Published:Updated:

விவேகம் - சினிமா விமர்சனம்

விவேகம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
விவேகம் - சினிமா விமர்சனம்

விவேகம் - சினிமா விமர்சனம்

விவேகம் - சினிமா விமர்சனம்

விவேகம் - சினிமா விமர்சனம்

Published:Updated:
விவேகம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
விவேகம் - சினிமா விமர்சனம்

`எப்பதான் தல ஹாலிவுட் படத்தில் நடிக்கப்போகிறாரோ...’ என்ற‌ அவர் ரசிகர்களின் அகோரப் பசிக்கு அரை கப் இன்ஸ்டன்ட் நூடுல்ஸாக வந்திருக்கிறது ‘விவேகம்’.

செயற்கை நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தால் உலகத்தையே அழிக்க  நினைக்கிறது நாசகாரக் கும்பல். அதைக் கைப்பற்றிச் செயலிழக்க வைக்கும் முயற்சியில் அஜித் இறங்குகிறார். அவரை துரோகம் துரத்த, அஜித்தே பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்படுகிறார். தன்னையும் நிரூபித்து உலகத்தையும் காப்பாற்ற... ஒரே ஆளாகக்  கிளம்புகிறார். லட்சக்கணக்கான தோட்டாக்கள், ஆயிரக்கணக்கான கத்திகள், வழியெல்லாம் வகைதொகை இல்லாமல் பன்ச் டயலாக்குகள் எனத் துரோகிகளைக் கதறக்கதற கொன்று, வென்று, நின்று ‘தலை விடுதலை’ கீதம் பாடுகிறார் அஜித்.

விவேகம் - சினிமா விமர்சனம்

ஒருபக்கம் எதிரிகளையும் துரோகிகளையும் சுட்டுத்தள்ளுவது, மறுபக்கம் மனைவிக்காக தோசை சுடுவது என்று மெல்லிசான கோட்டின் இரு பக்கங்களிலும்  பயணிக்கும் கதாபாத்திரம் அஜித்துக்கு. ஆக்‌ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளில் அனல் கிளப்பி, ஏ.கே கதாபாத்திரத்தை கச்சிதமான காக்டெய்லாகக் கொடுத்திருக்கிறார். பல ரிஸ்க்கான காட்சிகளில் அவர் சிரமப்பட்டு நடித்திருப்பதை, படம் முடிந்ததும் திரையில் விரியும் காட்சிகளின் மூலம் உணர முடிகிறது.

படத்தில் அஜித்துக்கு  வசனம் மிகக் குறைவு. அவர் பேச வேண்டியதை எல்லாம் விவேக் ஓபராயே பேசிவிடுகிறார். விவேக் ஒபராய் வில்லனா அல்லது அஜித்தின் மக்கள் தொடர்பாளரா எனக் குழப்பமே வருகிறது. ஹீரோயிச படங்களில்  ஹீரோயின்கள் என்ன செய்வார்களோ அதையேதான் காஜல் அகர்வாலும் செய்கிறார். வித்தியாசம் காட்ட வேண்டுமென்பதற்காக இதில் உக்கிரமாக க்ளைமாக்ஸ் ஃபைட்டுக்கு வெறி ஏற்றும் பாடலும் பாடுகிறார். பத்து நிமிடங்களே வந்தாலும் பரபர பட்டாசாக இருக்கிறது அக்‌ஷரா ஹாசனின் நடிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவேகம் - சினிமா விமர்சனம்


இன்டர்நேஷனல் ஸ்பை த்ரில்லர், ஹாலிவுட் தரம் ஆகிய வார்த்தைகளுக்கு நியாயம் செய்திருக்கிறது வெற்றியின் ஒளிப்பதிவு. `விவேகம்’ படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது ரூபனின் படத்தொகுப்பு. இருவரும் ஜோடிபோட்டு, காலோயன் வொடெனிசரோவ் மற்றும் கணேஷின் சண்டைக் காட்சிகளை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அல்பேனியன் கேங்கை ஒற்றை ஆளாக அஜித் அடித்து நொறுக்கும் காட்சியே போதும். மிலனின் கலை இயக்கமும் அவ்வளவு ஹை-டெக்.

ஆக்‌ஷன் காட்சிகளில் ‘வெறியேற... விதிமாற...’’  என்று நாடி நரம்பையெல்லாம் அதிரவைக்கும் அனிருத்தின் இசை, சென்டிமென்ட் காட்சிகளில் ‘‘காதலடா...’’ என்று இதமாக வருடுகிறது.

முந்தைய படங்களின் சாயல் ஒரு சதவிகிதம்கூட வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் சிவா திரைக்கதையில் மொத்தமாகக் கோட்டைவிட்டிருக்கிறார். ஓவர் டெக்னாலஜி மெனக்கெடலும் காட்சிக்குக் காட்சி நம்பகத்தன்மையை ஏற்ற வேண்டுமே என்கிற சிவாவின் பதற்றமும் படத்தை ஏராளமாக பஞ்சராக்கியிருக்கிறது.

விவேகம் - சினிமா விமர்சனம்

தல படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது ஓகே. ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டே. மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் தவிர்த்து எல்லாவற்றையுமே அவ்வளவு அசால்ட்டாய் `எல்லோருமே’ ஹேக் செய்துவிடுகிறார்கள். ‘சர்வதேசத் தீவிரவாதத் தடுப்புப் படை’ என்பது என்ன? அதில் அஜித் ஆபீஸரா? சாதாரண ஊழியரா? இதில் அஜித் ஒரு புத்தகத்தை  எழுதியதாய் வேறு காட்டுகிறார்களே... அது எதற்கு? விவேக் ஓபராய் ஒட்டுமொத்த ‘சர்வதேசத் தீவிரவாதத் தடுப்புப் படை’யையும் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அளவுக்கு அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? கேள்விகள் படம் நெடுகிலும்.

பாலத்தில் நின்று அஜித் ஐந்து நிமிடம் பன்ச் டயலாக் பேசும்வரைத் துப்பாக்கிகளும் ஹெலிகாப்டர்களும் பொறுமை காப்பது, ஒற்றைத்தோட்டா மட்டுமே பாய்ந்ததில் அக்‌ஷரா ஹாசன் ‘லேட் நடாஷா’ ஆகிவிட, அஜித் உடலில் நூற்றுக்கணக்கான தோட்டாக்கள் பாய்ந்தாலும் ஒன்றுமே ஆகாமல் இருப்பது,

தூ....ரத்தில் இருந்தே துப்பாக்கியால் சுட்டு காஜலைக் காப்பாற்றுவது என்று படத்தில் நம் ‘விவேகத்துக்கு’ச் சவால் விடும் காட்சிகள் ஏராளம். இந்தச் சல்லடைகள்தான் திரைக்கதையைச் சல்லிசல்லியாகச் சிதறடித்துப் படம் பார்ப்பவர்களைச் சோதிக்கிறது.

இதையெல்லாம் தாண்டி பிரமாண்டமான காட்சியமைப்புகள், அசரவைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், அஜித்தின் உழைப்பு மாத்திரம்தான் ‘விவேக’த்தை நிமிர வைக்கின்றன.

ஆனால், இதற்காகவெல்லாம் ஒன்ஸ்மோர் சொல்ல முடியாதே நண்பா!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism