Published:Updated:

புரியாத புதிர் - சினிமா விமர்சனம்

புரியாத புதிர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
புரியாத புதிர் - சினிமா விமர்சனம்

புரியாத புதிர் - சினிமா விமர்சனம்

புரியாத புதிர் - சினிமா விமர்சனம்

புரியாத புதிர் - சினிமா விமர்சனம்

Published:Updated:
புரியாத புதிர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
புரியாத புதிர் - சினிமா விமர்சனம்
புரியாத புதிர் - சினிமா விமர்சனம்

`அந்தரங்க வீடியோ வெளியானதால் இளம்பெண் தற்கொலை’- இந்த ஒருவரிச் செய்திக்குப் பின்னால் இருக்கும் வலியும், வேதனையும், பழிவாங்கலுமே `புரியாத புதிர்’. 

தொழில்நுட்ப வளர்ச்சியின் இருண்ட முகத்தையும், ஆண்களின் அலட்சியமும் அற்பத்தனங்களும் பெண்களின் வாழ்க்கையை எப்படிக் கலைத்துப்போடுகின்றன என்பதையும் முதல் படத்திலேயே பதிவுசெய்திருக்கும் அறிமுக இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடிக்கு வாழ்த்துகள்.

சட்டைக்கு பட்டன் போடுவதைப்போல மிக எளிதானக்  கதாபாத்திரம். அசால்ட்டாகச் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. புதிரின் முடிச்சு அவிழ்ந்து, உண்மை தெரியும்போது மொட்டைமாடியில் கதறி அழும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார். காயத்ரி அமைதியும் அன்புமாக வந்துபோகிறார். விஜய்சேதுபதிக்கும் காயத்ரிக்குமான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி அள்ளுகிறது.

புரியாத புதிர் - சினிமா விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



சி.எஸ்.சாமின் பின்னணி இசை, காதல் காட்சிகளில் குழைந்தும் த்ரில்லர் பின்னணியில் அதிர்ந்தும் மாயாஜாலம் காட்டுகிறது. `வெள்ளைக் கனவு...’ பாடல் ரசிக்கவைக்கிறது. தினேஷ் கிருஷ்ணனின் கேமரா அப்பார்ட்மென்ட் மர்மத்தைக் கூட்டுகிறது.

அழுத்தமான மெசேஜ் என்றாலும் அதற்குக் காரணமான ஃப்ளாஷ்பேக் மனதில் பதியும்வண்ணம் யதார்த்தமாக இல்லை. காலேஜ் கல்ச்சுரல்ஸ், சந்தேகப்படும் அப்பா, நடவடிக்கை எடுக்கும் கல்லூரி நிர்வாகம் என ஒட்டுமொத்த ஃப்ளாஷ்பேக்குமே க்ளிஷே காட்சிகளால் மூச்சுத்திணறுகிறது. ரமேஷ் திலக் காட்சிகள், வேண்டுமென்றே வைக்கப் பட்ட இடைச்செருகல்கள். `அந்தரங்க வீடியோக்கள், பெண்களைப் பாதிக்கின்றன’ எனச் சொல்லிவிட்டு, இன்னொரு பெண் இருக்கும் வீடியோவை ஒரு பெண்ணே வெளி யிடுவது மட்டும் சரியா? பெண்களின் அந்தரங்கத்தை வீடியோவாகவும் புகைப்படமாகவும் வெளியிடும் ஆண்களின் வக்கிரம் தடுக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்காகப்  பெண்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டும்? பெண்களின் மரணம்தான் அவர்களின் மேலான களங்கத்தைத் துடைக்குமா? பல கேள்விகளும் `புரியாத புதிர்’கள்தான் என்பதே படத்தின் பலவீனம்.

இன்னும் அழுத்தமான திரைக்கதை அமைத்திருந்தால், `புரியாத புதிர்’ எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கும்.

- விகடன் விமர்சனக் குழு

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism