Published:Updated:

தளபதி... தமிழன்... முதல்வன்! - அடேங்கப்பா மெர்சல் அப்டேட்ஸ்!

தளபதி... தமிழன்... முதல்வன்! - அடேங்கப்பா மெர்சல் அப்டேட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
தளபதி... தமிழன்... முதல்வன்! - அடேங்கப்பா மெர்சல் அப்டேட்ஸ்!

நா.சிபிச்சக்கரவர்த்தி, மா.பாண்டியராஜன்

தளபதி... தமிழன்... முதல்வன்! - அடேங்கப்பா மெர்சல் அப்டேட்ஸ்!

நா.சிபிச்சக்கரவர்த்தி, மா.பாண்டியராஜன்

Published:Updated:
தளபதி... தமிழன்... முதல்வன்! - அடேங்கப்பா மெர்சல் அப்டேட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
தளபதி... தமிழன்... முதல்வன்! - அடேங்கப்பா மெர்சல் அப்டேட்ஸ்!

விழா நாயகர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்... ஆனால், அரங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றிச் சுற்றி ஒலித்த ஒரே பெயர் விஜய்... விஜய்... விஜய்!

இளைய தளபதி... `தளபதி’யாக எலிவேட் ஆன பிறகு வெளியாக இருக்கும் முதல் படம் `மெர்சல்’. `இந்த மாற்றம் முன்னேற்றம்... அண்ணாவின் அரசியல் பிரவேசத்துக்கான முதல் ஸ்டெப்’ என ஏற்கெனவே ஹைப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் அவருடைய தம்பிதங்கைகள். அப்படி ஒரு பரபர சூழலில் `மெர்சல்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில்  பிரமாண்டமாக நடத்தியது படக்குழு!

தளபதி... தமிழன்... முதல்வன்! - அடேங்கப்பா மெர்சல் அப்டேட்ஸ்!

எதிர்பார்த்தபடி, இசை வெளியீட்டுவிழா, தளபதிக்கு மகுடம் சூட்ட முயலும் அரசியல் விழாவாகத்தான் நடந்தது. விழாவிலிருந்து சில ஹைலைட்ஸ் மட்டும் இங்கே...

 அரங்கத்துக்கு வரும் வழி நெடுகிலும் விஜய்க்கான வாழ்த்து பேனர்களில் அவ்வளவு ‘அரசியல்’. எல்லாமே அடுத்த முதல்வரே ரேஞ்சில்தான். தமிழ்நாடு முழுக்கவும் இருந்து விஜய்யின் ரசிகர்களைத் திரட்டி வந்திருந்தனர் விழா ஒருங்கிணைப்பாளர்கள்.

 `புலி’ பாடல் வெளியீட்டு விழாவில் டி.ஆர் பண்ணிய சாதனையை இங்கே முறியடித்தார் பார்த்திபன்.  ``விஜய்யோட அப்பாவும் அம்மாவும் சர்ச்சுக்குப் போய் சண்டே மாஸ், கிறிஸ்துமஸ் மாஸ், நியூ இயர் மாஸ்னு நிறைய மாஸ்களுக்குப் போய் வேண்டி வேண்டி, இவ்வளவு மாஸ் உள்ள பிள்ளையைப் பெத்திருக்காங்க’’ என்று ஜாலியாகச் சொல்ல சமந்தா விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். `` `மெர்சல்’ படத்துக்கு, ட்விட்டர்ல ஒரு எமோஜி ரிலீஸ் பண்ணினாங்க. நீங்க வேணா பாருங்க, விஜய்யோட அடுத்த படத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘உலகத்துலேயே சிறந்த CM நீங்கதான்’னு ட்விட் பண்ணுவார். CM-ன்னா Collection Mannarனு அர்த்தம்’’ என்று பொலிட்டிகல் வெடி கொளுத்தினார் பார்த்திபன். 

  சுந்தர்.சி, ``தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் `சங்கமித்ரா’ கதையே விஜய்க்காக எழுதியதுதான்’’ என்றார். மேலும் ``இங்கே எத்தனை வருங்கால எம்.எல்.ஏ-க்கள், எத்தனை வருங்கால எம்.பி-க்கள் வந்திருக்கீங்கனு தெரியலை’’ என்று பேச, தம்பிகள் எல்லாம் உற்சாகக்குரல் கொடுத்து மகிழ்ந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தளபதி... தமிழன்... முதல்வன்! - அடேங்கப்பா மெர்சல் அப்டேட்ஸ்!


 ஆளாளுக்கு இப்படி அரசியல் வெடிகளைப் போட, நான் மட்டும் சும்மாவா என்று எஸ்.ஜே.சூர்யாவும் தன் பங்குக்கு ``ஒரே ஒரு படம்தான் அவருக்காகப் பண்ணேன். நான் எதுக்காகக் கூப்பிட்டாலும் விஜய் சார் வருவார். எனக்கே இவ்வளவு பண்ற விஜய், உங்களுக்காக எவ்வளவு பண்ணுவார். நீங்க காட்டுற இந்த எனர்ஜி எல்லாமே இப்படி, இங்கே சும்மாப் போய்விடக் கூடாது. அது அப்படியே அடுத்து அடுத்துனு வேற மாதிரி... வரணும்” என்று தன் பங்குக்கும் அரசியல் மசாலாவைத் தூவினார்.

 ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பாடல்களை இசையமைத்து பெர்ஃபார்ம் பண்ணினார். கூடவே மைக்கைப் பிடித்தபோது  ``ஆளப்போறான் தமிழன்னு நாங்க சொல்றோம். அதை ரசிகர்கள்தான் நிஜமாக்க வேண்டும்’’ என்று பன்ச் வைத்தார்.

 விழாவுக்கு வெள்ளைவேட்டி, சட்டையில் வந்திருந்த தனுஷ் வழக்கம்போல, `அடக்கம் அமரருள் உய்க்கும்’ ஸ்டைலில் சிலபல வார்த்தைகள் மட்டும் பேசினார்.

 சமீபத்திய மேடைகள் அனைத்திலும் அரசியல் கலந்து பேசிய விஜய் தன்னுடைய மேடையில் அதைத் தவிர்த்துவிட்டுப் பேசினார். ``என்கிட்ட `உங்களைச் சுற்றி இருக்கும் நெகட்டிவிட்டியை எப்படி ஹேண்டில் பண்றீங்க?’னு கேட்பாங்க. அது ரொம்ப சிம்பிள்... நான் இக்னோர் பண்ணிடுவேன். கண்டுக்கவே மாட்டேன். அவங்களும் கத்திக் கத்திப் பார்த்துட்டு டயர்ட் ஆகிடுவாங்க. தேவையில்லாத விஷயங்களுக்கு ரியாக்ட் பண்ணாதீங்க நண்பா. இந்த உலகத்துல நம்மை அவ்வளவு சீக்கிரம் வாழ விட மாட்டாங்க. எல்லா பக்கங்கள்ல இருந்தும் நம்மைப் போட்டு ஒரு வழி பண்ணுவாங்க. அதையெல்லாம் தாண்டித்தான் நாம வந்தாகணும். வேற வழியே இல்லை’’ என்று வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்லி வழியனுப்பி வைத்தார்.

விஜய்ணா சொன்னா சரிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism