பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

``மாப்பிள்ளைக்கு எதுவுமே தெரியலைனு பொண்ணு சோகமா இருக்கா!”

``பொண்ணுக்கு எப்படி, எல்லாம் தெரிஞ்சதுன்னு மாப்பிள்ளை சோகமா இருக்காராம்!’’

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 3

ட்சி ஆபீஸ்ல சில பேர் கூகுள் மேப்பும் கையுமா அலையறாங்களே..?”

``அவங்கல்லாம், கட்சியோட வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாம்!’’

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 3

``எதுக்கு அயல் மாநிலத்தில் எம்.எல்.ஏ-க்களைத் தங்க வெச்சிருக்கீங்க தலைவரே?’’

``அப்போதானே அந்த மாநில எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்துக் கணக்குச் சொல்லிக்கலாம்!’’

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 3

“ஓட்டப்பந்தய வீரருடன் ஓடிப்போனது தப்பா போச்சுன்னு சொல்றியே, என்னாச்சு?”

``போட்டின்னு நினைச்சு என்னை விட்டுட்டு அவர் வேகமா ஓடிப்போயிட்டார்!"

- கே.அருணாசலம்