Published:Updated:

``நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!’’

``நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!’’
பிரீமியம் ஸ்டோரி
``நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!’’

ம.கா.செந்தில்குமார்

``நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!’’

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
``நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!’’
பிரீமியம் ஸ்டோரி
``நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!’’

‘‘வரப்போறேன் வரப்போறேன்னு சொல்லிட்டு இருக்கிறவங்க வருவாங்களா மாட்டாங்களானு எனக்குத் தெரியலை. ஒரு விஷயம் மட்டும் உறுதியா சொல்றேன். எதிர்காலத்தில் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் மேலேயே மக்களுக்கு வெறுப்பு வரும். ஆமாம் இப்போ அரசியல்வாதிகள் அவங்க தலையில மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டு இருக்காங்க. இனி 500 ரூபாய், டி.வி, மிக்ஸி, கிரைண்டர் பருப்பு வேகாது. இப்போ என் விஷயத்துக்கு வர்றேன். நேர்மையா சொல்லணும்னா, எனக்கு நல்ல படங்கள் இப்போ வந்துட்டு இருக்கு. அதன்மூலமா நல்ல வருமானம் வரும். செய்யணும்னு ஆசைப்படுற சமூக வேலைகள் நிறைய இருக்கு. செய்வேன். மாற்றம் ஏற்பட வேண்டும்னு சூழ்நிலை வரும்போது அந்த மாற்றத்தை ஏற்படுத்த அணிலாகவோ, பாலமாகவோ கண்டிப்பா இருப்பேன். பவருக்கு வந்தாதான், அதிகமா மக்களுக்கு நல்லது பண்ண முடியும்னு சூழ்நிலை இருந்தா, அதுதான் அரசியல்னா நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.’’ - ‘‘உங்களுக்கு அரசியல் ஆர்வம் உண்டா?’’ என்ற கேள்விக்குதான் இப்படி பளிச் பதில் சொல்கிறார் விஷால். தங்கையின் கல்யாணக் கடமையை முடித்த திருப்தியில் இருப்பவருக்கு அடுத்தடுத்துப் பரபர பணிகள் காத்திருக்கின்றன. அதிகாலை நேரத்தில் அண்ணாநகர் வீட்டில் விஷாலை சந்தித்துப் பேசினேன்.

``நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!’’

‘‘மிஷ்கின் படம். எப்படி இருந்தது அனுபவம்?’’

‘‘ ‘இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம்’னு எட்டு வருஷங்களுக்கு முன்னாடிப் பேச ஆரம்பிச்சோம். இந்த எட்டு வருஷங்கள்ல நாங்க சேர்ந்து படம் பண்ண, மூணு முறை வாய்ப்பு வந்துச்சு. ஆனால், ஒவ்வொரு முறையும் அவரோட வாய்க்கொழுப்புனால அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு. அவர் என் முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட எப்படிப் பேசினாலும் பிரச்னை இல்லை. ஆனால், தயாரிப்பாளர்னு வரும்போது, ‘நான் இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் பேசுவேன்’னு தன் நிலையில் விடாப்பிடியா நின்னதால நாங்க சேர்ற வாய்ப்புத் தள்ளிப்போனது. அது இப்போ எட்டு வருஷம் கழிச்சு, ‘துப்பறிவாளன்’ மூலமா நிறைவேறியிருக்கு.

 சேர்ந்து படம் பண்றோம்னு முடிவானதும், ‘எந்த மாதிரியான படம் பண்ணணும்னு ஆசைப்படுறீங்க’னு கேட்டவர், மூணு ஜானர்கள்ல வெவ்வேறு கதைகள் சொன்னார். ‘ஜேம்ஸ் பாண்ட் மாதிரி இல்லாம ஷெர்லக்ஹோம்ஸ் மாதிரியான ஒரு ஜானர் இருக்கு’னு சொல்லிட்டு அவர் சொன்ன லைன்தான் இந்தக் கதை. இது நிச்சயம் என் கரியர்ல ஒரு தரமான படமா இருக்கும். தொடர்ந்து டிடெக்டிவ் சீரிஸா இதைப் பண்ணலாம்னு இருக்கோம்.’’

‘‘பாக்யராஜ், சிம்ரன், ஆண்ட்ரியா, பிரசன்னா, வினய், அனு இமானுவேல்... நடிகர்கள் பட்டியலே நீளமா இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஸ்கோப் இருக்கு?’’

‘‘ஷெர்லக்ஹோம்ஸ், டாக்டர் வாட்சன் பாணியில்தான் என் கேரக்டரையும் பிரசன்னா கேரக்டரையும் வடிவமைச்சுருக்கார். அதனால நான் இருக்கிற 90 சதவிகிதக் காட்சிகள்ல பிரசன்னா இடம் பெறுவார். ‘மிஷ்கின் படத்துல நடிக்கணும்’னு விரும்பி சிம்ரன் மேடம் நடிக்கிறாங்க. அவங்களையும் இன்னொரு கேரக்டரையும் சுற்றித்தான் கதையே நகரும். மரத்தைச் சுற்றி டூயட், ஸ்விட்சர்லாந்து கனவுப் பாட்டுனு இதில் எதுவும் கிடையாது. நடிக்கணும்; ஒரு புதுப்பொண்ணு இருந்தால் நல்லதுனு யோசிச்சப்போ அனு இமானுவேல் கிடைச்சாங்க. இவங்களைத் தவிர கேங் ஆஃப் ஃபைவ்னு ஐந்து பேர் கொண்ட நெகட்டிவ் கேரக்டர்கள். அவங்க வழக்கமான வில்லன்களா இல்லாம அவுட் ஆஃப் தி பாக்ஸா இருக்கணும்னு தேடினோம். என் உயரத்துக்குத் தகுந்த ஆளா வினய் வந்தார். அடுத்து பாக்யராஜ் சார் வந்தார். அவரின் கதாபாத்திரத் தோற்றமே வித்தியாசமா இருக்கும். அஜய் ரத்னம் சாரின் மகன் தீரஜ். மிஷ்கினின் முந்தைய படங்கள்ல நடித்த ஒருவர், அடுத்து ஆண்ட்ரியானு இந்த  ஐந்து பேரும் அப்படிப் பொருந்தியிருக்காங்க.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!’’

‘‘ஆமாம், மலையாளத்தில் வில்லனா ‘வில்லன்’ படத்தில் அறிமுகமாகி இருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்துச்சு?’’

‘‘ஆன்ட்டி ஹீரோ எப்பவுமே என் பக்கெட் லிஸ்ட்ல உள்ள விஷயம். அந்தப் பட டைரக்டர் உன்னிகிருஷ்ணன் சார் இந்தக் கதை சொல்லும்போது, ‘எல்லா நல்லதுகள்லேயும் கெட்டது இருக்கும். எல்லா கெட்டதுகள்லேயும் நல்லது இருக்கும்’ என்ற அதோட கான்செப்ட் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. மலையாளத்துல மோகன்லால் சாருக்கு எதிரான பலமான கதாபாத்திரம் கிடைக்கும்போது ஏன் பண்ணக் கூடாதுனு தோணுச்சு. லால் சார் என் குடும்ப நண்பர். தன் வீட்டுப் பையன் மாதிரி பார்த்துப்பார். அவ்வளவு ஸ்பேஸ் கொடுத்தார். 450 படங்கள் தந்த அனுபவத்தோட நிற்கிற ஒரு மனிதனோட கண்களைப் பார்த்துப் பேசி நடிச்சதுதான் மிகச்சிறந்த அனுபவம். அதை நான் ரசிச்சேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த அனுபவம் கிடைக்காது. இந்தப் படத்துக்கு அங்கே மிகப்பெரிய எதிர்பார்ப்பு. இந்த மாசம் 28-ம் தேதி படம் ரிலீஸ்.’’

‘‘நீங்களும் லிங்குசாமியும் சண்டக்கோழி-2’வில் மறுபடியும் இணையறீங்க. அது எப்படி வந்துட்டு இருக்கு?’’

``நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!’’


‘‘இதை நடிகர்களுக்கு நான் சொல்ற அறிவுரையாக்கூட நீங்க எடுத்துக்கலாம். ஒரு நடிகன் ஈகோ பார்க்காம, பெரிய இயக்குநரைக் காயப்படுத்துறோமோன்னு யோசிக்காம அந்தக் கதை பிடிச்சிருக்கா, பிடிக்கலையானு வெளிப்படையாச் சொல்லிப் பழகணும். அதுதான் சினிமாவுக்கும் தயாரிப்பாளருக்கும் நீங்க பண்ற நல்ல விஷயம். ‘இந்தக் கதையை விட்டுட்டா, 10 நாள் சும்மா இருக்கணுமே’ன்னு நினைச்சு கமிட் பண்ணாதீங்க. தப்பான படம் பண்ணி ஆறு மாசம் சும்மா இருக்கிறதுக்கு 10 நாள் சும்மா இருக்கிறது தப்பில்லை. லிங்கு 14 வருஷ நண்பர். நிறைய சண்டை போட்டிருக்கோம். அப்படித்தான் ‘சண்டக் கோழி-2’ வேலைகள் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு  வருஷங்களாச்சு. காரணம் பார்ட-1 யைவிட பார்ட் 2 நல்லா இருக்கணும் என்பது தான். அவர் எனக்குக் கடைசியா சொன்னது ஐந்தாவது டிராஃப்ட். இரண்டுமணி நேரம் கதை சொன்னார். ‘லிங்கு, இதுதான் என் 25-வது படம்’னு எழுந்து நின்னு கை கொடுத்தேன். நிச்சயம் பார்ட் 1 மாதிரியே இது என்னை அடுத்த கட்டத்துக்கு அழைச்சிட்டுப் போற படம். லிங்குசாமிக்குள்ள ஒருவித வைப்ரேஷன் புகுந்து சாமியாட ஆரம்பிச்சார்னா, அவரை யாராலும் நிறுத்த முடியாது. இது எங்க இரண்டு பேருக்குமே முக்கியமான படம். படத்தை எங்கே விட்டோமோ அங்கே இருந்து தொடங்குறோம். வெளிநாட்டுல உள்ள பையன் ஏழு வருஷம் கழிச்சு ஊருக்கு வர்றான்னு கதை ஆரம்பிக்கும். இதில் மீரா ஜாஸ்மின் தவிர, ராஜ்கிரண் உள்பட எல்லாரும் இருக்காங்க. கூடுதலா கீர்த்தி சுரேஷ் இருக்காங்க. வில்லியா வரலட்சுமி. படம் திருவிழா மாதிரி பட்டாசா இருக்கும்.’’

‘‘நடிகர் சங்கப் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர். அப்படி இருந்தும் உங்களோட, ‘மதகஜராஜா’ படத்தை ரிலீஸ் பண்ண முடியலையே, அதில் என்ன பிரச்னை?’’


‘‘சில விஷயங்கள் கடவுளுக்குத்தான் தெரியும்னு சொல்வாங்க. ஆனால், ‘மதகஜராஜா’ எப்ப வரும்னு அந்தக் கடவுளுக்கே தெரியாது.  அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சொல்ற காரணங்கள் பயங்கரமா இருக்கும். ஒருமுறை `டி.டி.எஸ்.பிரச்னை’னு சொன்னாங்க. இன்னொரு முறை, ‘இந்த வாரம் நாலு இங்கிலீஷ் படங்கள் ரிலீஸ் ஆகுது’ன்னாங்க. அடுத்த வாரம் `ஒரு இந்திப்படம் ப்ளஸ் மூணு இங்கிலீஷ் படங்கள் வருது’ன்னாங்க. இதில் கடைசியா சொன்ன காரணம்தான் அல்டிமேட். ‘சி.பி.ஐ-கிட்ட இருக்கு. அவங்க ரிலீஸ் பண்ணக் கூடாதுனு சொல்றாங்க’ன்னாங்க. சி.பி.ஐ-க்கும் தமிழ் சினிமாவுக்கும் என்ன தொடர்பு இருக்குனு புரியலை. இப்படி ஒவ்வொரு வருஷத் துக்கும் ஒவ்வொரு நொண்டிச்சாக்கு. மனிதர்கள் கிட்ட பேசினா பதில் வரும். சுவர்கிட்ட பேசி என்ன பயன்னு கையெடுத்துக் கும்பிட்டுட்டு வந்துட்டோம். அதனால நீங்க இந்தக் கேள்வியைத் தயாரிப்பாளர் கிட்டதான் கேட்கணும்.’’

``நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!’’

‘‘இந்த அரசு சினிமாத்துறையை எப்படிப் பார்க்கிறாங்கன்னு நினைக்கிறீங்க?’’

``நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!’’


‘‘முன்னே 2,000 தியேட்டர்கள், ஆனால், வருஷத்துக்கு 80 படங்கள் ரிலீஸ் ஆச்சு. இப்போ வெறும் 850 தியேட்டர்கள். ஆனால், ரிலீஸ் ஆகும் படங்களோ 250-க்கும் மேல். எப்படி அக்காமடேட் பண்ணுவீங்க. அதனால தொகுதிக்கு ஒண்ணா 234 தொகுதிகள்லேயும் 200 முதல் 250 இருக்கைகள்கொண்ட தியேட்டர் கட்டிக்கக் கோயில் நிலத்தைத் தயாரிப்பாளர் சங்கத்துக்குக் குத்தகைக்குக் கொடுங்க. அதுல சென்னை சத்யம்ல இருக்கிற வசதியளவுக்கு நல்ல தியேட்டர்களை அமைக்கிறோம். அதன்மூலம் உங்களுக்கு வரி அதிகரிக்கும். சின்னப் படங்களும் ரிலீஸ் ஆக வாய்ப்பா இருக்கும்னு கோரிக்கை வெச்சுருக்கோம். ஜி.எஸ்.டி தவிர 30 சதவிகித லோக்கல் வரினு அரசு அறிவிச்சாங்க. அதை எங்களால் கட்ட முடியாதுனு கடந்த ஜூன்ல சொன்னோம். அதுபற்றிப் பேச ஒரு குழுவை அமைச்சாங்க. ஆனால்,அந்தக் குழு இதுவரை ஒருமுறைக்கூட கூடவில்லை. கர்நாடகா, வங்காளம் உட்பட பல மாநிலங்கள்ல ஜி.எஸ்.டி-யில வரக்கூடிய ஸ்டேட் கோட்டா ஒன்பது சதவிகிதத்தைத் திரும்பி இண்டஸ்ட்ரிக்கே கொடுக்கிறாங்க. ஆனால், ஜி.எஸ்.டி. தவிர இங்கே கார்ப்பரேஷன் டாக்ஸும் கேட்கிறாங்க. எந்தத் தெளிவும் இல்லை. ஆனால், ஒன்பது வருடங்களா அறிவிக்கப்படாம இருந்த மானியம் அறிவிக்கணும்னு எங்க கோரிக்கையை ஏற்று 150 படங்களுக்கு மானியம் அறிவிச்சுருக்காங்க. அடுத்து நாங்க எதிர்பார்க்கிறது, தமிழ்நாடு முழுக்கக் கேரளா மாதிரி தியேட்டர் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டரை சேஷன் பண்ணணும். ஒரு டிக்கெட் பதிவாச்சுன்னா அது அன்றே தயாரிப்பாளருக்குத் தெரிய வரணும். அப்போதான் எவ்வளவு வசூல் வந்திருக்குனு தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோவுக்குத் தெரியும். தப்பும் நடக்காது. 100 கோடி, 200 கோடி வசூல்னு ட்விட்டர், ஃபேஸ்புக்ல சொல்லிட்டு இருக்கோம். அதெல்லாம் உண்மையா இல்லையானு புரியும். ‘இதுதான் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ்’னு காட்டி எங்களால பேங்க்ல லோன்கூட வாங்க முடியும்.’’

‘‘தங்கச்சி கல்யாணம் முடிஞ்சிடுச்சு. உங்க கல்யாணம் எப்போ?’’

‘‘ தங்கச்சி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுருக்கு. சந்தோஷமா இருக்கு. ஆனா, அவங்க போனபிறகு வீடே வெறிச்சோடிக் கிடக்கு. எனக்கு பில்டிங் கட்டுறவரைக் கல்யாணம் இல்லை. இது பிடிவாதம்னு இல்லை. அந்தக் கல்யாண மைண்ட்செட் வரலை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism