
“மன்னர் ஏன் வெட்கப்பட்டுக்கிட்டே ஓடி வர்றார்?!”
``துரத்தி வருவது `ஓவியா படை' ஆச்சே!’’
-தே.ராஜாசிங் ஜெயக்குமார்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“வேலைக்காரம்மா திடீர்னு விலகிட்டாங்களா... ஏன்?!”
"வீட்டில் `டாஸ்க்' எதுவும் இல்லாம போர் அடிக்குதாம்!"
-பி.ஜி.பி.இசக்கி

“தலைவரே நீங்க இணைத்தது நதிகளையா?”
``அணிகளைய்யா!’’
-சிவகுமார் நடராஜன்

``நேத்து வந்தது ‘இந்தியப்பேய்’ன்னு எதை வெச்சு சொல்றே?”
``ஆதார் அட்டை வெச்சிருந்தது டாக்டர்!’’
-ஏந்தல் இளங்கோ
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism