Published:Updated:

“அப்பா இயக்க... நான் நடிக்க”

“அப்பா இயக்க... நான் நடிக்க”
பிரீமியம் ஸ்டோரி
“அப்பா இயக்க... நான் நடிக்க”

தார்மிக் லீ

“அப்பா இயக்க... நான் நடிக்க”

தார்மிக் லீ

Published:Updated:
“அப்பா இயக்க... நான் நடிக்க”
பிரீமியம் ஸ்டோரி
“அப்பா இயக்க... நான் நடிக்க”

வெரைட்டியான  கதாபாத்திரங்கள்  மூலம்  விறுவிறுவென  முன்னேறிக் கொண்டிருக்கிறார்  கெளதம் கார்த்திக். வாட்ஸ்அப் வைரலான ‘ஹரஹர மஹாதேவகி’ மூலம் ட்ரெண்டுக்கு வரும் கெளதமிடம் பேசினேன்.

“அப்பா இயக்க... நான் நடிக்க”

‘` `ஹரஹர மஹாதேவகி’னு தலைப்பே செம குறும்பா இருக்கே?’’

‘`படத்தோட ஜானர் ரொமான்டிக் காமெடிதான். ஆனால், ரொமான்ஸைவிட அதிகமாக காமெடிதான் இருக்கும். காமெடியுமே முழுக்க அடல்ட் ஹ்யூமர்தான். ரொம்ப வித்தியாசமா, ஒரு ட்ரெண்ட் செட்டிங் படமா இருக்கும்னு நம்புறோம். படம் முழுக்கவே கலர்ஃபுல்லாதான் இருக்கும். இதுக்கு முன்னாடி நடிச்ச ‘இவன் தந்திரன்’, ‘ரங்கூன்’ ரெண்டுமே வேற வேற ஜானர். இதையும் அப்படித்தான் செலக்ட் பண்ணேன். நான் எதுல எல்லாம் ஸ்ட்ராங்னு தெரிஞ்சுக்க இந்த முயற்சிகள் உதவியா இருக்கு. இது மாதிரி வெரைட்டியா நடிச்சாத்தான் ஆடியன்ஸோட ரியாக்‌ஷன் எப்படி இருக்குன்னு பார்க்க முடியும். ஒரே நேரத்துல ரொமான்ஸ், சோஷியல் மெசேஜ், காமெடி, ஆக்‌ஷன்னு நிறைய ஜானர் படங்கள்ல நடிக்கணும். அதுதான் என்னோட ஆசை.’’

‘’படத்துல பெரிய காமெடிப் பட்டாளமே இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன மாதிரியான கலாட்டா நடந்தது?’’

‘`படத்துல வர்ற எல்லாக் கதாபாத்திரங்களையுமே இயக்குநர் கரெக்டா வடிவமைச்சிருந்தார். அவங்களுக்கு என்ன மாதிரியான காமெடி வருமோ, அது மாதிரிதான் கேரக்டரை டிசைன் பண்ணியிருக்கார். ஷூட்டிங் ஆரம்பிச்ச நாள்ல இருந்து, முடியற வரைக்கும் ஒட்டுமொத்த செட்டுமே ரொம்பக் கலகலன்னு இருந்துச்சு. அதனால படத்துலேயும் காமெடி பண்றதுக்கு வசதியா போயிடுச்சு. குறிப்பா எனக்கும் சதீஷுக்கும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி அமைஞ்சிருக்கு. செட்டுலேயும் சரி, ஷூட்டிங்கிலேயும் சரி... செம ரகளை நடக்கும். அதுவும் இல்லாம கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியான்னு நிறைய காமெடி நடிகர்களோட நடிச்சது இன்னும் ஜாலியா இருந்துச்சு.’’

‘’2016-ல அப்பா உங்களை வெச்சுப் படம் எடுக்கப் போறதா சொன்னாங்க. அப்புறம் என்னாச்சு?’’

‘`அப்பாவுக்கு இயக்குநர் ஆகணும்னு ரொம்பநாள் ஆசை. எப்பவுமே ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பார். கதை எழுதிக்கிட்டே இருப்பார். இப்போவரைக்கும் நாலைஞ்சு கதை எழுதியிருக்கார். ‘மொதல்ல நான் ஒரு இயக்குநரா நின்னுக்கிறேன். அப்புறம் உன்னை வெச்சு படம் எடுக்கிறேன்’னு சொல்லியிருக்கார். ஆனா, அதுக்குக் கொஞ்சநாள் ஆகும். அந்த நாளுக்காகத்தான் நான் வெயிட் பண்றேன்.’’

‘`படத்தோட விமர்சனத்தை ஒரு சின்ன மீம்ல அடக்கிடுறாங்க. இந்த மீம்கள்ல அதிகம் அடிபட்டது உங்க `முத்துராமலிங்கம்’ படம்தான். அந்த மீம்களை எல்லாம் பார்த்துட்டு எப்படி ரியாக்ட் பண்ணீங்க?’’


‘`படம் பண்ணும்போது எனக்கு எதுவும் தெரியலை. இந்தப் படத்துல கிராமத்து பாணியில கொஞ்சம் வித்தியாசமா முயன்று நடிக்கலாம்னுதான் அந்தப் படம் பண்ணவே ஓகே சொன்னேன். ஷூட் ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே எதிர்பார்க்காத சில பிரச்னைகள்  வந்துச்சு. அதனால படத்தோட கதையே மாற ஆரம்பிச்சுது. அப்படியே படமும் ‘யூ டர்ன்’ அடிக்க ஆரம்பிச்சிருச்சு. இதுல ஒரு நடிகரா என்னால் என்ன செய்ய முடியும்? ஒரு கமிட்மென்ட் கொடுத்துட்டேன், அதை நான் கண்டிப்பா முடிச்சே ஆகணும், படமும் ரிலீஸ் ஆச்சு. படத்தோட ரிசல்ட்டும் என்னன்னு எல்லோருக்கும் தெரியும், அவ்வளவுதான். இந்தப் படத்துல இருந்துதான் என்ன மாதிரியான படங்கள் செலக்ட் பண்ணலாம், ஒரு பிரச்னை வந்தா, அதை எப்படிச் சமாளிக்கலாம்னு கத்துக்கிட்டேன். அப்படிப் பார்த்தா, ‘முத்துராமலிங்கம்’ படம் எனக்கு ப்ளஸ்தான்.’’

‘’கடைசியா இந்தக் கேள்வி கேட்டு பேட்டியை முடிக்கணும்னு சட்டத்துல சொல்லியிருக்கு. எப்ப ப்ரோ கல்யாணம்?’’ 

‘`என்னங்க நல்லா பேசிட்டிருக்கும்போதே பொசுக்குனு இப்படி எல்லாம் கேட்கிறீங்க. அது நடக்கும்போது கண்டிப்பா சொல்றேன்.’’