Published:Updated:

பொதுவாக எம்மனசு தங்கம் - சினிமா விமர்சனம்

பொதுவாக எம்மனசு தங்கம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
பொதுவாக எம்மனசு தங்கம் - சினிமா விமர்சனம்

பொதுவாக எம்மனசு தங்கம் - சினிமா விமர்சனம்

பொதுவாக எம்மனசு தங்கம் - சினிமா விமர்சனம்

பொதுவாக எம்மனசு தங்கம் - சினிமா விமர்சனம்

Published:Updated:
பொதுவாக எம்மனசு தங்கம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
பொதுவாக எம்மனசு தங்கம் - சினிமா விமர்சனம்

ந்த முறை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் உதயநிதி ஸ்டாலின். செயலாளர் அதே சூரி. சிம்பிளான கதை, சிரிக்கவைக்க முயலும் திரைக்கதை, ஊதாப்பூ கலர் சட்டை, பஞ்சு மிட்டாய் கலர் தாவணி என்று மற்றொரு படம் `பொதுவாக எம்மனசு தங்கம்’.

பொதுவாக எம்மனசு தங்கம் - சினிமா விமர்சனம்

சின்னதாய் முறுக்கிய மீசை, கண்ணைப் பறிக்கும் கலர்களில் சட்டை, அந்தச் சட்டைக்கு மேட்சாக வேட்டி என ஊருக்குள் வெட்டியாய்ச் சுற்றும் கதாபாத்திரம் உதயநிதிக்கு. நடிப்புக்கு அவ்வளவாக வேலை இல்லை என்பதால், அதில் சரியாகப் பொருந்தியும் போகிறார். நடனத்தில் நல்ல முன்னேற்றம்; நடிப்பிலும் அது நடக்கும் என நம்புவோம். `டயர்ல விழுந்து கும்பிடாதீங்கடா’ என ஆங்காங்கே அரசியல் ஒரண்டை இழுக்கிறார்.

உதயநிதியின் கூடவே இருந்து லந்து பண்ணும் கதாபாத்திரம் சூரிக்கு. இந்தக் கதாபாத்திரத்தைப் பத்தாயிரத்து பத்தொன்பதாவது முறையாக ஏற்று நடித்திருப்பதால், குறை ஒன்றும் இல்லை. வழக்கம்போல் பத்துக் காட்சிகளுக்கு நான்கு காட்சிகள் விகிதத்தில் சிரிக்க வைக்கிறார்.

பொதுவாக எம்மனசு தங்கம் - சினிமா விமர்சனம்


இந்த மாதிரிப் படங்களில் கதாநாயகிகளுக்கு என்ன வேலையோ, அதே வேலைதான் நிவேதா பெத்துராஜுக்கும். படத்தையே பாகுபலி மாதிரி தூக்கிச் சுமந்திருக்கிறார்கள் பார்த்திபனும்,மயில்சாமியும். `காது குத்தவரும்போது... குத்திக் காட்டிப் பேசுவேன்’, `மூடி திறந்திருக்கு பாரு, மூடிட்டு நில்லு’ எனப் பார்த்திபன் எது பேசினாலும் புதுசாக இருக்கிறது. பார்த்திபனிடம் சீரியல் பல்புகளாய் வாங்குவதாகட்டும், ஒருமுறை பார்த்திபனையே திரும்பக் கலாய்த்து வாங்கிக் கட்டிக்கொள்வதாகட்டும், கலக்கியிருக்கிறார் மயில்சாமி.

பாடல் காட்சிகளில் வரும் ஒவ்வொரு ஃப்ரேமையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வால்பேப்பராக வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு கலர்ஃபுல். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்முக்கும், கலரிஸ்ட்டுக்கும் ஒரு கலர்ஃபுல் பொக்கே. டெக்னிக்கலாக படம் சுத்தமாக இருந்தாலும், பார்க்கையில் நினைவுக்கு வரும் பல படங்களின் சாயல்கள்தான் கறுப்புச் சாயத்தைத் தூவிச் செல்கின்றன. நடை, உடை, இடம், இசையில் ஆரம்பித்து போஸ்டர் டிசைனிங் வரை அம்புட்டும் க்ளிஷே. அதுதான் படத்தின் பெரும் பலவீனம். ஆனாலும், படத்தில் சூரி செய்யும் சில அலப்பறைகளும், பார்த்திபனின் ஒன்லைனர்களும் `பொதுவாக எம்மனசு தங்க’த்திற்கு வெள்ளிப் பதக்கம்  வாங்கித் தருகின்றன. அதுவும் இல்லைனா, வெங்ககலக் கிண்ணம்கூட கிடைச்சுருக்காது.

- விகடன் விமர்சனக் குழு