
``ஒரு வழியா இணைச்சுட்டாங்க!’’
``அணிகளைச் சொல்றியா?’’
``தனித்தனியா போட்டுக்கிட்டிருந்த மீம்ஸ்களை இப்ப ஒண்ணா போட ஆரம்பிச்சுட்டாங்க தலைவரே!’’
- அம்பை தேவா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“இந்தச் சமயத்தில், தலைவரை இரட்டைக் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கச் சொன்னது தப்பாப் போச்சு!”
“ஏன்... என்ன ஆச்சு?”
`` `ஆன்மா, `ஆத்மா' னு பெயர் வெச்சுட்டார்!’’
- கி.ரவிக்குமார்

``பொண்ண... பாடச் சொல்லுங்க’’
``கொக்கு நெட்ட கொக்கு கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட, ஓடிப் போயிடு... இல்லைனா ஸ்ப்ரே அடிச்சுப் போடுவேன்!’’
- அ.ரியாஸ்

“இவரா உங்கள் மன்னர்?’’
“ம்ஹூம்... மன்னர் மாதிரி..!’’
- ஜெ.மாணிக்கவாசகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism