
``கட்சி ஆபீஸில் எதற்கு மோப்ப நாய் சுற்றிக்கிட்டு இருக்கு?”
“ஸ்லீப்பர் செல்களை மோப்பம் பிடிச்சு குலைக்குமாம்!”
- எஸ்.ராமன்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``50 பிச்சக்காரங்களுக்கு சாப்பாடு போடணும் என்னப்பா பண்றது?”
``நம்ம வாட்ஸ்அப் குரூப்ல போட்டா எல்லாரும் வந்துடுவாங்க... கூல்”
- அ.ரியாஸ்

``கட்சிக்காரங்க மத்திய அரசை ஆதரிக்கிறது அப்பட்டமாயிடிச்சி!”
``எப்படி?”
``ஆதார் கார்டை காட்டினாதான் பிரியாணி பாக்கெட் தருவாங்களாம்!”
- அ.ரியாஸ்

“சர்வர் ஏன் ‘மாங்கல்யம் தந்துனா நேனா’னு சொல்லிக்கிட்டே சாப்பாட்டை கொண்டு வந்து வைக்கிறார்?”
“இது, சவுத் இண்டியன் ‘தாலி’யாம்..”
- பர்வீன் யூனுஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism