Published:Updated:

"சினிமாவை விட்டே போயிடலாம்னு நினைச்சேன்!”

"சினிமாவை விட்டே போயிடலாம்னு நினைச்சேன்!”
பிரீமியம் ஸ்டோரி
"சினிமாவை விட்டே போயிடலாம்னு நினைச்சேன்!”

வினோ

"சினிமாவை விட்டே போயிடலாம்னு நினைச்சேன்!”

வினோ

Published:Updated:
"சினிமாவை விட்டே போயிடலாம்னு நினைச்சேன்!”
பிரீமியம் ஸ்டோரி
"சினிமாவை விட்டே போயிடலாம்னு நினைச்சேன்!”

``ஹலோ நான் ரொம்ப இன்டலெக்சுவல்லாம் இல்லைங்க... நானும் சாதாரண நடிகைதான், நம்புங்க. கொழுக்கட்டை சாப்பிடுவேன், இஞ்சி டீ குடிப்பேன். நிறைய கலாய்ப்பேன்’’  இயக்குநர் ராமின் அலுவலக லைப்ரரியில் தமிழ் இலக்கியங்கள் சூழ, தமிழை நன்றாகப் படிக்கவும் பேசவும் தெரிந்த ஒரு நாயகியோடு உரையாட உட்கார்ந்தேன். பேசவே விடாமல் தொடர்ச்சியாகப்  பாராட்டு அழைப்புகள். ``ரஜினி சார்கூட கூப்பிட்டுப் பாராட்டினார்’’ எனக் கண் சிமிட்டுகிறார் தரமணியின் ஆல்தியா ஜோசப். இல்லை இல்லை...ஆண்ட்ரியா ஜெரமியா!

``தரமணியோட நாலு வருஷம்....பல வருஷக் காத்திருப்பு இல்லையா, இப்போ எப்படி இருக்கு?’’

‘`ஒரு நடிகையோட கரியரே மொத்தம் நாலு வருஷம்தான். அந்த நாலு வருஷத்தையும் மொத்தமா `தரமணி’க்கே கொடுத்திட்டேன். என்னைப்போல ஒரு நடிகைக்கு இளமையான இந்த நாலு வருஷங்கள் ரொம்ப முக்கியமானவை. நீண்ட காலம்... பெரிய காத்திருப்பு... அந்தக் காலகட்டத்தில் என்னால அடுத்தடுத்து முன்னேற முடியலை. ஒரே இடத்தில் தேங்கி இருக்க வேண்டியதாக இருந்தது. என்னுடைய வளர்ச்சி தடைபட்டுச்சு. காசு விஷயத்துல இல்லை... எனக்கு நல்லா பாடவரும். நான் அதை வெச்சு என்னோட வாடகை, பில்லெல்லாம் கட்டிடுவேன். இது என்னோட கரியர் சம்பந்தப்பட்டது. ஏன்னா, அவ்வளவு ஃப்ரெஸ்ட்ரேஷன். இனி இந்த சினிமாவே வேண்டாம், எல்லாத்தையும் விட்டுட்டுப் போயிடலாம்னுகூட நினைச்சுருக்கேன். ஆனா பொறுமையாக் காத்துட்டு இருந்தேன். எல்லாம் `தரமணி’க்காக.’’ 

"சினிமாவை விட்டே போயிடலாம்னு நினைச்சேன்!”

``இப்போ ஆண்ட்ரியா ஹேப்பியா?’’

‘`ஹேப்பியான்னு கேட்டா, சொல்லத் தெரியலை. ஆனா, அப்பாடானு ஒரு பெரிய ரிலீஃபா இருக்கு. ரொம்பவே திருப்தியா ஃபீல் பண்றேன். இந்தப் படம் என்னுடைய வாழ்க்கையை மாற்றப்போகிற படம்னு சொல்லிக்கிட்டே இருந்தேன். நிச்சயமா இப்போ என் வாழ்க்கை மாறப்போகுதுனு நம்புறேன்.’’

``ஆல்தியா ரொம்ப டஃப்பான கேரக்டர்... கஷ்டப்பட்டு நடிச்சிருப்பீங்க போலருக்கே?’’

