
தலைவருக்கு எது அலர்ஜி?
தொகுதி மக்கள் தான்!
- அம்பை தேவா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``வாட்ஸ் அப் குரூப் அட்மின் மேல தலைவர் ஏன் கோபமா இருக்கறார்?”
“குரூப் தாவ மாட்டேன்னு உறுதியளிச்சாத்தான் குரூப்ல சேர்ப்பேன்னுட்டாராம்!”
- வி.சகிதாமுருகன்.

“தலைவரே! யாரோ, கூடப் படிச்சவராம்! உங்களை கேட்டு போன் பண்றார்!”
“எல்லோருமே, என்னை விட கூட படிச்சவங்க தான்! யார்னு கேட்டு சொல்லு!”
- கி.ரவிக்குமார்

``மன்னா உங்களிடம் விவேகம் இல்லை என்று எதிரி ஒலையில் குறிப்பிட்டிருக்கிறான்’’
``அவன் சொல்வது உன்மை தான் அமைச்சரே அந்த சி.டி என்னிடம் கிடையாது!’’
- எஸ்.முகம்மது யூசுப்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism