமோஷனுக்குக் கொடுத்தாங்க. நல்ல மனசு உள்ள ஒரு புரொஃபஷனல்கூட வொர்க் பண்ணதுல எனக்கும் ரொம்பச் சந்தோஷம்.’’

“இயக்குநர் செளந்தர்யா எப்படி உங்களை வேலை வாங்கினாங்க?’’

“செல்வா, ஐஸ்வர்யா, கீதாஞ்சலி, நான்னு எங்க ஃபேமிலிக்குள்ளேயே நிறைய ரைட்டர்ஸ், டைரக்டர்ஸ். அந்த வரிசையில் சௌந்தர்யாவும் ரைட்டர் கம் டைரக்டர்தான்.  ஃபேமிலிக்குள்ள இவ்வளவு பேர் இப்படி இருக்கும்போது யதார்த்தமா நாங்க பேசிக்கிறதே ஸ்க்ரிப்ட் பற்றியோ, படம் பற்றியோதான் இருக்கும். இதற்கிடையில் தாணு சாருக்கு, சௌந்தர்யா ஒரு படம்  பண்றதாகவும் அதில் நான் நடிக்கப்போறேன் என்கிற அளவுக்குத்தான் பேசியிருந்தாங்க. என்ன ஸ்க்ரிப்ட் பண்ணலாம்னு மூணு நாலு கதைகள் பேசிட்டிருக்கும்போது, ` ‘ விஐபி-2’ எழுதி ரெடியா இருக்கு. அதை ஏன் பண்ணக் கூடாது’னு ஒருநாள் தோணுச்சு. சௌந்தர்யாவுக்கும் தாணு சாருக்கும் அந்த ஸ்க்ரிப்ட் புக்கைக் கொடுத்தேன். ஸ்க்ரிப்ட்டைப் படிச்ச முதல்நாள் தாணு சார் சொன்ன வார்த்தை, ‘தம்பி, இது கோல்டும்மா’. சௌந்தர்யாவும், ‘இதுதான் பெஸ்ட். இதையே பண்ணலாம்’னு சொன்னாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான் `வி.ஐ.பி-2’.

சௌந்தர்யாவைப் பொறுத்தவரை அவங்க அஞ்சாறு படங்கள் பண்ணின அனுபவம் உள்ள இயக்குநர் மாதிரி இருந்தாங்க. அதுக்கு முக்கியக் காரணம், ‘கோச்சடையான்’ தந்த அனுபவம்தான். அவ்வளவு பெரிய புராஜெக்ட் பண்ணினதுக்கு அப்புறம், இந்த புராஜெக்ட் பண்ணினது உண்மையிலேயே அவங்களுக்குக் கஷ்டமா இல்லை.”

“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்

“உங்க மனைவி ஐஸ்வர்யா தன் அடுத்த பட வேலைகளைத் தொடங்கிட்டாங்களா?’’

‘‘ஸ்டன்ட் டைரக்டர்களுக்குத் தேசிய விருது கொடுக்க வைத்ததில் அவங்களோட பங்கை நினைச்சுப் பெருமைப்படுறேன். அதுக்காக, நிறைய எஃபெர்ட் எடுத்தாங்க; மத்தியஅமைச்சரைக்கூட சந்திச்சுப் பேசினாங்க. அடுத்து அவங்க ஒரு ஸ்க்ரிப்ட் எழுதிக்கிட்டு இருக்காங்க. நிச்சயம், அவங்க தொடர்ந்து படங்கள் பண்ணுவாங்க.”

“இவரை நாம டைரக்ட்  பண்ணணும்னு உங்க மனசுல இருக்கும் நடிகர் யார்?’’

“ரஜினி சார் நடிக்க, நான் இயக்கணும். என்னிக்குமே அதுதான் ஆசை. அவருக்காக 10, 15  ஒன்லைன்கள் வெச்சிருக்கேன். ஆனா, அது அமையணும்.”

‘‘மூன்று பாகங்கள், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிச்சுருக்கீங்க. எப்படி வந்திருக்கு `வடசென்னை’?’’

‘‘ஆமாம், `வடசென்னை’ முதல் பாகம் முடிய இன்னும் 15 நாள் ஷூட்டிங்தான் மீதி இருக்கு. சீக்கிரமே அதையும் முடிச்சுடுவேன். என் கரியர்ல `வடசென்னை’ நிச்சயம் ஒரு மைல்கலா இருக்கும். 90 சதவிகிதம் முடிஞ்சிடுச்சு. எடுத்தவரைக்கும் நானும் வெற்றிமாறனும் பார்த்தோம். `பொல்லாதவன்’, `ஆடுகளம்’, `விசாரணை’னு அவர் எடுத்த படங்களைத் தாண்டி இதுதான் அவரோட பெஸ்ட்னு என்னால ஓப்பனா சொல்ல முடியும். அப்படித்தான் மக்களும்  ஃபீல் பண்ணுவாங்கன்னு நம்புறேன். இவ்வளவு இயல்பா, யதார்த்தமா வடசென்னையை யாரும் காட்டியிருக்க முடியுமா அல்லது இதுவரை வந்திருக்கா, இனிமேலும் இப்படிக் காட்ட முடியுமான்னு தெரியலை. நான் யாருடைய வேலையையும் கம்மி பண்ணிச் சொல்லலை. இவ்வளவு ராவா இப்படி ஒரு படம் நான் பார்த்ததே இல்லை. பெரிய கதை. ஒவ்வொரு கதைக்குள்ளேயும் ஒரு கிளைக்கதைனு எடுக்க எடுக்கப் போயிட்டே இருக்கு. அதனால்தான் மூணு பாகம்னு அறிவிச்சிருக்கோம். பாகம் ஒண்ணையே ரெண்டரைமணி நேரத்துக்குள்ள சொல்ல நாங்க அவ்வளவு சிரமப்படுறோம். மறுபடியும் சொல்றேன், இது வெற்றிமாறனோட பெஸ்ட் புராடெக்டா இருக்கும்.’’

“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்

``ஹாலிவுட் பட அனுபவம் எப்படியிருக்கு?’’

“ `The Extraordinary Journey of the Fakir’ படத்தில் நடித்தது அழகான அனுபவம். நிறைய கத்துக்க முடிஞ்சுது. ‘பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்’ங்கிற வார்த்தைக்குச் சரியான அர்த்தம் அங்கே போனபிறகுதான் புரிஞ்சுது. படத்தில் நடிக்கப்போகும்போது   ஓர் இயக்குநரின் நடிகனா போனேன். வரும்போது சரண்டராகிற ஓர் இயக்குநரின் நடிகனாகத்தான் திரும்பி யிருக்கேன். படத்தில் என் கேரக்டர் பெயர் அஜா என்கிற அஜாத சத்ரு. நான்தான் லீட் கேரக்டர். ஒரு ஸ்ட்ரீட் மெஜீஷியன் தன் சிறிய உலகத்தைவிட்டு ஒரிஜினலான உலகத்துக்குள்ளே போகும்போது அவன் என்ன புரிஞ்சுக்கிறான், தன் பயணங்களின் மூலம் அவன் என்ன கத்துக்கிறான், கடைசியில் ‘இதுதான் வாழ்க்கைனு அவன் என்ன முடிவுக்கு வர்றான் என்பதை காமெடியாவும் அட்வென்ச்சராவும் சொல்ற படம்தான் இது. இந்தியாவிலிருந்து கிளம்பி ட்ராவல் ஆகி, கடைசியில் இந்தியாவிலேயே முடியும் கதை. அந்தப் பயணம் என்ன ஆகுது என்பதுதான் படம்.”

“உங்களோட அடுத்தடுத்த கமிட்மென்ட் என்ன?’’

‘‘ `என்னை நோக்கிப் பாயும் தோட்டா’. ரொம்ப ஸ்டைலிஷான ஆக்‌ஷன் பிளாக்கோடு வர்ற நல்ல பொழுதுபோக்குப் படம். ‘பரவாயில்லையே... எல்லா ஃபிரேம்லேயும் நாம ரொம்ப நல்லா இருக்கிற மாதிரிக் கௌதம் மேனன் காட்டியிருக்காரே’னு என் கண்ணுக்குத் தெரிஞ்ச படம். அடுத்து ‘மாரி 2’ ஆரம்பிக்கிறோம். அதே மாஸ். இன்னும் கொஞ்சம் அழுத்தமான எமோஷன்ஸ் நிறைந்த  படமா இருக்கும். காஜல் தவிர, மீதி எல்லோருமே அந்தப் படத்தில் இருக்காங்க. வேற மூணு புது கேரக்டர் உள்ளே வரப்போகுது. அப்புறம் நானும் செல்வா அண்ணாவும் அடுத்த வருஷம் நிச்சயமா ஒரு படம் பண்ணுவோம். நாங்க மறுபடியும் சேரும்போது பிரமாண்டமா மிகச்சரியான ஸ்க்ரிப்ட்டோடு வரணும். அதுக்காகத்தான் வெயிட்டிங்.’’

“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்

“சில வருத்தங்களால் பிரிந்திருந்த உங்களையும் அனிருத்தையும் காலங்கள் நெருக்கிக்கொண்டு வந்திருக்கலாம். மீண்டும் எப்போ சேர்ந்து படம் பண்ணுவீங்க?’’

“எங்களுக்குள் எப்பவுமே எந்த வருத்தமும் இல்லை. அவருடைய இசை கொஞ்சம் வெஸ்டர்னா வேறொரு ஏரியாவுல இருக்கு. ‘இந்த மாதிரி இசைதான் இந்தக் கதைக்கு தேவை’னு எப்போதாவது ஃபீல் பண்ணேன்னா, நிச்சயம் மறுபடியும் என் படத்துக்கு அனிருத் மியூஸிக் பண்ணுவார். அந்த மாதிரி இசை தேவைப்படாதபோது, ‘நீ இப்படித்தான் மியூஸிக் பண்ணணும்’னு சொல்றதும் தவறு. ஆமாம், அந்த இசையும் அந்தச் சத்தமும் இந்த ஸ்க்ரிப்ட்டுக்குத் தேவைனு எப்போ நினைக்கிறேனோ, அப்போ சேர்ந்து வொர்க் பண்ணுவோம்.”

“வறுமையால் தற்கொலை செய்துகொண்ட 125 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உங்க சொந்த ஊர் சங்கராபுரத்தில் வைத்து நிதி உதவி பண்ணியிருக்கீங்க விவசாயிகளுக்குத் தொடர்ந்து உதவும் திட்டங்கள் இருக்கா?’’

``இது, கடந்த மூணு மாசமாவே என் மனசுல ஓடிட்டிருந்த விஷயம். ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் இதை ரிசர்ச் பண்ணச் சொல்லியிருந்தேன். இந்த உதவி மிகச்சரியானவங்களுக்குப் போய் சேரணும் என்பதில் உறுதியா இருந்தேன். அதுக்கு முக்கியமா வேல்ராஜ் சாருக்கும், சுப்ரமணிய சிவா சாருக்கும் நன்றியைச் சொல்லிக்கிறேன். இது தற்காலிக மானிட்டரி உதவிதான்னு எனக்குத் தெரியும். உதவிகள், இத்தோடு நிற்காது. அடுத்து என்ன பண்ணணும்கிற ரிசர்ச் ஆரம்பிச்சுட்டோம்.  ஒரு ஐடியா வெச்சுருக்கேன். அப்போ இன்னும் நிறையபேர் என்கூட சேருவாங்கனு நம்புறேன். அது என்னன்னு நான் இப்போ சொல்லிடக் கூடாது. ஆய்வு போயிட்டிருக்கு. சமூகப் போராளிகள், சீனியர் விவசாயிகள்னு நிறைய பேர்கிட்ட அறிவுரை கேட்டுட்டிருக்கோம். நிச்சயமா பண்ணுவோம்.”

“நான் இயக்க... ரஜினி சார் நடிக்க!” தனுஷின் பக்கா ப்ளான்

“ இப்ப நீங்க ரஜினி படத்தின் தயாரிப்பாளர். `காலா’ பட வேலைகள் எந்த அளவில் இருக்கின்றன?”

“ரஜினி சார் படத்தைத் தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கெளரவம். திடீர்னு ரஜினி சார் ஒருநாள் போன் பண்ணி, ‘நீங்கதான் பண்றீங்க’னு சொன்னாங்க. இன்ப அதிர்ச்சி. படம் சூப்பரா வந்துட்டிருக்கு. 60 சதவிகிதம் ஓவர். சாரோட ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய விருந்தா இருக்கும். ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகலை. நிச்சயமா இந்த வருஷம் இருக்காது. `2.0’-க்குப் பிறகுதான் `காலா’ ரிலீஸ்.’’

“ரஜினியின் அரசியல் பேச்சுகள் அப்பப்போ நடந்துட்டே இருக்கும். சமீபத்தில்கூட, ‘சிஸ்டம் சரியில்லை’னு பேசினார். ரஜினி சார் அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா?’’

“சார், எதையுமே ரொம்பச் சிறப்பா செய்யக்கூடியவர். அவர் எது பண்ணினாலும் அவரோட ஸ்டைல் மாதிரியே சூப்பரா இருக்கும். நீங்க சொல்ற மாதிரி ரசிகர்களும் பொதுமக்களும் அவர் அரசியலுக்கு வர்றதைத்தான் விரும்புறாங்க. ஆமாம், அவர் ரசிகரா நானும் அதைத்தான் விரும்புறேன், எதிர்பார்க்கிறேன்.  வந்தால் நிச்சயம் நல்லது பண்ணுவார். ஆனா, அவர் வருவாரா இல்லையானு எனக்குத் தெரியாது. நானும் உங்களை மாதிரியே காத்துட்டிருக்கேன்.”