``இது டஃப்பான கேரக்டர்லாம் இல்லைங்க... ஏன்னா, ராம் சார் என்னோட பாடி லேங்வேஜ் பார்த்து அதுக்கு ஏற்ற மாதிரிதான் காட்சிகளையே அமைச்சார். ஆனா, `வடசென்னை’ மாதிரியான ஒரு படம்தான் எனக்குப் பெரிய சவாலா இருக்கு. அது வேற மாதிரியான கதாபாத்திரம். அதைச் செய்யத்தான் போராடிக்கிட்டிருக்கேன்.

ஆல்தியா ஈஸியா பண்ணிட்டேன்னுதான் சொல்வேன். ஆனா, இந்தப் படத்துல பல சீன்ஸ் ஷுட் பண்ணும்போது எமோஷனலா கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஏன்னா, எல்லா பெண்களும் வாழ்க்கையில இந்தப் படத்துல காட்டப்படுகிற மாதிரித் தருணங்களை நிறைய கடந்திருப்பாங்க. நானும் கடந்திருக்கேன். அதை ஷூட் பண்ணும்போது அது நம்மை அப்படியே அந்த மோசமான நினைவுகளுக்கு எடுத்துட்டுப் போகும். அப்பல்லாம் ராம் சார் மேலதான் கோபமா வரும். `சார் தினமும் இப்படி க்ளைமாக்ஸ் ஷூட் பண்ற மாதிரி போட்டுக்கொடுமைப்படுத்தறீங்களே’ன்னு சண்டை போடுவேன்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"சினிமாவை விட்டே போயிடலாம்னு நினைச்சேன்!”

``ஆல்தியா மாதிரியே ஆண்ட்ரியாவும் தைரியமான பெண்ணா?’’

``அய்யய்யோ,  ஆல்தியா மாதிரிலாம் எனக்குத் தைரியம் கிடையாதுங்க. அவ்ளோ தைரியம் இருந்தா, நான் வேற மாதிரி இருந்திருப்பேன். யாராவது என்னைக் கிண்டல் பண்ணினா, நான் அந்த இடத்தைவிட்டு ஓடிடுவேன். ஆனா, பெண்கள் ஆல்தியா போலத்தான் இருக்கணும்னு விரும்புறேன். நான் என்னை அப்படி மாத்திக்கணும்னு ட்ரை பண்றேன்.’’

``ஆண்ட்ரியா ஃபெமினிஸ்டா?’’

``முதல்ல `தரமணி’யும் பெண்ணிய படம் இல்லை, நானும் பெண்ணியவாதி இல்லை. நான் ஒரு ஈக்வலிஸ்ட்னு வேணா சொல்லிக்குவேன். `தரமணி’ கூட அப்படிப்பட்ட ஒரு படம்தான். அதனால்தான், நான் அதில் ஆர்வமா நடிச்சேன். எல்லோரும் சமம். எல்லோரும் ஒண்ணுதான்னு நம்புறேன். இந்தப் படமும் அப்படித்தான். அது இரண்டு பேரையும் ஈக்வலா அனலைஸ் பண்ணுதுனுதான் சொல்வேன். இரண்டு பேர் மேல இருக்கிற தப்பு, சரி எல்லாத்தையும் பேசுது.

இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் இருக்கு. பெண்களுக்குக் கிடைச்சிருக்கிற பொருளாதாரச் சுதந்திரம்ங்கிற விஷயம் அவங்க வாழ்க்கையையே மாற்றி அமைச்சிருக்கு. எனக்குத் தெரிஞ்ச அம்மா ஒருத்தங்க வீட்டுவேலை செய்றாங்க. மாசத்துக்கு இருபதாயிரம் சம்பாதிக்கிறாங்க. அவங்க கணவர் குடிகாரர், சண்டை போட்டு அடிச்சு விரட்டிட்டாங்க. தன் குழந்தைகளைத் தானே வளர்க்கிறாங்க. இப்படிப்பட்ட சூழ்நிலையில பெண்களுக்குப் பணத்துக்காக  ஓர் ஆண் தேவையில்லை, பொருள்களுக்காக ஆண் தேவையில்லை, தன் வீட்டுக்காக, பாதுகாப்புக்காக ஓர் ஆண் தேவையில்லை... அவ்வளவு ஏன் அவங்களுக்கு ஆணே தேவையில்லைன்ற நிலைமை உருவாகுது. இதனால ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் ஓர் ஆணைத் தேர்ந்தெடுக்கிறாள் என்றால், அது ப்யூர்லி அவுட் ஆஃப் சாய்ஸ். அதை ஆண்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அதுதான் யதார்த்தம். இந்தப் படம் பார்த்த நிறைய பெண்கள் `ஏய் இதே மாதிரி என் லைஃப்ல நடந்தது’னு சொல்றாங்க. ஏன்னா, இது அவங்க வாழ்க்கை.’’

"சினிமாவை விட்டே போயிடலாம்னு நினைச்சேன்!”

``ஆண்ட்ரியா ரியல் லைஃப்ல இப்படிச் சுதந்திரமான பெண்களை அவங்களோட குணங்களோட அப்படியே ஏற்றுக்கொள்கிற ஆண்களைச் சந்தித்தது உண்டா?’’

``ம்ம்ம்ம்ம்... நிறைய முறை நினைச்சிருக்கேன். இவங்க இப்படில்லாம் இருப்பாங்கனு நம்பியிருக்கேன். ஆனா, எல்லா தடவையும் ஏமாந்திருக்கேன். எனக்கு ஆண்களோட எப்பவும் அதிர்ஷ்டமே இருந்ததில்லை. வெரி அன்லக்கி கேர்ள் நான்.  அதனாலதான், நான் சிங்கிளாவே இருக்கேன்.’’

"சினிமாவை விட்டே போயிடலாம்னு நினைச்சேன்!”

``உங்களோட அடுத்த படங்கள்?’’

``வெற்றிமாறன் சாரோட `வடசென்னை’. ரொம்ப ரொம்ப சேலஞ்சிங்கான ஒரு ரோல். அது என்னன்னு இப்போ சொல்ல மாட்டேன். மிஷ்கின் சாரோட `துப்பறிவாளன்’. அதுல ரொம்ப ஸ்டைலிஷான கேரக்டர். அப்புறம் சித்தார்த்தோட தமிழ்-இந்தி  பைலிங்குவல் படம் பண்றேன். `விஸ்வரூபம் 2’  ரிலீஸூக்காகக் காத்திருக்கேன். அப்புறம் நிறைய புராஜெக்ட்ஸ் பேசிக்கிட்டிருக்கேன். சீக்கிரமே அறிவிப்புகள் வரும்.’’

`` பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லா இடங்களிலும் அதிகரித்திருக்கிறது; சோஷியல் மீடியா உள்பட. சினிமாத்துறைல இது மாதிரியான விஷயங்களை நீங்க எதிர்கொண்டு இருக்கிறீர்களா?’’

``இல்லைங்க... இதுவரை இல்லை. ஆனா சினிமால சம்பளத்துல வித்தியாசங்கள் இருக்கு... வேற மாதிரியான பிரச்னைகள் இருக்கு. `தரமணி’ ரிலீஸுக்கு முன்னாடி ஹீரோயினுக்கு  முக்கியத்துவம் உள்ள படங்கள் எனக்கு நிறைய வந்துச்சு. அந்த ஸ்க்ரிப்ட்ல நான்தான் ஹீரோ. ஆனா, காசு பற்றிப் பேசினா, ‘மேடம், ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட். அதனால சம்பளம் அவ்ளோ கொடுக்க முடியாது’னு சொல்வாங்க. இங்கே ஒரு பெண்ணா எவ்ளோ உழைச்சாலும் ஆணுக்கு இணையான சம்பளம் கிடைக்காது. இது ஈக்வல் இண்டஸ்ட்ரியா இருந்தது இல்லை. ஆனா, இப்போ கொஞ்சம் ஒரளவு மாறிட்டு வருது... அந்த மாற்றம் மகிழ்ச்சியைத் தருது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism