Published:Updated:

“இது எனக்கே புதுசா இருக்கு!”

“இது எனக்கே புதுசா இருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
“இது எனக்கே புதுசா இருக்கு!”

பா.ஜான்சன்

“இது எனக்கே புதுசா இருக்கு!”

பா.ஜான்சன்

Published:Updated:
“இது எனக்கே புதுசா இருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
“இது எனக்கே புதுசா இருக்கு!”

``நிறைய தயாரிப்பாளர்கள் `எங்களுடைய பேனர்லயும் படம் பண்ணுங்க’னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. `தேனாண்டாள்’ முரளி சார் அடிக்கடி கேட்பார். `சரி சார் பண்ணலாம்’னு சொல்லி, நான் ஓகே பண்ணி வெச்சிருந்த ரெண்டு கதைகளை அவருக்கு அனுப்பினேன். அதில் அவருக்கு `பொதுவாக என் மனசு தங்கம்’ கதை பிடிச்சுப்போச்சு. ஏன்னா, அதுல சாமி சென்டிமென்ட்  இருக்கும். முதன்முறையா வேற ஒரு பேனர்ல நடிக்கிறேன். ஆனா, எனக்கு அந்த உணர்வே இல்லை. ஏன்னா, அவர் எங்க குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி. படம், சூப்பரா வந்திருக்கு. தயாரிப்பாளர், இயக்குநர்னு எல்லோருக்கும் படம் மனநிறைவைக் கொடுத்திருக்கு. அது ஆடியன்ஸுக்கும் கிடைக்கும்னு நம்புறேன்” செம எனர்ஜியுடன் பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

“இது எனக்கே புதுசா இருக்கு!”

``ஜிகுஜிகு சட்டை, வேட்டி, முறுக்குமீசை, கிராமத்து சப்ஜெக்ட்னு உங்களுடைய வழக்கமான களத்திலிருந்து விலகின மாதிரி இருக்கே?’’

``அதுக்குத் தயாரிப்பாளர் முரளி சார் ஒரு காரணம். என்னைக் கிராமத்து சப்ஜெக்ட்ல நடிக்க வைக்கணும்னு அவர் ரொம்ப விரும்பினார். `இந்த மாதிரி ஒரு படம் நடிக்கணும்’னு நானும் ரொம்பநாளா நினைச்சுக்கிட்டிருந்தேன்.  தொடர்ந்து நகரத்துப் பின்னணியிலேயே நடிச்ச எனக்கு, ஒரு மாற்றம் தேவைப்பட்டது. ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் சார்தான் `இப்படி ஒரு கதை இருக்கு. உங்களுக்கு நல்லாயிருக்கும்’னு சொன்னார். இயக்குநர் பிரபுவை என்கிட்ட கதை  சொல்ல அனுப்பினார். அவர் இடைவேளைவரை சொன்னதுமே `நான் இந்தப் படத்துல நடிச்சே ஆகணும்’னு முடிவு பண்ணிட்டேன். ஒரு கிராமத்து இளைஞனைப் பற்றிய கதை. வழக்கமான கமர்ஷியல் படமா மட்டும் இல்லாம, படத்துக்குள்ள சின்ன மெசேஜும் இருக்கும். கிராமத்தின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லியிருப்போம். அது பிரசாரமா இல்லாம, படத்தோடு ரொம்ப இயல்பா கலந்திருக்கும். என்னோட கேரக்டர் பெயர் கணேஷ். `யார் சொன்னாலும் கேட்க மாட்டான்’கிற மாதிரியான மனநிலையில் இருக்கிறவன்.  என்னோட காஸ்ட்யூம், முறுக்கு மீசைனு எனக்கே புதுசா இருந்தது இந்தப் படம்.’’

“இது எனக்கே புதுசா இருக்கு!”``வில்லனாகப் பார்த்திபன், புதுக்கூட்டணியா இருக்கே?’’

``பார்த்திபன் சாருக்கும் இந்த ரோல் ரொம்பப் புதுசா இருக்கும். `ஊத்துக்காட்டான்’னு ஒரு ரோல்ல நடிச்சுருக்கார். ரொம்பவே பவர்ஃபுல்லான கதாபாத்திரம். சில பேரு விளம்பரத்துக்காக நிறைய விஷயம் பண்ணுவாங்க. அது நெகட்டிவா இருந்தாகூட பண்ணுவாங்கள்ல அந்த மாதிரி ரோல். ஆரம்பத்தில் அவர்கூட நடிக்க பயந்தேன். ஏன்னா, டக்கு டக்குனு கலாய்ச்சுடுவார்ல. என்ன பிரச்னைனா, அவர் கலாய்க்கிறார்ங்கிறதே அஞ்சு நிமிஷம் கழிச்சுத்தான் நமக்குத் தெரியும். அவ்ளோ புத்திசாலித்தனமா கலாய்ப்பார். ரொம்ப டெடிகேட்டடான ஆள். அவரது காஸ்ட்யூம், கண்ணாடி, செருப்பு முதற்கொண்டு எல்லாத்துக்கும் ரெஃபரென்ஸ் எடுத்துட்டு வந்து, `இந்த மாதிரி பண்ணிக்கலாமா?’னு கேட்பார். படம் முழுக்க எனக்கும் அவருக்குமான காட்சிகள் ரொம்பப் புதுசா இருக்கும்.’’

“இது எனக்கே புதுசா இருக்கு!”

``சூரியுடன் மறுபடியும் ஜோடி சேர்ந்திருக்கீங்களே?’’

``கிராமத்துப் படம்னு சொன்னதும், சூரி தவிர வேற யாரையும் யோசிக்க முடியலை. இந்தப் படத்தில் `டைகர் பாண்டி’னு ஒரு ரோல் பண்றார். க்ளைமாக்ஸ்ல கொஞ்சம் எமோஷனல் டயலாக்ஸ்லாம் பேசுவார். போட்டோ ஷூட் சீன் ஒண்ணு இருக்கு. படத்துல அது ரெண்டு நிமிஷம்தான் வரும். ஆனா, அதுக்காக ஒருநாள் முழுக்க ஷூட் பண்ணோம். வழக்கமா ஹீரோக்களுக்கு சண்டைக்காட்சிகள்ல அடிபட்டு மெனக்கெட்டு எடுக்கிற மாதிரி ரெண்டே நிமிஷம் வர்ற சீனுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டார். உடம்புல அடிகூட பட்டுச்சு. நிச்சயமா எல்லோரும் அவர் காமெடியை ரசிப்பாங்க.’’

``ஹீரோயின் நிவேதா பெத்துராஜ் பற்றிச் சொல்லுங்க?’’


``கிராமத்துக் கதைங்கிறதனால அவங்க இதுல பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுச்சு. அவங்களே மதுரைப் பொண்ணுங்கிறதால பக்காவாப் பொருந்தியிருக்காங்க. நாமதான் `அவங்களுக்கு ரெண்டாவது படம்தானே’னு நினைக்கிறோம். தேனி பக்கம் ஷூட் போயிட்டிருக்கு, அவங்களுடைய ரசிகர் கூட்டம் சுற்றி நிற்கிறாங்க. `அடியே அழகே...’ பாட்டு மூலமா பெரிய ரீச். அந்தப் படம் அவங்களை எல்லோர்கிட்டவும் சேர்த்திருக்கு.  டான்ஸ்லாம் கலக்கியிருக்காங்க. இந்தப் படம் அவங்களுக்கு இன்னும் பெரிய அடையாளத்தைக் கொடுக்கும்.’’