Published:Updated:

“நஸ்ரியா நடிக்க வர்றாங்க”

“நஸ்ரியா நடிக்க வர்றாங்க”
பிரீமியம் ஸ்டோரி
“நஸ்ரியா நடிக்க வர்றாங்க”

“நஸ்ரியா நடிக்க வர்றாங்க”

“நஸ்ரியா நடிக்க வர்றாங்க”

“நஸ்ரியா நடிக்க வர்றாங்க”

Published:Updated:
“நஸ்ரியா நடிக்க வர்றாங்க”
பிரீமியம் ஸ்டோரி
“நஸ்ரியா நடிக்க வர்றாங்க”

`` `மகேஷின்டே பிரதிகாரம்’ படம் நடிச்சு முடிச்சிருந்த நேரம் அது. இதுவரைக்கும் பண்ணாத ஒரு படம் பண்ணணும். கிட்டத்தட்ட என்னோட முதல் படம் மாதிரி ஒரு அனுபவத்தைத் தரணும்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துலதான் மோகன் ராஜா சார் கேரளாவுக்கு வந்தார். என்னைச் சந்திச்சார். ஒருநாள் முழுக்கப் பேசினோம். அதுவரைக்கும் மலையாளத்தில் நடிக்கிறது மட்டும்தான் என் நோக்கமா இருந்தது. ஏன்னா, அதுதான் எனக்குத் தெரிஞ்ச மொழி. அதேசமயம், ‘முதன்முதலா ஒரு படத்தில் நடிக்கும்படியான உணர்வோடு ஒரு படம் பண்ணணும்’னு தோணிக்கிட்டே இருந்ததால், `வேலைக்காரன்’ல எனக்கு அந்த அனுபவம் கிடைக்கும்னு தோணுச்சு. அந்த வகையில் எனக்கு இது உண்மையில் முதல் படம்தான்’’ - மலையாளக் குழைவுடன் தமிழில் பேசும் ஃபகத் பாசிலின் ஒவ்வொரு வார்த்தையிலும் லட்சம் வாட்ஸ் உற்சாகம் பளிச்சிடுகிறது.  ஃபகத்துடனான சந்திப்பிலிருந்து...

“நஸ்ரியா நடிக்க வர்றாங்க”

`` `தனி ஒருவன்’ல அர்விந்த் சுவாமிக்குப் பெரிய பிரேக் கொடுத்த கதாபாத்திரம் சித்தார்த் அபிமன்யூ. `வேலைக்காரன்’ அந்த மாதிரி உங்களுக்கு ஒரு என்ட்ரியைக் கொடுக்குமா?’’

``முதல் விஷயம், `தனி ஒருவன்’ படத்துக்கும் `வேலைக்காரன்’ படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ரெண்டும் டோட்டலா வேற வேற கதைகள். `தனி ஒருவனி’ல் சின்னதா ஒரு ட்ராமா இருக்கும். ஆனா, `வேலைக்காரன்’ தினசரி உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்னு ரொம்ப யதார்த்தமா இருக்கும். நான் இதில் வில்லனா இல்லையானு இப்போ எதுவும் சொல்ல முடியாது. படத்துல நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் நடக்கும் விளையாட்டு இருக்கு. அதில் நான் எந்தப் பக்கம்னு இப்போ சொல்லிட்டேன்னா, சுவாரஸியம் இருக்காது.’’

``சிவகார்த்திகேயன், நயன்தாரானு வித்தியாசமான காம்பினேஷனுடன் சேர்ந்திருக்கீங்களே?’’

``சிவாகூட நடிச்சது, என்னுடைய ஒரு நல்ல ஃப்ரெண்ட்கூட ஜாலியா ஒரு ஹாலிடே ட்ரிப் போயிட்டு வந்தது மாதிரிதான் இருந்தது. சிவா ரொம்ப ஜாலியான ஆள் மட்டுமல்ல, ரொம்ப ரொம்ப நல்ல மனிதரும்கூட. நல்லவங்க உங்களைச்சுற்றி இருக்கும்போது நல்ல விஷயங்கள் மட்டும்தான் நடக்கும். அந்த மாதிரிதான் இந்தப் படத்தில் நடந்த  விஷயங்களும். தமிழ் வசனம் பேசி நடிக்கிறப்போ, சில இடங்களில் தடுமாறும். சிவாதான் அதைச் சரியா பேசச் சொல்லிக்கொடுப்பார். `சரி, நமக்கு ஹெல்ப் பண்றார்’னு பார்த்திட்டே இருக்கும்போது, டக்குனு நம்மை மாதிரியே இமிடேட் பண்ணி, ஜாலியா ஒரு கலாய் கலாய்ப்பார். 

நயன்தாராவும் நானும் ஒரே படத்தில் நடிக்கிறது இதுதான் முதன்முறை. அப்பாவுடைய இயக்கத்தில் அவங்க நடிச்சுருக்காங்க. இப்போ தமிழ்ல நான் அறிமுகமாகும் படத்தில் அவங்களும் இருக்கிறது ரொம்பச் சந்தோஷமா இருக்கு. சிவா - நயன்தாரானு மட்டுமல்ல, `வேலைக்காரன்’ படத்தின் மொத்த டீமும் சேர்ந்தே பெரிய எனர்ஜி கொடுக்கும். ஒருத்தர் மிஸ்ஸானாலும் அந்த எனர்ஜி குறைந்த மாதிரி இருக்கும். அப்படி ஒரு டீம் வொர்க் இது.’’

“நஸ்ரியா நடிக்க வர்றாங்க”

``மோகன் ராஜாவுடைய இயக்கத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?’’

``ஷாட் தொடங்கும் முன்னால நம்மகிட்ட  மூணுவிதமான ஆப்ஷன்களைக் கொடுப்பார். `இது மாதிரி பண்ணலாமா... அந்த மாதிரி வெச்சுக்கலாமா?’னு ஏதாவது மெருகேத்திக்கிட்டே இருப்பார். எனக்கு என்ன பிரச்னைன்னா, அவர் சொல்லும் அத்தனை ஆப்ஷன்களும் நல்லா இருக்கும். அதிலிருந்து எதைத் தேர்ந்தெடுக்கிறதுங்கிறதுதான் சிக்கலே.  இப்படித் தீவிரமா வேலை செய்யும் இயக்குநரை நான் பார்த்ததில்லை. பேச ஆரம்பிச்சாலே பாசிட்டிவ்வா மட்டும்தான் பேசுவார். நாம கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தா, அவர்கிட்ட ரெண்டு நிமிஷம் பேசினாப் போதும். புதுசாப் பிறந்தது மாதிரி உற்சாகமா இருக்கும். ராஜா இஸ் அமேஸிங்.’’

“நஸ்ரியா நடிக்க வர்றாங்க”``தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பீங்களா?’’

``சிவாகூட `வேலைக்காரன்’ மாதிரி விஜய் சேதுபதிகூடவும் நடிச்சுட்டிருக்கேன். தியாகராஜன் குமாரராஜாவின் பக்காவான படம். தமிழ்ல நிறைய திறமைசாலிகள் இருக்காங்க. டைம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ்ப் படங்கள் பார்த்துக்கிட்டே இருக்கேன். சமீபத்தில் பார்த்ததில் `விசாரணை’ படம் என்னை மிரளவைத்தது. 20 முறைக்குமேல் பார்த்துட்டேன். நிறைய நல்ல விஷயங்கள் தமிழ் சினிமாவுல நடக்குது. அதில் நானும் பங்குபெற விரும்புறேன். ஆனா, அதைத் தொடர்வது இந்தப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தது.’’

``நஸ்ரியா எப்படி இருக்காங்க?’’

``ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்காங்க. நான் தமிழ்ல நடிக்கிறதில் அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். கூடவே அவங்களும் மலையாளத்தில் மறுபடி நடிக்கிறதுக்காகத் தயாராகிட்டிருக்காங்க.’’