
“தலைவர் இடுப்பை வளைத்துக் குனிந்து குனிந்து ஆடுகிறாரே... என்ன டான்ஸ் இது?”
“ஏதோ, டெல்லி டான்ஸாம்!”
- கி.ரவிக்குமார்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“டாக்டர்! ஸ்பெஷல் வார்டுன்னு சொல்றீங்க...அப்படி எதுவும் விசேஷமா தெரியலையே?”
“உங்களுக்குக் கண்ணுலேயும் பிரச்னைபோல.. கண் ஆபரேஷனையும் சேர்த்தே பண்ணிடலாமா?”
- ஓரியூர் கே.சேகர்

``ஓடி வர்ற மன்னரை, எதிரி துரத்திப் பிடித்து என்ன சொன்னார்?’’
``நாட்டைத் தராவிட்டாலும் பரவாயில்லை. துணை மன்னரா அறிவித்தால் போதும்னு சொல்லிருக்கார்!’’
- அம்பை தேவா

``லோன் அப்ளிகேஷன் எழுதணும். பேனா தாங்க சார்!’’
``லோன் கிடைச்சா முதல்ல பேனா வாங்குங்க!’’
- அ.ரியாஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism