Published:Updated:

உலக நாயகிகள்!

உலக நாயகிகள்!
பிரீமியம் ஸ்டோரி
உலக நாயகிகள்!

பா.ஜான்ஸன்

உலக நாயகிகள்!

பா.ஜான்ஸன்

Published:Updated:
உலக நாயகிகள்!
பிரீமியம் ஸ்டோரி
உலக நாயகிகள்!

ன்ட்ராய்ட் மட்டுமல்ல ஹாலிவுட்டில் டாப் ஹீரோயின்ஸ் பட்டியல் கூட அப்டேட் ஆகிக்கொண்டே  இருக்கும். இந்த வருடமும் சென்ற வருடமும் கவர்ந்த ஹீரோயின்கள், சில ஆச்சர்ய வரவுகள் எனக் கலவையாக நீள்கிறது சமீபத்திய பட்டியல். அப்படிப்பட்ட சீனியர்- ஜூனியர்களின் அப்டேட் இங்கே...

உலக நாயகிகள்!

ஜெனிஃபர் லாரன்ஸ் Jeniffer Lawrance

`ஹங்கர் கேம்ஸ்’ இரண்டு பாகங்கள், `ஜாய்’, `பேசஞ்சர்ஸ்’ என வரிசையாகப் படங்கள் மிக்ஸட் ரிவியூஸ் வந்தாலும் ஜெனிஃபர் லாரன்ஸ் தன் நடிப்புக்கான வரவேற்பை அப்படியே தக்கவைத்துக்கொண்டே இருக்கிறார். டேரன் ஆர்னோவ்ஸ்கி இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் `மதர்’ பட ட்ரெய்லருக்கே நிறைய பாராட்டுகள் குவிந்திருக்கின்றன. `பெரிய ஹீரோயினாக்கும் சோலோவாதான் நடிப்பேன்’ என இல்லாமல், `ரெட் ஸ்பேரோ’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்திலும், `எக்ஸ்மேன்: டார்க் ஃபீனிக்ஸ்’ படத்தில் துணைக் கதாபாத்திரமாகவும் தொடர்ந்துகொண்டிருக்கிறார் ஜெனி!

உலக நாயகிகள்!

காரா டெலிவிங்னே Cara Delevingne

`வலெரியன்’ படம் ரிலீஸ் ஆகி, நல்ல ரீச். அதன் பிறகு `துலிப் ஃபீவர்’, `லண்டன் ஃபில்ட்ஸ்’ இரண்டிலும் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டு, சின்ன பிரேக் எடுத்திருக்கிறார். இப்போது செம ஃப்ரீ என்பதால், நியூடு மாடலிங் பெயின்ட்டிங்கை ஆர்வமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். காராவின் ரீ என்ட்ரிக்காக ஹாலிவுட் வெயிட்டிங்!

உலக நாயகிகள்!

எம்மா ஸ்டோன் Emma Stone

உலக நாயகிகள்!இந்த வருடம் எம்மாவின் படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், `சென்ற வருடம் வெளியான `லா லா லேண்ட்’ படத்தில் `எம்மாவின் பெர்ஃபாமென்ஸ் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது’ எனச் சிலிர்க்கிறார்கள் ரசிகர்கள். அதற்கான ஆஸ்கர் விருதும் வென்றவர் என்பதால், அவரின் கரியர் கிராஃப் உச்சத்தில்தான் இருக்கிறது. அதனால் செப்டம்பரில் வெளியாகவிருக்கும் `பேட்டல் ஆஃப் தி செக்சஸ்’ படத்துக்கு இப்போதிருந்தே தவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் விசிறிகள். எம்மாவோ, இப்போது `தி ஃபேவரைட்’ பட ஷூட்டிங்கில் பிஸி!

உலக நாயகிகள்!

சோஃபியா பௌடெல்லா Sofia Boutella

டாம் க்ரூஸுக்கே டஃப் கொடுத்த சோஃபியாவும் டாப் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார். `மம்மி’ படம் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றாலும் மம்மியாக நடித்த சோஃபியாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இப்போது சின்னத்திரை ரசிகர்களையும் ஈர்க்க `ஃபாரன்ஹீட் 451’ சீரிஸில் நடித்துக்கொண்டிருக்கிறார். கூடவே, `மிஷன் இம்பாசிபிள்; ரோக் நேஷன்’ படக் கதாசிரியர் இயக்கும் `ஹோட்டல் அர்டிம்ஸ்’  படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார் சோஃபியா!

உலக நாயகிகள்!

கேல் கடோட் Gal Gadot

இப்போ கேல் கடோட்தான் ஹாலிவுட்டின் டாப்.  காரணம், இவர் முதன்முதலில் மெயின் லீடாக நடித்த படத்தின் அதிரடி வெற்றிதான். `ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்தின் சில பாகங்கள், `நைட் அண்ட் டே’, `டிரிப்பிள் 9’, `பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்’ எனப் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருந்தார் கேல். அந்த நேரத்தில் `வொண்டர் வுமன்’ கதாபாத்திரத்தை மையமாக வைத்துப் படமாக்க முடிவெடுக்கிறது டிசி காமிக்ஸ். இஸ்ரேலைச் சேர்ந்த கேல் கடோட்,  ஹாலிவுட்டில் `வொண்டர் வுமனாக’ அசத்த, பாக்ஸ் ஆபீஸ் அதிரும் அளவுக்கு கலெக்‌ஷனை அள்ளியது. விரைவில் வரவிருக்கும் `ஜஸ்டிஸ் லீக்’, `வொண்டர் வுமன் - 2’ என அடுத்தடுத்த படங்கள் மூலமாகவும் அட்டகாசம் செய்யக் காத்திருக்கிறார் கேல் கடோட்!

உலக நாயகிகள்!

எம்மா வாட்சன் Emma Watson

இந்த வருடம் வெளியான `பியூட்டி அண்ட் தி பீஸ்ட்’, `தி சர்க்கிள்’ இரண்டு படங்கள் மூலம் தனது இருப்பைத் பதிவுசெய்தார் எம்மா வாட்சன். `பியூட்டி அண்ட் பீஸ்ட்ஸ்’ படம் எம்மாவுக்குப் பெரிய பூஸ்ட். படங்கள் மூலமாக மட்டுமல்ல, தொடர்ந்து பெண் உரிமைகளுக்காகக்  குரல்  கொடுத்துவருபவர் என்கிற அடையாளமும் எம்மாவை ரசிகர்களிடத்தில் இன்னும் நெருக்கமாகக் கொண்டுசேர்த்திருக்கிறது. அடுத்து நடிப்பதற்கு கைவசம் எந்தப் படமும் இல்லை. ஆனால், எம்மாவின் கவலையெல்லாம் தன் அம்மா, பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த மோதிரம் தொலைந்துவிட்டதைப் பற்றித்தான்!

உலக நாயகிகள்!

சார்லிஸ் தெரோன் Charlize Theron

`மேட்மேக்ஸ் ஃபியூரி ரோட்’, `த ஹன்ட்ஸ்மென்: விண்டர்ஸ் வார்’ இரண்டும் பெரிய ஹிட் , `லாஸ்ட் ஃபேஸ்’ மட்டும் ஃப்ளாப் என இருந்த சார்லிஸ் தெரோனின் ட்ராக் லிஸ்ட்டில் மறுபடி ஒரு ஹிட் `அடாமிக் ப்ளான்ட்’ படத்தால் இணைந்திருக்கிறது. படத்தில் ஆக்‌ஷனில் அதிரடி காட்ட, மறுபடி சார்லிஸை ஃப்ரெஷ்ஷாக ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இப்போது ஆக்‌ஷன் காண்பித்தவர் அடுத்து நடித்துக்கொண்டிருப்பது ஒரு காமெடிப் படத்தில். சார்லிஸின் காமெடி வெடியான `துலி’ 2018 ரிலீஸ்.

உலக நாயகிகள்!

ஸ்கார்லட் ஜோஹன்சன் Scarlatt Johanson

`கோஸ்ட் இன் தி ஷெல்’, `ரஃப் நைட்’ என இந்த  வருடம் ஸ்கார்லெட் நடித்து வெளியானவை இரண்டு படங்கள்தான். இனி இந்த வருடம் முழுக்க எந்தப் படமும் கிடையாது. அடுத்த வருடமும் ஸ்கார்லெட் நடிப்பில் வெளியாக இருப்பது `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ படம் மட்டுமே. அதிலும் குட்டியூண்டு ரோல்தான். ஆனாலும், இவர்தான் லீடிங்! காரணம் ஸ்கார்லெட்டுக்காக வெறித்தனமான காத்திருக்கும் அகில உலக ரசிகர்கள்!  

உலக நாயகிகள்!

எமிலியா க்ளார்க் Emilia Clarke

திரைப்படங்களைவிட `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ போராளிகளுக்கு எமிலியா க்ளார்க் பயங்கரப் பரிச்சயம். `வாய்ஸ் ஃப்ரம் த ஸ்டோன்’, `அபோ சஸ்பிக்‌ஷன்’ இரண்டு படங்களிலும் லீட் ரோல். படங்கள் சுமாரான ரிவ்யூஸ் பெற்றாலும் எமிலியாவின் நடிப்பு, பரவலாக எல்லோரையும் கவர்ந்தது. படம் இல்லை என்றால் என்ன, இருக்கவே இருக்கிறது `ஜி ஓ டி’. ஆறு சீஸன்கள் முடிந்து ஏழாவது சீஸனிலும் அசத்திக்கொண்டிருக்கிறார் எமி.

உலக நாயகிகள்!

அலெக்ஸான்ரா டடாரியோ Alexandra Daddario

`சான் ஆண்டர்ஸ்’ படத்தில் ட்வைன் ஜான்சனுக்கு மகள், `தி சாய்ஸ்’, `பே வாட்ச்’  படங்களில் துணைக் கதாபாத்திரம் என, சில வருடங்களாகவே சைடு ரோலில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு `தி லே ஒவர்’ படம்  மூலம்  மெயின் லீட் ரோல் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து தனது நடிப்பால் கவர்ந்துவருபவருக்கு, இந்த வருடம் முழுக்க பேக் டு பேக் ஷூட்டிங்தான். எல்லா படங்களிலும் அம்மணியின் பர்ஃபாமென்ஸ் அள்ளுமாம்!