Published:Updated:

வேலையில்லா பட்டதாரி 2 - சினிமா விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி 2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
வேலையில்லா பட்டதாரி 2 - சினிமா விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி 2 - சினிமா விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி 2 - சினிமா விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி 2 - சினிமா விமர்சனம்

Published:Updated:
வேலையில்லா பட்டதாரி 2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
வேலையில்லா பட்டதாரி 2 - சினிமா விமர்சனம்

‘வேலையில்லா பட்டதாரி’யாக இருந்து ‘வேலை கிடைத்த பட்டதாரி’ ஆகி ஒரு கார்ப்பரேட்டின் சதியால் மீண்டும் ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகும் கதையே `விஐபி-2’.

முதல் பாகத்தில் மாஸ் காட்டிய ரகுவரன், இரண்டாம் பாகத்தில் மளிகைக்கடைக்குச் சென்றுவரும் பொறுப்பான குடும்பத் தலைவன்.  முதல் பாகத்தில் கட்டடம் கட்ட தனுஷ் போராடுவார். இதில் தீம் பார்க் ஒன்று கட்டப்படுவதைத் தடுக்கப் போராடுகிறார். அதில் ரகுவரனை `ஊதுங்கடா சங்கு’ என சமுத்திரகனி புலம்பவைத்தார். இதில் `உச்சத்துல கத்துறேனே நானும்’ என அமலா பால் புலம்பவைக்கிறார். அவ்வளவுதான் `விஐபி’ முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் கதை, திரைக்கதை, கதாபாத்திரங்களில் உள்ள வித்தியாசங்கள். மற்றபடி அதே பக்கம் பக்கமான வசனங்கள், குபுகுபு சிகரெட்டுகள், ஸ்லோமோஷன் நடை, அமுல்பேபியின் வில்லத்தனம், தங்கபுஷ்பம் காமெடி என அனைத்தும் அதே டெய்லர், அதே வாடகை.

வேலையில்லா பட்டதாரி 2 - சினிமா விமர்சனம்

திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பவர் செளந்தர்யா ரஜினிகாந்த். முதல் பாகத்தில் இருந்த வலுவான திரைக்கதை `விஐபி-2’வில் முழுக்கவே மிஸ்ஸிங். 

ஓவர் மாஸ் காட்ட வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் தனுஷ். இடையிடையே அவர் சொல்லும் திருக்குறள்கள் ரசிக்கவைத்தாலும், மனைவி, மாமியாரைக் கிண்டல் அடிப்பதும், அவர்களுக்கு அட்வைஸ் கொடுப்பதும் என டார்ச்சர் செய்கிறார்.  இன்னும் எத்தனை படங்களுக்குத்தான் அதே `மன்னன்’ ஃபார்முலா ப்ரோ!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கம்பெனியின் உரிமை யாளராக வருகிறார் கஜோல். ஆனால், அவரை வைத்து கெக்கேபிக்கே ஆட்டம் ஆடியிருக்கிறது `விஐபி 2’ டீம்.  கஜோலுக்கு ஆழ்ந்த நன்றிகள்.

வேலையில்லா பட்டதாரி 2 - சினிமா விமர்சனம் `விஐபி’யில் சின்னதாக ஸ்பார்க் அடித்த பல விஷயங்களை, இதில் மீண்டும் செய்கிறேன் என ஓவர்டோஸாகப் பயன்படுத்தி ஃப்யூஸ் போக வைத்து விட்டார்கள். மசாலாப் படங்களில் கிளைமாக்ஸில் வரும் வழக்கமான ஃபைட் இல்லை என்பதும், தனுஷ் தனது சிக்ஸ்பேக்கைக் காட்டவில்லை என்பதும் மட்டுமே இதில் ஆறுதல்.

சண்டைக் காட்சிகளில் கிடைத்த கேப்பில் எல்லாம் சுற்றிச் சுழன்றிருக்கிறது சமீர் தாஹிரின் கேமரா. `விஐபி’ என்றவுடன் அனிருத்தின் ஹைபிட்ச் குரல்தான் நம் நினைவுக்கு வந்துபோகும். அதனாலேயே ஷான் ரோல்டனின் இசை நன்றாகவே இருந்தாலும் தனித்துக் கேட்கவில்லை. படத்தில் `உங்ககிட்ட இருக்கிறதெல்லாம் காசு, எப்படியும் கரைஞ்சுடும். ஆனா, இது மாஸ், எப்பவும் கூடவே இருக்கும்’ என வசனம் பேசுவார் தனுஷ். இந்தப் படமோ இரண்டையுமே வெட்டியாய்க் கரைத்துவிட்டது.

`பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்’

விளக்கம்: மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் இறகினை அளவுக்கு மீறி அதிகமாக ஏற்றினால், அச்சு முறியும்.

 படம் முழுக்க நிறைய திருக்குறள்களைச் சொல்லும் தனுஷுக்கு இந்தக் குறள் சமர்ப்பணம்!

- விகடன் விமர்சனக் குழு