பிரீமியம் ஸ்டோரி

சிரிச்சா செம அழகு... கண்கள் செம பவரு... கன்னங்கள் செம கலரு... என ரகுல் ஃபீவரில் இருக்கிறது கோலிவுட். `ஸ்பைடர்’, `தீரன் அதிகாரம் ஒன்று’, இந்தியில் `அய்யாரி’ என ரகுலின் கிராஃப் எகிறிக்கொண்டிருக்கிறது. டெல்லிப் பொண்ணான ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேசினேன்.

‘`அப்பா பெயர் ராஜேந்தர் சிங். அம்மா குல்விந்தர் சிங். அவங்க ரெண்டு பேரோட பெயரையும் சேர்த்ததுதான் ரகுல். அப்பா ஆர்மி ஆபீஸர். 18 வயசாகி, 10 நாள் முடிஞ்சதும் மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். ‘கஜினி’யும் ‘கத்தி’யும் பார்த்துட்டு ஏ.ஆர்.முருகதாஸ் ரசிகையாவே மாறிப் போயிருந்த எனக்கு அவர் டைரக்‌ஷன்லேயே நடிக்க வாய்ப்பு வந்தது; இந்த நிமிஷம் வரை கனவு மாதிரிதான் இருக்கு’’ எனப் படபடவெனப் பேசுகிறார் ரகுல்.

அழகு...பவரு...கலரு!

`` `ஸ்பைடர்’ படத்துல உங்க ரோல் பற்றிச் சொல்லுங்க?’’

 ``படத்துல சைன் பண்ணினபோது கதை என்னன்னுகூடக் கேட்கத் தோணலை. அந்த ஆச்சர்யத்திலேர்ந்தே வெளியில் வராத எனக்கு மகேஷ்பாபுகூட நடிக்கிறேங்கிறது அடுத்த ஸ்வீட் ஷாக். இந்தப் படம் நிஜமாவே எனக்கொரு லைஃப்டைம் எக்ஸ்பீரியன்ஸ். இதில் எனக்கு மெடிக்கல் ஸ்டூடன்ட் கேரக்டர். கொஞ்சம் காமெடியும் பண்ணியிருக்கேன்.  என் காமெடி சென்ஸைப் பார்த்து முருகதாஸ் சார் பாராட்டினது விருது வாங்கினதுக்குச் சமம்.’’ 

``ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்குனு `ஸ்பைடர்’ பைலிங்குவல் படம். வேலை நிறைய இருந்திருக்குமே?’’

``இதுதான் என்னோட முதல் பைலிங்குவல் படம்கிறதால பல விஷயங்கள் புதுசு. ஒரே நேரத்துல ஒரே டயலாக்கை ரெண்டு லேங்வேஜ்ல ஞாபகம் வெச்சுக்கிறது ரொம்பக் கஷ்டம். எனக்கு சரளமா தெலுங்குப் பேசத் தெரியும். தமிழ் புரியும்; ஆனால், பேசத் தெரியாது. டயலாக் பேசறதைவிடவும் சவாலான விஷயம் டான்ஸ். தெலுங்குல மூவ்மென்ட்ஸ் ஃபாஸ்ட்டா இருக்கும். தமிழ்ல ஸ்பீடைக் குறைக்கணும்னு   டான்ஸ் ஆடியே டயர்ட் ஆனேன்.’’

அழகு...பவரு...கலரு!

`` `தீரன் அதிகாரம் ஒன்று’ படம் எப்படி வந்திருக்கு?’’

``  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வித்தியாசமான படம். எனக்குத் தமிழ்ல நிச்சயம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.  கார்த்தியின் மனைவியாக, மிடில் கிளாஸ் பொண்ணா நடிச்சிருக்கேன்.’’

``ரகுலின் தனித்துவம் என்ன?’’

‘`வாழ்க்கைல எனக்குத் தெரிஞ்ச விஷயங்கள் மூன்று. நடிப்பு, ஃபிட்னெஸ், பிசினஸ். இந்த மூன்றிலுமே செமத் தீவிரமா இருக்கேன். ஹைதராபாத்லேயும், விசாகப்பட்டினத்துலேயும் சொந்தமா ஜிம் ஆரம்பிச்சிருக்கேன். ரெஸ்டாரென்ட் ஆரம்பிக்கிற திட்டமும் இருக்கு. இப்போ நேரம் இல்லை. எதிர்காலத்துல கண்டிப்பா அதுவும் என் லைஃப்ல இருக்கும்.’’

தெளிவு... செமத் தெளிவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு