``மன்னர் எதிரியோட எல்லைக்குள்ளேயே நுழைய முடியலையாமே?’’

“ஆமாம்! தேர் ஓட்ட ஒரிஜினல் லைசென்ஸ் இல்லைன்னு, எல்லையிலேயே மடக்கிட்டாங்க!’’
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``Wife 1, wife 2, wife 3னு மொபைல்ல நம்பர் சேவ் பண்ணியிருக்கீங்களே... எப்படிங்க சமாளிக்கீறீங்க...’’
யோவ், குடும்பத்துல குழப்பத்த உண்டாக்காத, அது என் மனைவியோட வேற வேற நம்பருய்யா...’’
- அ.வேளாங்கண்ணி

``அந்தத் துப்பாக்கி சுடும் வீரர் ஏன் டென்ஷனா கத்துறார்?’’
``அவரை யாரோ ட்ரிக்கர் பண்ணிட்டாங்களாம்!’’
- அ.ரியாஸ்

“இந்த வேலைக்காரி ரொம்ப மாடர்ன்!’’
“எப்படிச் சொல்றீங்க?’’
“அக்கம்பக்கத்துல நடக்கிறதை பத்து செகண்ட் கதைகளா சொல்வா!’’
- ஏந்தல் இளங்கோ
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism