
``வீட்ல நீங்க ரொம்ப கோபமானா என்ன பண்ணுவீங்க?’’
``குடும்ப வாட்ஸ்அப் குரூப்ல இருந்து வெளியேறிடுவேன்.’’
- கே.சதீஷ்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“பொண்ணு பயங்கரத் திறமைசாலின்னு எதை வெச்சு சொல்றீங்க?”
``பத்து நிமிஷத்துல 15 ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவான்னா பார்த்துக்க!’’
- வி.சகிதாமுருகன்

“டைமிங்ல தலைவரை அடிச்சுக்க முடியாதுன்னு எதை வெச்சு சொல்ற?”
``மாற்று அணியில் மறைந்திருக்கும் என் ஸ்லீப்பர் செல்லங்களேன்னு பேச்சை ஆரம்பிக்கிறார் பாரு!"
- வி.சகிதாமுருகன்

``எப்ப வேணும்னா எலெக்ஷன் வரும் தயாரா இருங்கய்யா...’’
``நாங்க தயாராதான் இருக்கோம்.நீங்கதான் கண்டெய்னரைத் தயார் பண்ணணும்.’’
- ஜெ.மாணிக்கவாசகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism