பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

ஜோக்ஸ் - 2

 ​“தலைவர் சின்ன குழந்தைமாதிரின்னு எப்படி சொல்றே?’’

``கொடி ஏத்தினவுடனே மிட்டாய்க்கு அடிச்சிகிறாரே!’’

-லெட்சுமி மணிவண்ணன்

ஜோக்ஸ் - 2

“மன்னா நம் தளபதி 100 அணு குண்டு வச்சிருக்கோம்னு சொன்னதை நம்பி போர் அறிவிச்சது தப்பா போச்சு!’’

“என்னாச்சு அமைச்சரே?”

“அத்தனையும் தீபாவளிக்கு போடற அணு குண்டுகளாம்!”

-ஆ.நல்லமுத்து

ஜோக்ஸ் - 2

“தலைவர் பிக்பாஸ் வெறியராவே மாறிட்டார்”

“எதைவச்சு சொல்ற?”

“குழந்தைகளுக்கு பெயர் வைக்கச் சொன்னா ஆரவ், ஓவியான்னு வைக்கிறார்!”

-வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 2

“தலைவரை தொண்டர்கள் மறந்துவிட வேண்டாம். மீண்டும் அவரை கலாய்த்து அதிகபட்ச மீம்ஸ் போடும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்!’’

-பெ.பாண்டியன்