பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

 “எங்களுக்கு  ஆதரவாக  நாற்பது எம்.எல்.ஏக்கள்  உள்ளனர்...”

``பிரயோஜனமில்லே தலைவரே... அவங்களுக்கு  ஆதரவா  கவர்னர் இருக்கார்!’’

- சீர்காழி வி.வெங்கட்

ஜோக்ஸ் - 4

“என்னங்க... இனிமே சங்கம், தனி நபர் யாரா இருந்தாலும் போராட்டம் பண்ணக்கூடாதுன்னு கோர்ட் சொல்லி இருக்காம்!”

“அதை ஏன் என்னிடம் சொல்றே!”

- கே. அருணாசலம்

ஜோக்ஸ் - 4

``என்ன உங்க பையன் தொடந்து பேசிகிட்டே இருக்கான்?!’’

``அன் லிமிட்டடு சிம் கார்ட முழுங்கிட்டான் டாக்டர்’’

- எஸ்.சேக் சிக்கந்தர்.

ஜோக்ஸ் - 4

“அரசியல் குழப்பம் தலைவரை ஆட்டிப்படைக்குதுன்னு எதைவச்சி சொல்றீங்க?”

“ ‘ஸ்லீப்பர் செல்’ சேர்ப்பு முகாம் நடத்தச் சொல்றாரே!”

- மு.நந்தனா

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு