Published:Updated:

``எனக்கு பக்குவம் பத்தாது!”

``எனக்கு பக்குவம் பத்தாது!”
பிரீமியம் ஸ்டோரி
``எனக்கு பக்குவம் பத்தாது!”

ஆர்.வைதேகி

``எனக்கு பக்குவம் பத்தாது!”

ஆர்.வைதேகி

Published:Updated:
``எனக்கு பக்குவம் பத்தாது!”
பிரீமியம் ஸ்டோரி
``எனக்கு பக்குவம் பத்தாது!”

லகலவெனப் பேசுகிறார்  சூரி. `இப்படை வெல்லும்’, `ஸ்கெட்ச்’, `நெஞ்சில் துணிவிருந்தால்’, `சாமி 2’, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம் என சூரி காட்டில் அடைமழை.

``எனக்கு பக்குவம் பத்தாது!”

``என்ன பிரதர். உடம்பை எல்லாம் குறைச்சு இன்னும் ஃபிட்டாகி இருக்கீங்க.ஜிம்முக்குப் போறீங்க போலிருக்கே. ஹீரோ ஆசையா?’’

‘`பக்கத்து வீட்டுல 70 வயசுத் தாத்தாகூட தெனமும் ஜிம்முக்குப் போறாரு. அதுக்காக அவர் ஹீரோவாகப் போறாருன்னா அர்த்தம்? உடம்பை ஆரோக்கியமா வெச்சுக்கிறதுல தப்பே இல்லையே... சினிமாவில இருக்கோம். ரொம்பதூரம் போக வேண்டியிருக்கு. கொஞ்சம் ஃபிட்டா வெச்சுக்கிருவோம். சின்னச் சின்னப் பசங்க வர ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க வாடா, போடான்னு கூப்பிடுற அளவுக்கு நாம இருக்கணும்ல... அதனால உடம்பைக் கொஞ்சம் மெயின்டெயின் பண்ணிட்டிருக்கேன்.’’

``ஹீரோக்களே காமெடி பண்ற சீஸன்ல, படத்துல அவங்க உங்களை ஓவர்டேக் பண்ணிடுவாங்களோனு பயப்படறதுண்டா?’’

‘`சிவகார்த்திகூட நடிக்கிறப்போ அப்படி நினைக்கிறதுண்டு. சாதாரண, ட்ரையான சீனைக்கூட நாங்க ரெண்டு பேரும் சேர்றப்ப ஹ்யூமராக்க முடியும்.  எப்பவுமே அலர்ட்டா இருப்பேன். ஒரு நிமிஷ சீன்ல முக்கால் நிமிஷம் நம்மளை விளையாட விட்ருவாப்ல. லாஸ்ட்ல கட் சொல்ற கேப்புல ஒரு பன்ச் மிஸ் ஆகிடும். அதுக்கு  நான் ரெடியா இருக்கணும். சில நேரத்துல என் டயலாக் முடிஞ்சு  யாராவது ஓர் ஆளு ஃப்ரேம் அவுட் ஆகிற மாதிரி இருக்கும். அதுக்கப்புறம் ஃப்ரேமுக்கு ஓர் ஆள்தான். நாம வெளில போனா ஈஸியா பன்ச் அடிச்சிருவாப்ல. உள்ளே வர முடியாது.  நான் வெளிய போற மாதிரி ஒரு எட்டு வெச்சுத் திரும்ப நின்னுடுவேன். அந்த பன்ச் அடிச்சதும் திரும்ப பேக் அடிச்சு ஒரு பன்ச் வெச்சுட்டுப் போயிடுவேன். சிவாகூட நடிக்கிறப்போ ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு செகண்டும் பன்ச் யோசிச்சிட்டே இருப்பேன். காலையில வண்டியில ஏறி உட்கார்ந்தவுடனே சீன் பேப்பரைப் படிச்சு யோசிக்க ஆரம்பிச்சிருவேன்.  அந்தப் பக்கம் கார்த்தியும் கார்ல பேப்பரைப் படிச்சிட்டே வருவாப்ல... அது எங்க ரெண்டு பேருக்குமான அன்பான ஒரு போரா இருக்கும்.’’

``எந்த ஹீரோகூட நடிக்கணும்னு ஆசை?’’


‘`இன்னைக்கு இருக்கிற எல்லா யூத் ஹீரோக்களுடனுமே நடிக்கிறது எனக்கு கிரவுண்டுல சிக்ஸ் அடிக்கிற மாதிரிதான். அதே நேரத்துல தம்பி சிவகார்த்திகூட நடிக்கிறது கிரவுண்டுல வின்னிங் ஷாட் அடிக்கிற மாதிரி. தோனி மாதிரி ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கிற மாதிரினு வெச்சுக் கோங்களேன். சூப்பர் ஸ்டார், உலகநாயகன் சார் கூடல்லாம் நடிக்கணும்.’’

``எனக்கு பக்குவம் பத்தாது!”

``தப்புத்தப்பா ஆங்கிலம் பேசுறதையே உங்களுக்கான ஸ்டைலா வெச்சுக் கிட்டீங்க. ஆங்கிலம் பேசத் தெரியலையேன்னு என்னிக்காவது வருத்தப்பட்டிருக்கீங்களா?’’

‘`நான் கரெக்டா பேசணும்னு நினைச்சாலும் அப்படித்தான் வரும்.  அதுல எனக்கு சந்தோசம்தான். வெளியூரு, வெளிநாடுகளுக்குப் போகும்போது வருத்தப்படறேன். மற்றபடி ரொம்பப் படிக்காமப் போயிட்டேன்னு வருத்தப்படலை. ஏன்னா, நான் நல்லாப் படிச்சிருந்தா, இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டேன்.

ஷூட்டிங்ல ஹீரோவும் ஹீரோயினும் இங்கிலீஷ்ல பேசும்போது படாதபாடுபடுவேன். நான் மட்டும் ஓரமா நிற்கிற மாதிரியிருக்கும். இருந்தாலும் ஒரு பாயின்ட்டைப் புடிச்சிப்புடுவேன். ‘எஸ்...எஸ்...கட்... கட்... யூ லுக்கிங் கேப்பு... மை டயலாக் டெலிவரிங்’னு எதையாச்சும் சொல்லி மேட்ச் பண்ணிட்டுப் போயிருவேன். ஹீரோயினே அதைப் பயங்கரமா என்ஜாய் பண்ணிச் சிரிச்சிடுவாங்க.இந்த விஷயத்துல ஸ்ருதி ஹாசனும் தம்பி விஷாலும் என்னை ரொம்ப ஓட்டுவாங்க. ஸ்ருதி ஹாசன் போனைப் போட்டுத் தங்கச்சி அக்‌சராகிட்ட குடுத்து என்னை இங்கிலீஷ்ல பேச வெச்சு என்ஜாய் பண்ணுவாங்க. நைட் மூணுமணிக்கெல்லாம் பேச வெச்சு சிரிச்சிருக்காங்க. குவாலிபிகேசன்னு ஒரு வார்த்தையை என்னைச் சொல்ல வெச்சு விளையாடுவாங்க.’’

``இன்றைய காமெடிங்கிறது ஆபாசமும் கலந்ததாகவே இருக்கு. அந்த விஷயத்துல உங்களுக்கு ஏதாவது கொள்கைகள் இருக்கா?’’

‘`ஆபாசமா பண்ண வேண்டாம்னுதான் நினைக்கிறேன். ஆனா, காமெடியில் ஆபாசம்ங்கிறது வள்ளித்திருமண நாடகக் காலத்துலேர்ந்தே  இலைமறை காயா இருந்திருக்கு. அந்த மாதிரி நகைச்சுவைங்கிறது ஒருத்தங்களை முகம்  சுளிக்க வைக்காம, அதே நேரம் சிரிக்க வைக்கிறதாகவும் இருக்கணும்னு நினைக்கிறேன்.’’

``பிக்பாஸ் வீட்டுக்குள்ள போக உங்களுக்கு அழைப்பு வந்தா போவீங்களா?’’

‘`ராங் நம்பர்னு சொல்லிடுவேன். என்னாலவெல்லாம் பத்து நிமிஷம்கூட அங்க இருக்க முடியாது. எனக்கு நேரமுமில்லை. என்னால குழந்தைகளை, ஃபேமிலியை எல்லாம் பிரிஞ்சிருக்கவும் முடியாது. எனக்குப் பக்குவம் பத்தாது.அங்க இருக்கிறது பெரிய விஷயம். இருக்கிறவங்களுக்கு என் வாழ்த்துகள்.’’