Published:Updated:

``அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்!’’

``அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்!’’
பிரீமியம் ஸ்டோரி
``அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்!’’

பா.ஜான்ஸன், மா.பாண்டியராஜன் - படம்: ப.சரவணக்குமார்

``அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்!’’

பா.ஜான்ஸன், மா.பாண்டியராஜன் - படம்: ப.சரவணக்குமார்

Published:Updated:
``அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்!’’
பிரீமியம் ஸ்டோரி
``அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்!’’

``என்னய்யா நித்திலா, சட்டை புதுசா இருக்கு…” என்று இயக்குநரைப் பார்த்துப் பாரதிராஜா கேட்க, “ஆமா சார். இந்த இன்டர்வியூவுக்காக ப்ரொடியூசர் புதுச் சட்டை எடுத்துக் கொடுத்தார்” என இயக்குநர் நித்திலன் சொல்ல, “ஹே என்னப்பா கண்ணா, எனக்கெல்லாம் புதுச் சட்டை கிடையாதா? எனக்கும் புதுச் சட்டை வாங்கிக் கொடுத்தால் ஜம்முனு வந்து உட்காருவேன்ல...” என்று தயாரிப்பாளர் கண்ணனைப் பார்த்துச் சொல்கிறார் பாரதிராஜா. `குரங்கு பொம்மை’ என்ற சீரியஸ் படம் கொடுத்த டீம் இணையும்போது இடமே செம ரகளையாவதைப் பார்த்து நமக்கும் தொற்றிக்கொள்கிறது உற்சாகம்.

“சரி...சரி…வாங்க. சீக்கிரம் வந்து உட்காருங்க…” எனப் பாரதிராஜா சொல்ல, அமைதியாக வந்து அமர்ந்தனர். விதார்த், குமரவேல், தேனப்பன்,கல்கி,கர்ணராஜா, ஒளிப்பதிவாளர் உதயகுமார், தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் இயக்குநர் நித்திலன்.

``அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்!’’

``நடிகனாக வேண்டும் என்றுதான் நீங்க சினிமாவுக்கு வந்தீங்க. ஆனால், இப்போதுதான் உங்களுக்கு நல்ல நல்ல ரோல்கள் கிடைக்கின்றன. எப்படி இருக்கு இந்த அனுபவம்?’’ என்று முதல் பந்தைப் பாரதிராஜாவுக்கே போட்டோம். ``ஆமாப்பா… நான் நடிக்கணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனா, இயக்குநர் ஆகிட்டேன். இருந்தாலும், என்னோட நடிப்பு ஆர்வத்துக்கு `கல்லுக்குள் ஈரம்’ படத்துல வேலை கொடுத்தேன். அதுல என் நடிப்பு எனக்குத் திருப்தி கொடுக்கலை. ஏன்னா, நானே இயக்குநராகவும் இருந்துட்டு நடிக்கவும் செய்ததனால சில சிரமங்கள் இருந்தன. ஆனா, அதே இடத்துல நான் ஒரு நடிகனாக மட்டும் இருக்கும்போது அதையெல்லாம் பார்க்க மாட்டேன். அந்த இயக்குநர்கிட்ட என்னைக் கொடுத்துடுவேன். எல்லாத்தையும் மறந்து நடிப்பேன். அப்படி நான் நடிச்ச படம்தான் `பாண்டியநாடு’. சுசீந்திரனோட வொர்க்கைப் பார்த்துட்டு அவன்கிட்ட சரண்டர் ஆகிட்டேன். அதே மாதிரி நித்திலனோடு வேலை செய்றதுக்கு முன்னால, அவனோட குறும்படம்  பார்த்தேன். ஸ்பூனும், ஃபோர்க்கும் லவ் பண்ற மாதிரி அந்தப் படம் இருக்கும். உலகத்துல எதை எதையோ லவ் பண்ற மாதிரிக் காட்டியிருக்காங்க. ஆனா, ரெண்டு மெட்டீரியல் லவ் பண்ற மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா? என்ன மாதிரி சிந்தனை இவனுக்குள்ள இருந்திருக்குப் பாருங்க.

நான் எப்போ அந்தப் படம் பார்த்தேனோ, அப்போவே  `ஐ லவ் ஹிம்’.  நான்  முடிவு  பண்ணிட்டேன் இந்தப் படத்தில் நடிக்கணும்னு. நீ கதை சொல்லாத, நீ என்ன பண்ணச் சொல்றியோ அதை நான் பண்றேன்னு சொன்னேன். இந்தப் படத்தில் நான் நானா இருந்தேன். இப்போ எல்லோரும் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க. சந்தோஷம்’’ என்று விரிவான விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து குமரவேலிடம் வில்லன் ரோல் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்தால், ``குமரவேல் பற்றி நான் சொல்லியே ஆகணும்’’ என வான்ட்டடாக வந்தார் பாரதிராஜா. ``எவ்வளவோ கொடூரமா கொலை பண்றதெல்லாம் பார்த்திருப்போம். ஆனா, கெஞ்சி, பவ்யமாகக் கொலை பண்ற கேரக்டரே புதுசா இருந்தது. குமரவேலோட நடிச்சபோது அவருடைய கண்ணையேதான் பார்த்தேன். கண்ணுகூட நடிக்குதுய்யா உனக்கு’’ எனக் குமரவேலைத் தட்டிக் கொடுக்கிறார் பாரதிராஜா.

``விதார்த்தாலதான் இந்தப் படத்துக்குள்ள நான் வந்தேன். அவர்தான் `நித்திலன்னு ஒருத்தர் கதை சொல்ல வருவார். கேளுங்க, கதை நல்லாயிருக்கும்’னு சொன்னார். ஆனா, என்னை எப்படி இந்த ரோலுக்கு செலக்ட் பண்ணினார்னு யோசிச்சேன். எந்த மாதிரி ரோலா இருந்தாலும் நடிக்கிறவன் தானே நடிகன். அதுல பாசிட்டிவ் கேரக்டரா இருந்தா என்ன, நெகட்டிவ் கேரக்டரா இருந்தா என்ன..? என்னோட நடிப்புக்கு இப்போ செம ரெஸ்பான்ஸ்” என்கிறார் பூரிப்பின் உச்சத்தில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்!’’

``இவரைப்போலவே மிரட்டிய இன்னொரு ரோல் தேனப்பன் சாருடையது’’ என நித்திலன் சொல்ல, படத்தில் வருவதுபோலவே சின்னச் சிரிப்புடன் பேசத்துவங்கினார் தேனப்பன்.

‘`நான் படங்கள் தயாரிக்க ஆரம்பித்ததில் இருந்தே பாலா, சுசீந்திரன்னு நிறைய இயக்குநர்கள் என்னை நடிக்கச் சொல்லிக் கேட்டாங்க. நான் மறுத்துக்கிட்டே இருந்தேன். ஏன்னா, ஒரு நடிகர் அதிக டேக் வாங்கும்போது ஓர் இயக்குநருக்கு எவ்வளவு சிரமம், தயாரிப்பாளருக்கு எவ்வளவு செலவுன்னு எல்லாமே எனக்குத் தெரியும். இந்தப் படத்தில் நடிக்க நான் ஒப்புக்கிட்டதுக்குக் காரணம், நித்திலன் இயக்கிய `புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ குறும்படத்தைக் கமல் சார் பார்த்துட்டு, `நான் பார்த்த பெஸ்ட் குறும்படம்’ இதுதான்னு சொன்னார். அது மட்டுமில்லாம, இந்தப் படத்தில் நடிக்க பாரதிராஜா சார் ஒப்புக்கிட்டார்னு கேள்விப்பட்டதும் நானும் நடிக்க ஒப்புக்கிட்டேன்” என்றவரைப் பார்த்து ``அதென்ன பாட்டுய்யா. ஆங்... கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்... அசத்திட்டியேய்யா’’ எனத் தேனப்பனைப் பார்த்த பாரதிராஜா, ``தம்பி கல்கி, என்னப்பா படத்தில் அசத்திப்புட்டு அமைதியா இருக்கே... பேசு’’ என்றதும், குழைவான சிரிப்புடன் பேசுகிறார் கல்கி.

``நான் இந்தப் படத்தில் முதல்ல உதவி இயக்குநராத்தான் இருந்தேன். குறும்பட டைம்ல இருந்தே நானும் நித்திலனும் நல்ல நண்பர்கள்’’ எனக் கல்கி அடக்கி வாசிக்க,  ``கல்கிக்குள்ள எப்பவும் ஒரு நடிகன் அலெர்ட்டா இருப்பான். அடிக்கடி நான் அதைப் பார்த்திருக்கேன். ஆனா, நடிக்கணும்ங்கிற ஆசையை அவர் சொன்னதே இல்லை. இந்த ரோல் இவருக்குச் சரியா இருக்கும்னு தோணினதும் நீயே நடின்னு சொன்னேன். இப்போ இவர் வர்ற சீன்ல தியேட்டரே அதிருது’’ என நடிக்கவைத்த காரணத்தைச் சொல்கிறார் நித்திலன். 

``அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்!’’

“இந்தப் படத்தில் நடித்தவர்கள் மட்டுமில்லை. இதில் வொர்க் பண்ணின டெக்னீஷியன்ஸும் ரொம்ப அற்புதமா வேலை பார்த்திருக்காங்க’’ என பாரதிராஜா பாராட்ட முகம் பளிச்சிடுகிறது ஒளிப்பதிவாளர் உதயகுமாருக்கு. ``படத்தில் நிறைய ஐடியாக்கள் நித்திலனுடையதுதான். அவர் சொன்ன சில விஷயங்களை என்னால செய்ய முடியலை. ஆனா, படத்தின் ஒவ்வொரு சீனுக்குப் பின்னாடியும் அத்தனை உழைப்பு இருக்கு. அதுக்குத்  தகுந்த அங்கீகாரம் கிடைச்சிருக்குங்கிற போது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ எனச் சிலிர்க்கிறார். சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்த விதார்த்திடம் ``எப்படி பாஸ் `குற்றமே தண்டனை’, `ஒரு கிடாயின் கருணை மனு’, `குரங்கு பொம்மை’னு யுனிக்கான ஸ்கிரிப்ட்களுக்காக வெயிட் பண்ணிப் படம் பண்றீங்களா?’’ எனக் கேட்டோம்.

“ `மைனா’ படத்துக்கப்புறம் எனக்கு வந்த படங்கள் எல்லாத்தையும் பண்ணும்போது, தோல்விகள் நிறைய வந்தன. அந்தத் தோல்விகள் என்னையோ என் குடும்பத்தையோ பாதிக்கலை. ஆனால், வெளியில் என்னைச் சந்திக்கிற மக்கள் கேட்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியலை. அவங்களுக்குப் பதில் சொல்றதுக்கு ஒரே வழி, நல்ல படங்களை மட்டும் பண்றதுதுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன். அந்த மாதிரிப் படங்கள் மட்டும் பண்ண ஆரம்பிச்சேன்” என்றவரிடம், ``ஆனால், தொடர்ந்து அமைதியா எந்த அலட்டலும் இல்லாத மாதிரியான கதாபாத்திரங்களாவே உங்களைத் தேடி வருதா, இல்லை நீங்களேதான் செலெக்ட் பண்றீங்களா?’’ என்றார் கல்கி.

``கூத்துப்பட்டறையில் லைவ்வா மக்கள் முன்னாடி நடிக்கும்போது ஓவர் ஆக்டிங் தேவைப்பட்டது. ஆனால், அது சினிமாவுக்குத் தேவைப்படலை. சின்னச் சின்ன அதிர்வுகள்கூட கேமராவில் பதிவாகும் என்பதால், இந்த மாதிரி சிம்பிளா நடிச்சாலே போதுமானதாக இருக்கு” என்கிறார்.
 
இயக்குநர் நித்திலனிடம், ‘`எப்படிப் படம் நெடுக நெகட்டிவ் கேரக்டர்களை வைத்தே ப்ளே பண்ணினீங்க?’’ எனக் கேட்டதும், “பாசிட்டிவ், நெகட்டிவ்னு கிடையாது. இந்தப் படத்தில் எல்லோருக்கும் ஒரு தேவை இருந்தது. அந்தத் தேவைதான் அந்த கேரக்டர் யார்னு டிசைட் பண்ணுது. நெகட்டிவ்வாகவே எல்லாத்தையும் காண்பிக்கணும்னு நினைக்கலை. ஒரு சம்பவத்தை எடுத்துக்கிட்டு அதை உண்மைக்கு நெருக்கமாச் சொல்லணும்னு நினைச்சுதான் ஸ்கிரிப்ட் பண்ணினேன். மத்தபடி ஆடியன்ஸை அழ வைக்கணும்னு எதுவும் நெகட்டிவ்வா பண்ணலை” என்று நித்திலன் சொல்லிக்கொண்டிருக்கும்போது இடைமறித்த பாரதிராஜா, “ஸீ... நம்ம எல்லோரும் பாசிட்டிவ் கேரக்டர்கள்தான். நமக்குள்ளும்  ஐந்து சதவிகிதம், 10 சதவிகிதம் நெகட்டிவ் இருக்கும். யாரும் பரிசுத்தமானவனும் இல்லை, கொலைகாரனும் இல்லை. அந்த உண்மையை அப்படியே படம் எடுத்தால்தான் யதார்த்தம். இப்போ அப்படித்தான் எடுக்கணும். ஒருத்தனோட வாழ்க்கையைச் சொல்லும்போது, அதில் இருக்கிற அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்” எனப் பாரதிராஜா சொல்ல ஓட்டுமொத்த டீமும் நித்திலனைப் பாராட்ட, சின்னச் சிரிப்போடு  கடந்துபோகிறார் நித்திலன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism