
``நேத்து மீட்டிங்ல இடத்துக்குத் தள்ளு முள்ளாயிடுச்சு’’
“மைதானத்துலயா?”
“இல்லை... மேடையில!”
- வி.சகிதாமுருகன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``தலைவர், ஏழைகளின் கனவை நனவாக்குவேன்னு வாக்குக் கொடுத்தார்!”
“என்ன ஆச்சு?”
"ஒரு ஏழையையும் தூங்கவிடலையே!"
- கி.ரவிக்குமார்

``எனக்கு முன்னால் பேசிய தலைவர் 420 அவர்களே...எனக்கு பின்னால் பேசப்போகும் கட்சியின் 144 அவர்களே...மற்றும் பல்வேறு ஜெயில்களில் பல்வேறு நம்பர்களில் கைதியாக இருக்கும் தொண்டர்களே..!”
- கி.ரவிக்குமார்

``நான் கிண்டல் பண்ணதாலே இங்கிலீஷ் வாத்தியார்...”
“சாபம் விட்டுட்டாரா?’’
``இன்ஜினீயராப் போயிடுவேன்னார்!’’
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism