Published:Updated:

ராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை!

ராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை!
பிரீமியம் ஸ்டோரி
ராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை!

ம.கா.செந்தில்குமார்

ராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை!

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
ராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை!
பிரீமியம் ஸ்டோரி
ராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை!

“ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்க சொல்லணும்னு தோணுது. ‘பாகுபலி’ பணத்தால் மட்டுமே சாத்தியமான விஷயமில்லை. ‘எல்லாரும் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை நிகழ்த்தப்போறோம். அதுக்கு ஒவ்வொருத்தரும் தங்களோட பங்கை சிறப்பா செய்யணும்ங்கிற அந்த மனசுதான் சார் இது நிகழக் காரணம்.” - சின்ன சின்னப் புன்னகைகளோடு அடக்கமாக, இயல்பாகப் பேசுகிறார் ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த படத்தில் நடித்தவர், இப்போது ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிக் கொண்டிருக்கும் ‘சாஹோ’வில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினேன்.

ராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை!

“ ‘பாகுபலி’க்குப் பிறகான ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?”

“ ‘பாகுபலி’ ரிலீஸுக்குப்பிறகு ஃபாரின் கிளம்பிப்போயிட்டேன். ‘தமிழ்நாடு, ஆந்திரா உட்பட ஸ்கிரீன் பண்ணின ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரிய கலெக் ஷன்ஸ். முதல் ஆயிரம் கோடி படம். நல்ல ரெஸ்பான்ஸ்...’ - இப்படி  ராஜமெளலிகிட்ட இருந்து ஏகப்பட்ட  வாட்ஸ்அப் மெசேஜ். இது, ஒரு விஷயத்தின்மேல் நம்பிக்கைவெச்சு, நாலரை வருஷம் கடினமா உழைச்ச ஒரு டீமுக்குக் கிடைச்ச பரிசு, பலன்.  ஆனால், முதல் பார்ட்டுக்கு இந்தளவுக்கு டென்ஷன் இல்லை. ஏன்னா, என்ன எதிர்பார்ப்புனு தெரியாமலேயே அதைப் பண்ணி முடிச்சிட்டோம். அதுக்குக் கிடைத்த ரிசல்ட், அதைத்தொடர்ந்து, ‘பாகுபலியை கட்டப்பா கொன்னது ஏன்’ என்பதில் தொடங்கி ஏகப்பட்ட பரபரப்பு. அதனாலதான் இரண்டாவது பார்ட்டுக்கு அவ்ளோ பெரிய எதிர்பார்ப்பு. அது எங்களை கடுமையான படபடப்புக்கு ஆளாக்கிடுச்சு. அதையெல்லாம் தாண்டி 2-வது பார்ட்டும் திரையிட்ட எல்லா இடங்கள்லயும் சக்சஸ் ஆகியிருக்கு. எல்லாருக்கும் இப்படி அமையாது. எங்களுக்கு அமைஞ்சிருக்குனு நினைக்கும்போது நாங்க ரொம்ப ஆசீர்வதிக்கப் பட்டவங்களா உணர்றோம்.”

“ ‘பாகுபலி’யை என்ன எதிர்பார்ப்பில் ஆரம்பிச்சீங்க?”

“இது ராஜமெளலி விஷன். ‘ஒரு மிகப்பெரிய படம் எடுத்தா கண்டிப்பா எல்லாரும் பார்க்க வருவாங்கனு ஒரு நம்பிக்கை இருக்கு’னு சொன்னார்.  அவர் இந்த கான்செப்ட் மேலயும், நாங்க அவர் மேலயும் நம்பிக்கை வெச்சோம். எங்க அதிர்ஷ்டம், ராஜமெளலி சாரின் விஷனை கண்முன்னாடி நிகழ்த்திக்காட்டுற அளவுக்குப்  பெரிய தயாரிப்பாளர் வந்தார். அவர் இதை எந்தளவுக்குப் பெரிய படமா எடுத்தாரோ அதே அளவுக்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் செஞ்சு  இந்தியா முழுக்க எல்லாத் தரப்பு ரசிகர்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்தார். ஆனால், இந்தளவுக்கு ரெஸ்பான்ஸ், பெரிய ஹிட் ஆகும்னு நாங்க யாருமே எதிர்பார்க்கலை.”

ராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை!

“ ‘பாகுபலி’ தந்த எதிர்பார்ப்பை அடுத்தடுத்த படங்கள்ல எப்படித் தக்கவைக்கப்போறீங்க?”

“ `சாஹோ.’ இதுதான் என் அடுத்த படம். டைரக்டர் சுதீப், மூணு வருஷம் உட்கார்ந்து இந்த ஸ்க்ரிப்ட் பண்ணியிருக்கார். இதில் திரைக்கதைதான் ஹீரோன்னே சொல்லலாம். ஆக் ஷன், த்ரில்லர் படம். ‘பாகுபலி’க்குப் பிறகு எல்லாத் தரப்பு ரசிகர்களையும் எப்படி என்டர்டெய்ன் பண்ணணும்னு யோசிச்சுப் பண்ணும் படம். தமிழ், தெலுங்கு, இந்தினு ஒரே நேரத்தில் மூணு மொழிகள்ல பண்றோம்.”

“ ‘பாகுபலி’, இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டைத் திறந்து விட்டிருக்கு. அதன்மூலமா சினிமாவில் என்னென்ன நல்ல விஷயங்கள் நடக்கும்னு நினைக்கிறீங்க?”

“இதுக்கு முன்னயும் தமிழ், தெலுங்கு, மலையாளம்னு மொழிகளைக் கடந்து எல்லாத் தரப்பும் ஏற்றுக்கொண்ட படங்கள் நிறைய வந்திருக்கு. உதாரணத்துக்கு, தெலுங்குப் படமான ‘சங்கராபரணம்’. தெலுங்குல வந்தே தமிழ்நாட்ல மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். அந்தமாதிரியான நிறைய தமிழ்ப்படங்கள் டப் பண்ணி தெலுங்குல மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கு. ‘பிரேமம்’ அது நேரடியா மலையாளத்துல வெளியாகி சென்னையிலயே ரொம்பநாள் ஓடுச்சுனு சொன்னாங்க. சமயங்கள்ல ஆர்ட்டிஸ்ட் யாருனுகூடத் தெரியாத சில தமிழ்ப்படங்கள் ஆந்திரால பிளாக்பஸ்ட்டர் ஆகியிருக்கு.  நல்ல படங்கள்ல ஆடியன்ஸுக்கு மொழி ஒரு பிரச்னையே இல்லை. அவங்க அதை ஒரு படமாத்தான் பார்க்க வர்றாங்க. ‘நாம நல்லா படம் எடுத்தா எங்கேயும் சரியா போகும். அதுதான் ‘பாகுபலி பாடம்.”

“ நீங்களும், ராஜமெளலியும் மீண்டும் எப்போது இணையப் போறீங்க?”

``நானும் ராஜமெளலியும் நல்ல நண்பர்கள். ‘அடுத்து நீங்க என் படத்துல நடிக்கிறீங்க’னு அவரும் சொல்லலை. நானும் கேட்கலை. வழக்கமான அன்போட நட்போட எல்லாமே இயல்பா நடந்துட்டிருக்கு. நாங்க சினிமாவைத் தாண்டி வாழ்க்கையைப்பற்றி நிறைய பேசுவோம். அப்படி ஒருநாள் ராஜமெளலி சார் கூட பேசிட்டிருக்கும்போதுதான், ‘ஒரு நல்ல பீரியாடிக்கல் படம் இருக்கு’னு ஆரம்பிச்சார். அப்படித்தான் ‘பாகுபலி’ அமைஞ்சது. அப்படியான டிஸ்கஷன் மறுபடியும் எப்ப வரும்னு தெரியாது. ஆனால், நாங்க ரெண்டுபேரும் ஒரே குடும்பம் மாதிரிதான்.”

ராஜமெளலியும் சொல்லலை... நானும் கேட்கலை!

“மகேஷ்பாபு, ‘ஸ்பைடர்’னு ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் படம் பண்றார். அதேபோல துல்கர், ஃபஹத்னு நிறைய மலையாள ஹீரோக்கள் இங்க வர்றாங்க. நீங்களும் இப்ப ஒரே சமயத்தில் மூன்று மொழிகள்ல படம் பண்றீங்க. இந்திய சினிமாக்கள்ல இருந்த மொழிகளின் எல்லை உடையுதுனு சொல்லலாமா?”

“ஆமாம் சார். இனி சவுத், நார்த்னு ஆடியன்ஸைப் பிரிக்கக்கூடாது. எப்படிப் பார்த்தாலும் நாம இண்டியன் ஆடியன்ஸ்தானே. மத்த நாடுகள்ல உள்ளவங்களுக்கெல்லாம் ஒரே மொழி. ஆனால் நமக்குதான் இத்தனை மொழிகள். அப்ப எல்லோருக்கும் போய்ச்சேர்கிற மாதிரியான, எல்லோரும் ரசிக்கும்படியான ஸ்க்ரிப்டைப் பிடிச்சுப் பண்ணினால்தான் நல்லா இருக்கும். இப்படி எல்லாருக்குமான படம் பண்ணும்போது நாம இன்னும் பெரிய பட்ஜெட்ல ஹாலிவுட்ல எடுக்கிறதைவிடச் சிறந்த படங்களைப் பண்ணலாம்.”

“நிறைய கிசுகிசுக்கள். அதில் லேட்டஸ்ட், பிரபாஸ்-அனுஷ்கா கிசுகிசுதான்.  என்ன செய்தி?’’

“அனுஷ்காவும் நானும் எட்டு வருஷங்களா நண்பர்கள். ஒரு படத்தில் நடிச்சாலே என்னென்னமோ எழுதுறாங்க. இரண்டு படங்கள்ல தொடர்ந்து நடிச்சா, அதுவும் ‘பாகுபலி’ மாதிரியான படத்துல நடிச்சா நிச்சயம் நம்மளைப் பற்றி நிறைய செய்திகள் வரும்னு எங்களுக்குத் தெரியும். இப்பக்கூட ஒரு நிகழ்ச்சியில அவர் ஏதோ பேச, நான் எதுக்கோ சிரிக்கனு இருக்கிற போட்டோஸைப் போட்டு நாங்க ஏதோ ரொமான்டிக்கா பேசிச் சிரிக்கிறமாதிரி எழுதியிருந்தாங்க. இதெல்லாம் பழக்கமாகிடுச்சு சார்.”

“எப்ப கல்யாணம் பண்றதா பிளான்... காதல் திருமணம் தானே?”

“காதலா, வீட்ல பார்க்கிறதான்னு தெரியலையே! ஆனால், என் கல்யாணம் ஒரு நல்ல நாள்ல நல்லபடியா நடக்கும் சார்.”