Published:Updated:

குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்

குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்

குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்

குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்

குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்

Published:Updated:
குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்

வாழ்வில் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய அற மதிப்பீடுகளை, பணம் எப்படியெல்லாம் குலைத்துப் போடுகிறது என்பதையும், பணத்துக்கு அப்பாலும் மனிதநேயம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையும் வித்தியாசமாகச் சொல்லியிருக்கிறது `குரங்கு பொம்மை’.

நாயக வழிபாடோ தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகளோ இல்லாமல், தேர்ந்தெடுத்தக் கதையைத் தெளிவாகச் சொன்ன அறிமுக இயக்குநர் நித்திலன்மீது நம்பிக்கை பிறக்கிறது. 

குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்

அப்பாவை அவமானப்படுத்தும்போது பாலா சிங்கை அறைவது, அதே பாலா சிங்கிடம் சென்று மன்னிப்புக் கேட்பது, எப்படியாவது `அந்தப் பை’யை உரியவரிடம் சேர்த்துவிட வேண்டும் எனத் தவிப்பது, `அப்பாவுக்கு என்ன ஆச்சோ?’ எனப் பரிதவிப்பது, இறுதியில் உண்மை தெரிந்தபிறகு நிலைகுலைந்துபோவது என இயல்பான இளைஞனாக வாழ்ந்திருக்கிறார் விதார்த். நடிப்பு கலக்கல் ப்ரோ.

பாரதிராஜா  என்றாலே கரகரத்த குரலும் கம்பீரமான தோரணையும்தான் நினைவில் வரும். ஆனால், அடங்கிப் போன தொனியில், அவ்வளவு விவரம் இல்லாதவராக நடித்து அசத்தி யிருக்கும் பாரதிராஜா, இயக்கத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் இமயம்தான். தனக்கும் தேனப்பனுக்கும் ஏன் அப்படி ஓர் அழுத்தமான உறவு என்பதை விவரிக்கும் காட்சி, அற்புதம் இயக்குநரே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்


பாட்டுப் பாடியபடியே அறிமுகமாகும் தேனப்பனும், கதையின் பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். அரட்டல், மிரட்டல் இல்லாமலே வில்லத்தனம் செய்ய முடியும் என்பதை அழகாகச் செய்து காட்டியிருக்கிறார் குமரவேல். பாரதிராஜா கொண்டுவரும் பழங்காலச் சிலையை அடிப்பதற்காக அவர் போடும் கிரிக்கெட் பேட் ப்ளான் களும், அதற்காக பாரதிராஜாவிலிருந்து தன் மனைவி வரை எல்லோரையும் விதவிதமாக நடித்து ஏமாற்றுவதும் என நடிப்பில் பல பவுண்டரிகளை விளாசியிருக்கிறார் குமரவேல்.

``பக்கத்துல நல்ல போலீஸ் ஸ்டேஷன் எதுவும் இருக்கா?’’, ``ஹெல்மெட் இல்லையா?, பைக் மட்டும்தான் இருந்துச்சு”, ``காலைல சிகரெட் பிடிச்சேன். இரும மறந்துட்டேன்”  என்கிற மடோன் அஸ்வினின் எளிமையான வசனங்கள் அபாரம்.  இசையமைப்பாளர் அஜனீஷின் பாடல்களைவிட படத்தின் பின்னணி இசை சிறப்பு. உதயகுமாரின் கேமரா, விதார்த்தையும் `குரங்கு பொம்மை’ பையையும் பின் தொடர்ந்திருக்கிறது.

ஆனால், லாஜிக்கலாக பல கேள்விகளும் எழுகின்றன. விவரம் போதாத பாரதிராஜாவை நம்பி, தேனப்பன் `பொருளை’க் கொடுத்து விடுவாரா? அதுவும் தஞ்சாவூரில் அதகளம் செய்துகொண்டிருக்கும் தேனப்பன் டீலிங் செய்வது, ராயப்பேட்டையில் வாட்டர் கேன் போடும் குமரவேலிடம்தானா, குமரவேலுவின் சாதாரணப் பின்னணி வித்தியாசமாக இருக்கிறதே தவிர, நம்பும்படியாக இல்லையே.

ஆனால், சுவாரஸ்யமான கதை சொல்லல் மூலம் கவனம் ஈர்க்கிறது இந்தக் `குரங்கு பொம்மை’.

- விகடன் விமர்சனக் குழு

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism