பாம்பைக் கண்டாலே பதறி நடுங்கும் பயந்தாங்கொள்ளி, எண்டுகார்டுக்கு முன் வீரனாகும் காமெடிக் கதம்பமே `கதாநாயகன்’.
ஒற்றை அரிசியில் எழுதிவிடக்கூடிய ஒன்லைனை அரைத்து ஒரு ஃபேமிலி தோசையே சுட்டிருக்கிறார் இயக்குநர் முருகானந்தம்.
`கதாநாயகன்’ விஷ்ணு விஷால். பலமுறை பண்ணின அதே பழைய பாத்திரம்தான் என்றாலும் இதில் புதிதாக பனியன் தெரிய சட்டையைக் கழற்றி வித்தியாசம் காட்டியிருக்கிறார். சூரியின் என்ட்ரிக்கு தியேட்டர் தெறிக்கிறது. ஆனால், அவருடைய தப்புத்தப்பு ஆங்கில காமெடி பல இடங்களில் திகட்டுகிறது. ரூட்டை மாத்துங்க ப்ரோவ்வ்! கேத்ரின் தெரசாவுக்குக் கொஞ்சம் நடிப்பு, நிறைய கிளாமர் என்ற வழக்கமான வேடம்.

துபாய் ஷேக்காக ஆனந்தராஜ், டான் சிங்கத்தின் விசுவாசியாக அருள்தாஸ், சூப்பர் சிங்கர் `நான் கடவுள்’ ராஜேந்திரன் என சிரிக்க வைக்க படத்தில் நிறைய கேரக்டர்கள். கூடவே விஜய் சேதுபதியின் சிறப்புத் தோற்றம், எல்லாமே நைஸ் நைஸ். படத்தின் பக்கபலமே இந்தக் குட்டிக் குட்டி வித்தியாசப் பாத்திரங்கள்தான்.
சூரியை அவர் மனைவி வீட்டு வாசலில் வைத்துத் தூக்கிப்போட்டு மிதிக்கும்போது, பின்னணியில் இருக்கும் அவர்களது பத்தாவது திருமண நாள் ஃப்ளெக்ஸ், துபாய் ஷேக் ஆனந்தராஜ் வீட்டில் மாட்டப் பட்டிருக்கும் ஒட்டகம், ஆனந்தராஜின் லிப்லாக் புகைப்படம் என இரண்டே நொடிகள் திரையில் வந்துபோகக்கூடிய குட்டி விஷயங்களில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் முருகானந்தம். இந்த மெனக்கெடலை இன்னும் கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம்.
குடிக்கு எதிராகத் தமிழகமே களத்தில் இறங்கிக் கடைகளை உடைத்துக்கொண்டிருக்கும் காலத்தில் நாயகனுக்கு சரக்கு அடித்தால் மட்டுமே தைரியம் வருவதுபோல் காட்டியிருப்பது தப்பில்லையா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முருகானந்தம்?
`அநியாயத்தைத் தட்டிக்கேட்டு அடிக்கிறவன் மட்டும் தைரியசாலி இல்ல, அநியாயத்தைத் தட்டிக்கேட்டு அடிவாங்குறவனும் தைரியசாலிதான்’ மாதிரி பன்ச் வசனங்கள் தேறுகின்றன.
லக்ஷ்மனின் ஒளிப்பதிவில் குறை ஒன்றும் இல்லை. பின்னணி இசையில் நகைச்சுவை கோத்து அழகாகக் கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். டான் சிங்கத்தின் ‘அய்யய்யயி’ தீமும், நாயகனுக்கான நக்கல் ஒப்பாரியுமே சாம்பிள்ஸ்!
கதை, திரைக்கதை, இயக்கம், லாஜிக், மூளை, பாப்கார்ன் டேஸ்ட், ஏ.சி, டிக்கெட் விலை என எதைப் பற்றியும் கவலை இல்லாத வர்களுக்கு இந்தக் கதாநாயகனைக் கொஞ்சம் பிடிக்கும்!
- விகடன் விமர்சனக் குழு