Published:Updated:

``தமிழர்களைப் பற்றி மற்றவங்க பேசணும்!’’ - மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்

``தமிழர்களைப் பற்றி மற்றவங்க பேசணும்!’’ - மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்
பிரீமியம் ஸ்டோரி
``தமிழர்களைப் பற்றி மற்றவங்க பேசணும்!’’ - மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்

கே.ஜி.மணிகண்டன், பா.ஜான்ஸன் - படங்கள்: அருண் டைட்டன்

``தமிழர்களைப் பற்றி மற்றவங்க பேசணும்!’’ - மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்

கே.ஜி.மணிகண்டன், பா.ஜான்ஸன் - படங்கள்: அருண் டைட்டன்

Published:Updated:
``தமிழர்களைப் பற்றி மற்றவங்க பேசணும்!’’ - மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்
பிரீமியம் ஸ்டோரி
``தமிழர்களைப் பற்றி மற்றவங்க பேசணும்!’’ - மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்

ஜினியின் ‘2.0’, விஜயின் ‘மெர்சல்’ மஜித் மஜிதியின் ‘பியாண்ட் தி க்ளவுட்ஸ்’, `சங்கமித்ரா’ படங்களின் இசைப் பணிகள், தயாரிப்பாளராக `99 சாங்ஸ்’ படம் எனப் பல பிரமாண்ட வேலைகளின் பரபரப்புகளைத் தாண்டி வேறு ஒரு பரபரப்பிலிருந்தது இசைப்புயல் ரஹ்மானின் கோடம்பாக்க அலுவலகம். அறையின் மூலையில் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ பார்க்கும் கருவி, இன்னொரு மூலையில் வெள்ளை நிற பியானோ, மத்தியிலிருந்த சோபாவைக் கை காட்டி, “ஏன் நிற்கிறீங்க...உட்காருங்க”என்றபடி புன்னகையுடன் வரவேற்கிறார் ரஹ்மான்.

மிக அமைதி, அதிகம் பேச மாட்டார் என நினைத்திருந்தால் பேசும் ஒவ்வொரு பதிலுக்கு இடையிலும் குட்டி ஜோக் சொல்லி சிரித்துக்கொண்டே நீண்டது அந்த உரையாடல். இயக்குநர் அனுபவம், `ஆளப் போறான் தமிழன்’ என எதைக் கேட்டாலும் பதிலுக்கு முன்னால் குட்டிப் புன்னகை ஒன்று வணக்கம் வைத்துக் கொண்டே இருந்தது.

``தமிழர்களைப் பற்றி மற்றவங்க பேசணும்!’’ - மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்

உலகம் முழுக்க மேற்க்கொண்ட இசைப் பயணங்களையும், அங்கே கான்செர்ட்களில் பாடிய பாடல்களையும் தொகுத்து வெளியாகவிருக்கும் ‘ஒன் ஹார்ட்’ பற்றி விவரிக்க ஆரம்பிக்கும் போது, இப்போதுதான் தன் முதல் படம் வெளியாகப் போவது போன்ற பரவசம், துறுதுறுப்பு ரஹ்மானின் ஒவ்வொரு வார்த்தையிலும்.

“வாழ்க்கையில இந்த நொடி திரும்ப வராது;  ஒரு போட்டோ எடுத்து வெச்சுப்போம்னு நினைப்போமே... அப்படி ஒரு தருணத்தைப் பதிவு பண்ணணும்னு தோணுச்சு. ஏன்னா, சின்ன வயசுல ஒரு போட்டோ எடுத்திருப்போம். பல வருடம் கழிச்சு அதைப் பார்க்கும்போது நாம அப்படியே இருக்க மாட்டோம்.  நம்ம முடி நரைச்சுப் போயிருக்கலாம், முகத்துல சுருக்கம் விழுந்திருக்கலாம்... சுருக்கமா சொன்னா வேற மாதிரி இருப்போம். இதை ஆவணப்படுத்தினா எப்படி இருக்குமோ, அது மாதிரிதான் ‘ஒன் ஹார்ட்’ படம்.  படத்தைப் போட்டுக் காட்டினோம். ‘அழுகை வந்துடுச்சு’, ‘போர் அடிக்கலை’, ‘சூப்பரா இருக்கு’, ‘இன்ட்ரஸ்டிங்கான முயற்சி’ இப்படியெல்லாம் கருத்துச் சொன்னாங்க. கூடவே, ‘தியேட்டர்ல ரிலீஸ் பண்ணலாமே’ன்னும் சொன்னாங்க. சரி... இது மூலமா கிடைக்கிற பணத்தை ‘ஒன் ஹார்ட்’ அறக்கட்டளைக்குப் பயன்படட்டும்னு ரிலீஸுக்கு ரெடி ஆகிட்டோம்.”

``கான்செர்ட் ஃபிலிம்ங்கிறது புதுசா இருக்கே?’’

``மைக்கேல் ஜாக்சனுடைய ‘திஸ் இஸ் இட்’ கொஞ்சம் இந்த டைப்ல இருக்கும்னு சொல்லலாம். பல பிரபலமான இயக்குநர்கள் இந்த முயற்சியைப் பண்ணியிருக்காங்க. இந்தியாவுல இது முதன்முறை. இப்படி ஒரு படம் பண்ணலாம்னு 2015-ல முடிவு பண்ணி ஷூட் பண்ணத் தொடங்கினோம். என் மியூஸிக் அனுபவங்கள், சில பெர்சனல் ஃபுட்டேஜஸ், என் இசைக்குழுவுல இருக்கிறவங்களோட அனுபவம்னு எல்லாம் இருக்கும். மியூஸிக் பண்ணும்போது அந்தச் சூழல் எப்படி இருந்தது, என் மைண்ட்ல என்ன தோணுச்சு, எல்லாமே ‘ஒன் ஹார்ட்’ல இருக்கு. ஆடியன்ஸ் கையைப் பிடிச்சு, என்கூட இசைப்பயணத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனா, எப்படி இருக்கும்? அதுதான் இந்தப் படம். தமிழ், இந்தி, பஞ்சாபி, இங்கிலீஷ்னு பல மொழிகளில் ரிலீஸ் ஆகுது. இது சினிமா கிடையாது, மறக்க முடியாத ஒரு மியூஸிகல் எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்.’’

“உலகம் முழுக்க நிறைய இசைக்கலைஞர்களை சந்தித்த அனுபவம் எப்படி இருந்தது?”

‘`இட்ஸ் எ குட் ஃபீலிங்! ரஞ்சித் பரோட்டோட 94-ல இருந்து டிராவல் பண்றேன். ட்ரம்ஸ் சிவமணிகிட்ட 83-ல இருந்து வொர்க் பண்றேன். ரெண்டுபேரும் டிரம்மர்ல இருந்து கம்போஸர் ஆகி, கம்போஸர்ல இருந்து ப்ரொடியூஸர் ஆகிட்டாங்க. பேஸ் கிடாரிஸ்ட் மோகினி டேவை ‘ஒன் ஆஃப் தி பெஸ்ட் பேசிஸ்ட்’னு சொல்றாங்க. இந்த மாதிரி ஆட்களோட வேலை செய்யும்போது, அதிக எனர்ஜி கிடைக்கும். எல்லோரும் அடுத்தடுத்த உயரங்களுக்குப் போனாலும், எனக்கும் அவங்களுக்குமான மியூச்சுவல் மரியாதை என்னைக்கும் மாறாது. ‘நாமெல்லாம் அச்சீவ் பண்ணிட்டோம்’ங்கிற மனநிலையை எல்லாம் என் டீம்ல இருக்கிற யங்ஸ்டர்ஸ் மாத்திடுவாங்க. கூடவே, எனக்கும் அவங்களை மாதிரி யங் மியூஸிக் கம்போஸ் பண்ணணும்னு தோணும்.அவங்களை மாதிரி இன்னும் பெட்டரா பாடணும்னு தோணும். அதுக்காகவே, என் டீம்ல இருக்கிறவங்க என்னைவிடத் திறமையானவங்களா இருக்கணும்னு விரும்புவேன்.”

‘’ ‘ஒன் ஹார்ட்’ படம் ஓகே. ஃபவுண்டேஷன் தொடங்கிய காரணம்?”

‘`நான் எங்க அப்பாவோட இசையை, அவரோட ஸ்டூடியோவை, அவர் வெச்சிருந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். எங்க அப்பா எனக்குப் பண்ணி வெச்சுட்டுப் போனது மாதிரி, நான் என்ன பண்ணப்போறேன்னு தோணும். தவிர, எல்லா மியூஸிஷியனுக்கும் பின்னாடியே வர்ற ஒரு கேள்வி இருக்கு. கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கப்போனா, ‘மாப்பிள்ளை என்ன பண்றார்’னு கேட்பாங்க. ‘கிடார் வாசிக்கிறார்’னு சொன்னா, அடுத்த மாப்பிள்ளையோட தகுதியைப் பார்ப்பாங்க. அவர் ‘கலெக்டர்’ டேக் மாட்டியிருப்பார். ‘ஓ...சூப்பர்’னு கலெக்டர் மாப்பிள்ளைக்குப் பொண்ணு கொடுத்துடுவாங்க. இசைக் கலைஞர்கள் கலெக்டரைவிடக் கொஞ்சமும் தகுதி குறைஞ்சவங்க கிடையாது. இன்னைக்கு இருக்கிற அத்தனை சூழல்களையும் பயன்படுத்திக்கிட்டா, பெரிய இசைக் கலைஞர்களா வரலாம். ஆனா, ஒரு வியாதி வந்தா மாத்திரை எடுத்துக்கிறதுக்குக்கூட வருமானம் இல்லாத பல இசைக் கலைஞர்கள் இருக்காங்க. தினசரிக் கூலி வாங்குற இசைக் கலைஞர்கள் இருக்காங்க.  இப்பவே அவங்களுக்கு ஒரு வழிகாட்டினாதான், அவங்க எதிர்காலம் நல்லா இருக்கும். யார் பண்றது? நாமதான் பண்ணணும். தவிர, நான் இதை ஸ்டார்ட் மட்டும்தான் பண்ணிட்டுப் போறேன். எனக்குப் பின்னாடி வர்றவங்க ஒவ்வொரு ஊர்லேயும் நலிந்த இசைக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்கணும். அதுக்கான முதல் விதை இது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தமிழர்களைப் பற்றி மற்றவங்க பேசணும்!’’ - மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்

‘’ ‘ஒன் ஹார்ட்’ உங்களுடைய பயணம் பற்றியது, ‘99 சாங்ஸ்’ படத்துக்குக் கதை நீங்கதான். ‘லீ மஸ்க்’ மூலமா இயக்குநர் ஆகிட்டீங்க. ரஹ்மானின் அடுத்தடுத்த பரிணாமங்களா எடுத்துக்கலாமா?”

‘`நல்ல ஐடியா கிளிக் ஆனா, பாட்டுக்கு மியூஸிக் பண்ணிடலாம். கதை எழுதுறதும், டைரக்‌ஷன் பண்றதும் அப்படி இல்லை. அது ஒரு கல்யாணத்தை நடத்துற மாதிரி. ஒரு கதை எழுதுனா, அதை நாலைஞ்சு வருடம் வெச்சுக் காப்பாத்தணும். போஸ்டர்ல இருந்து படத்தோட சப்-டைட்டில் வரைக்கும் நேர்த்தியா இருக்கணும். ஏதாவது ஒண்ணு தப்பா இருந்தாலும் படம் நல்லா இருக்காது. ‘ஒன் ஹார்ட்’, ‘99 சாங்ஸ்’, ‘லீ மஸ்க்’னு மூணு பண்ணியாச்சு. தவிர, நிறைய எழுதலாம். எழுதுற எல்லா கதைகளையும் திரைவடிவம் ஆக்க முடியாது.

சினிமாவுல இயக்குநர், ஹீரோ, ஹீரோயின், தயாரிப்பாளர்னு பல படிகளுக்குப் பிறகுதான், இசையமைப்பாளரோட கருத்தைக் கதையில சொல்ல முடியும். இதுக்கு நாம எதுவும் பண்ண முடியாது. இங்கே இருக்கிற சூழல் அப்படித்தான். ஷங்கர் சார் ‘இந்தப் படத்துக்கு ஏன் கர்நாடிக் மியூஸிக்? இது ரஜினிகாந்த் படம்’னு சொல்வார். ‘கரெக்ட்தான்... இது ரஜினிகாந்த் படம்’னு எனக்கும் தோணும். அதுவே நாம தயாரிக்கிற படமா இருந்தா, ‘இதுதான் கதை. இதை நீ ஒழுங்கா டைரக்ட் பண்ணு’ன்னு உரிமையோட சொல்லலாம். அந்தக் கதைக்கு மியூஸிக் பண்றதுக்கும் எனக்கு ஈஸியா இருக்கும். அவ்வளவுதான்.’’

‘’ ‘லீ மஸ்க்’ படத்தை இயக்கிய அனுபவம் பற்றிச் சொல்லுங்க?’’

‘`ஆக்சுவலா, அதை டைரக்ட் பண்ண வேண்டிய ஆள் ஓடிட்டார்(சிரிக்கிறார்). இன்னொருத்தருக்குப் புரியவெச்சு வேலை வாங்குறதைவிட, நீங்களே டைரக்ட் பண்ணிடுங்கன்னு சொன்னாங்க, பண்ணினேன். நார்மலான கமர்ஷியல் படத்துக்கான டைரக்டர் ஸ்டடி வேற, இந்தப் படத்துக்கான டைரக்டர் ஸ்டடி வேற. இது விர்ச்சுவல் ரியாலிட்டி படம். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ரிசர்ச் பண்ணிப் பண்ணோம். 2015-ல இருந்து படத்தை ஷூட் பண்ணி, படத்துக்கான ரிசல்ட் எப்படி இருக்குன்னு போட்டுப் பார்த்து, திரும்பவும் வொர்க் பண்ணோம். நடிகர்களுக்கு நடிப்பு சொல்லித்தர ஒரு ஆக்டிங் கோச் தேவைப்பட்டது. ஹாலிவுட்ல வொர்க் பண்ற என் நண்பரைக் கூட்டிட்டு வந்துட்டேன். என் வேலை ஈஸி ஆகிடுச்சு. ஒரு இயக்குநரா என்னோட அனுபவம் புதுசா இருந்தது. ஆல்பிரட் ஹிட்ச்காக் தன் படங்கள்ல நடிக்கிற நடிகர்களுக்கு நடிப்புச் சொல்லித்தர மாட்டார். ஒன்லி ‘கேமரா ஆன் - கேமரா ஆஃப்’ மட்டும்தான். கிட்டத்தட்ட இயக்குநர் ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படித்தான். படத்தோட போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. சீக்கிரமே ரிலீஸ் ஆகிடும்.”

‘`அரசியல், அறிவியல், மதம், காதல், தனிநபரோட வாழ்க்கை வரலாறு... இப்படி எல்லாவிதமான படங்களுக்கும் உங்க இசை பொருந்திப்போகுது. அதுக்குப் பின்னால இருக்கும் உங்களுடைய உழைப்பு எப்படியானது?’’

‘`குறைந்தபட்சம் ரெண்டு மூணு மாசத்துக்குப் படத்தோட கதை, காட்சிகள் சம்பந்தமா ரிசர்ச் பண்ணுவேன். நான் கிரிக்கெட் ரசிகன் கிடையாது. ஆனா, சச்சின் எனக்கு ஃப்ரெண்டா பழக்கம். பெரிய ஐகான் அவர். அவரோட படத்துக்கு மியூஸிக் பண்றது பெருமையான விஷயம்னு ஒப்புக்கிட்டேன். இப்படி எனக்குப் பிடிச்ச விஷயங்களைத்தான் பண்றேன்.  ரசிகர்கள்  என்கிட்ட  எதிர்பார்க்கிறதை, முதல்ல எனக்கு நானே எதிர்பார்த்துக்குவேன். ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் என்னை நானே ஸ்கேன் பன்ணிப் பார்க்கும்போது, ‘ஒண்ணுமே மாறலையே என்கிட்ட’, ‘ஏன் நாம இதைப் பண்ணலை?’, ‘அவங்க பண்றதை, நான் ஏன் பண்ண முடியலை?’ இப்படிப் பல கோணங்களில் யோசனைகள் போகும். ஒரு கேரக்டருக்கு இசையும், வசனமும்தான் உயிர் கொடுக்குது. நம்ம இசையில ஒரு கேரக்டர் உயிர் பெறுவதைப் பார்க்கும்போது ஒரு சந்தோஷம் வரும். அதுதான், தொடர்ந்து இயங்க வைக்கும்.’’

‘`சமீபத்துல நடந்த ஒரு கான்செர்ட்ல தொடர்ந்து தமிழ்ப் பாடல்களே பாடிக்கிட்டு இருந்ததனால, ரசிகர்கள் கலைஞ்சு போனதா ஒரு செய்தி வந்ததே... உண்மையா?”

‘`லண்டன்ல நடந்த சம்பவம் இது. 9,000 பேர்ல 50 பேர் கலைஞ்சு போனாங்க. நாம மெஜாரிட்டியைத்தான்ப்பா பார்க்கணும்.”

‘` ‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவில் “தமிழன் ஆளணும்ங்கிறது என் விருப்பம்’னு சொன்னீங்க. உங்ககிட்ட இருந்து இப்படியான வார்த்தைகள் எதிர்பாராததா இருக்கே?’’

‘`நான் இந்த ஊர்ல பிறந்திருக்கேன், நான் ஒரு தமிழன். உலகம் முழுக்கச் சுத்துறேன், எல்லா நாட்டு மக்களையும் ஸ்டடி பண்றேன். நாம எந்த இடத்துல இருக்கோம்? நமக்கு மூளை இருக்கு. அந்த மூளைக்குத் தகுந்த வேலைகளைப் பண்றோமா? அதைப் பயன்படுத்தித் தலைமைப் பொறுப்புக்குப் போக மெனக்கெடுறோமா? இப்படிப் பல கேள்விகள் முளைச்சுது. தமிழன்னு சொல்றோம், பெருமையா நினைச்சுக்கிறோம், தமிழன்ங்கிற வார்த்தையைத் தலையில தூக்கி வெச்சுட்டு ஆடுறோம். ஆனா,  அந்த வார்த்தையை மத்தவங்க கேட்கும்போது வலிமையா இருக்கணும்ங்கிறதுக்கு நாம என்ன பண்றோம்? நம்ம கலாசாரத்தை, அடையாளத்தை வேற லெவலுக்கு எடுத்துட்டுப் போறோமா? நம்ம தனித்துவத்தை உலகத்துக்கு உணர்த்துறோமா? இன்னும் கேள்விகள் நீண்டுக்கிட்டே இருக்கு. இதுக்கான பதிலைத்தானே நாம முன்னெடுக்கணும். ‘தமிழர்களோட பண்பைப் பாருங்க, மரியாதையைப் பாருங்க, அறிவைப் பாருங்க, தமிழர்கள் வன்முறைகளை எப்படிச் சமாளிக்கிறாங்க பாருங்க’ன்னு மத்தவங்க பேசணும். அதுதானே மனிதாபிமானம். நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தியெல்லாம் வரலாற்றுல பதிஞ்சதுக்கான காரணம், எதிரிகளை மன்னிச்சதுதான். கல்வீசி அடிக்கிறதும், குத்திக் கொலை பண்றதும் வரலாற்றுல பதியாது. அவங்க சரியில்லை, இவங்க சரியில்லைனுலாம் சொல்ல முடியாது. நாம மாறணும். பவர் எல்லோரோட கைலேயும் இருக்கு. யூனிட்டி இஸ் வெரி இம்பார்டென்ட். இங்கே எல்லோரும் அதைப் பிரிக்கணும்னு ஆசைப்படுறாங்க. நாம எந்தளவுக்குச் சேர்க்கலாம்னு யோசிக்கணும். இதெல்லாம் பண்ணாலே, தமிழன் தலை நிமிர்வான். தமிழுக்குத் தேவையான மரியாதை ஆட்டோமேட்டிக்கா வரும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism