Published:Updated:

“விஜய்சேதுபதி டைரக்‌ஷன்ல நடிக்கப்போறேன்!”

“விஜய்சேதுபதி டைரக்‌ஷன்ல நடிக்கப்போறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“விஜய்சேதுபதி டைரக்‌ஷன்ல நடிக்கப்போறேன்!”

உ.சுதர்சன் காந்தி - படங்கள்: பா.காளிமுத்து

“விஜய்சேதுபதி டைரக்‌ஷன்ல நடிக்கப்போறேன்!”

உ.சுதர்சன் காந்தி - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
“விஜய்சேதுபதி டைரக்‌ஷன்ல நடிக்கப்போறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“விஜய்சேதுபதி டைரக்‌ஷன்ல நடிக்கப்போறேன்!”

‘நாம வாழணும்... செம்மையா வாழ்ந்தான்டான்னு சொல்ற  மாதிரி வாழணும்’ என்ற ஒற்றை வசனம்மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த பாபி சிம்ஹா எப்படி வாழ்கிறார்? வீட்டுக்கே போய் பார்த்துவிடலாம் எனப் போனால் வரவேற்றது பிக்ஸி. பாபி சிம்ஹாவின் செல்ல நாய்க்குட்டி.  முகத்தை மட்டும் காட்டி ‘வாங்க வாங்க.. ஒரு டூ மினிட்ஸ்’ என்று சொன்னவர் மனைவி ரேஷ்மி, மகள் முத்ராவுடன் வந்து உட்காருகிறார்.

“விஜய்சேதுபதி டைரக்‌ஷன்ல நடிக்கப்போறேன்!”

‘`எனக்குச் சொந்த ஊர் ஐதராபாத். ஆனால், வளர்ந்தது கொடைக்கானல்ல. காலேஜ் கோயம்புத்தூர்ல படிச்சேன். எனக்கு ஃப்ரண்ட்ஸ் சர்க்கிள் ரொம்பப் பெரிசு ப்ரோ. நாலாவது படிக்கும்போது, ‘குழந்தைகள் திரைப்பட விழா’னு ஒண்ணு நடந்துச்சு. பக்கத்து வீட்டு அங்கிள் அவருக்கு ஃப்ரீயா கிடைச்சுதுனு ஒரு 150 டிக்கெட்டை எனக்குக் கொடுத்தாரு. நானும் க்ளாஸ்ல போய் ‘யாரெல்லாம் படத்துக்கு வர்றீங்க... என்கிட்ட டிக்கெட் இருக்கு’னு ஒரு 100 பேரைக் கூட்டிட்டு ஸ்கூலுக்குப் போகாம ‘லயன் கிங்’ படத்துக்குப் போயிட்டேன். படம் சீக்கிரம் முடிஞ்சவுடனே இப்போ ஸ்கூலுக்குப் போனா மாட்டிக்குவோம்னு நாங்க ஒரு பத்துப் பேரு மட்டும் ‘தில்வாலே’ படத்துக்குப் போனா சரியா இருக்கும்னு தொடர்ந்து அடுத்த  படத்துக்குப் போயிட்டோம். திரும்பி ஸ்கூலுக்குப் போனா ஒரே கூட்டம். சிம்ஹாதான் படத்துக்குக் கூட்டிப்போனான்னு சொல்லவும் எனக்கு டீசி கொடுத்து அனுப்பிட்டாங்க.

“விஜய்சேதுபதி டைரக்‌ஷன்ல நடிக்கப்போறேன்!”

அப்படி வெளியே சுத்திக்கிட்டே இருக்கற ஆள் இந்த பாபி சிம்ஹா. ஆனா இப்போ கல்யாணத்துக்குப் பிறகு நிறைய மாற்றங்கள். பெருசா வீட்டைவிட்டு வெளியே போறதே இல்லை. எங்க போனாலும் சீக்கிரம் வீட்டுக்குப் போயிடணும். ஆனா, யோசிச்சுப் பார்த்தா நான் கல்யாணம் பண்ணலைன்னா தரிசா போயிருப்பேன். இப்போ எல்லாத்துலயுமே கன்ட்ரோலா இருக்கேன். நல்லா இருக்கு ப்ரதர் இந்த லைஃப்’’ மனைவியைத் தோள் உரசிச் சிரிக்கிறார் பாபி சிம்ஹா.

``உங்க லவ் ஸ்டோரியைச் சொல்லுங்க ப்ரோ?’’

`` ‘உறுமீன்’ படத்தின் போட்டோஷூட்ல தான் முதன்முறையா சந்திச்சோம். நான், ரேஷ்மி, அவங்க அம்மா, டைரக்டர்னு ஒரு கும்பலாகத்தான் சாப்பிடுவோம். அப்போ சும்மா பேசிக்கிறதுதான். ஒருமுறை கார்த்திக் சுப்பராஜ் தான் `இவனைக் கல்யாணம் பண்ணிக்கிறீயா?னு அவகிட்டக் கேட்டுட்டான்’’ என்ற பாபி சிம்ஹாவை இடைமறிக்கிறார் ரேஷ்மி. 

“விஜய்சேதுபதி டைரக்‌ஷன்ல நடிக்கப்போறேன்!”

`‘ `நாங்க ஏற்கனவே ஃப்ரெண்ட்ஸ். ஸோ, வீட்ல ஓகே சொன்னால் பண்ணிக்கிறேன்’னு சொல்லிட்டேன் என சிம்பிளாகச் சொன்ன ரேஷ்மியிடம் `என்ன பட்டுனு இப்படிச் சொல்லிட்ட, ஒரு சஸ்பென்ஸ் வேணாமா?’  இருங்க நான் சொல்றேன் எனத் தொடர்ந்தார் பாபி. ` ‘உறுமீன்’ படத்தோட ஆடியோ லாஞ்ச்ல எங்க ஃபேமிலியும் வந்திருந்தாங்க. அப்போ கார்த்திக் சுப்பராஜ், எங்க அம்மாகிட்ட ‘உங்க வருங்கால மருமகளைப் பாத்திருக்கீங்களா? இதோ இவங்க தான்’னு சொல்லிட்டு ஓடிட்டான். எங்க அம்மாவுக்கு ஒரே ஷாக்.’’ என்ற பாபி சிம்ஹாவைத் தொடர்கிறார் ரேஷ்மி.

‘`எங்க வீட்ல அப்பா ஓ.கே. அம்மா கொஞ்சம் தயங்குனாங்க. இவரைத்தான் ஏற்கெனவே தெரியுங்கிறதால அவங்களும் ஒரு ஸ்டேஜ்ல ஓ.கே சொல்லிட்டாங்க.’’ என்று ரேஷ்மி நிறுத்த ‘`எங்க வீட்ல நான் ரேஷ்மியைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு தெரிஞ்சவுடனேயே `பண்ணிக்கோ பண்ணிக்கோ’னு சொல்லிட்டாங்க. ஏன்னா, எங்க வீட்ல எனக்குக் கல்யாணப்பேச்சு எடுத்தாவே அவ்ளோ கோபம் வந்திரும். இப்போ இவனே பண்ணிக்கிறேன்னு சொல்றானேனு அவங்களுக்கும் ஹேப்பி தான். இதோ இப்போ நாங்களும் ஹேப்பிதான்’’ எனக் கண் சிமிட்டுகிறார் பாபி.

``என் வாழ்க்கையில் நான் ரேஷ்மிக்குக் கொடுத்த பெரிய கிஃப்ட்னா ஒண்ணு முத்ரா. என் மகள். இன்னொண்ணு பிக்ஸி. என் செல்ல நாய்’ என்றபடிக் காலருகில் இருந்த நாய்க்குட்டியைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொள்கிறார் பாபி. ‘`இது அவள் கர்ப்பமானப்ப வாங்கிக்கொடுத்தேன். எங்களோட முதல் பொண்ணு இவதான்’ எனப் பாசத்தோடு பிக்ஸியை அணைக்கிறார்.

“விஜய்சேதுபதி டைரக்‌ஷன்ல நடிக்கப்போறேன்!”

ரேஷ்மியிடம் ``உங்களுக்குப் பாபிகிட்ட பிடிக்காத பழக்கம் என்ன?’’ என்று கேட்டால், ``ஃப்ரெண்ட்ஸ்கூடப் பேசப்போனார்னா நேரம் போறதே அவருக்குத் தெரியாது. அது ஓண்ணுதான்’’ என ரேஷ்மி சொல்லச் சிரிக்கிறார் பாபி.

``நான் என்ன ப்ரோ பண்றது விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்பராஜ்னு ஒரு பெரிய கேங் நாங்க. ஷார்ட் ஃபிலிம் பண்ற காலத்திலிருந்து ஃப்ரெண்ட்ஸ். எங்க ஃப்ரெண்ட்ஷிப் பத்திச் சொல்லணும்னா நிறைய சண்டை போடுவோம். பயங்கர மோசமாகவும் போகும். மறுநாள் காலைல போன்ல பேசிச் சிரிச்சிக்குவோம். திட்டினாலும் அடிச்சாலும் நமக்காகத்தானே சொல்றாங்கங்கிற உரிமை இருக்கும். எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்குவோம். நானும் விஜய்சேதுபதியும் சில பேரை ‘ஸ்கெட்ச்’ போடுவோம். ஒருத்தரை ஃபிக்ஸ் பண்ணிட்டா அவனைக் கலாய்ச்சு வறுத்தெடுத்துடுவோம்.

எனக்கு விஜய் சேதுபதி டைரக்‌ஷன்ல நடிக்கணும்னு ஆசை. ஏன்னா, சேது அப்பப்போ ‘மாமா ஒரு கதை சொல்றேன் கேளு’னு அவங்க குழந்தைங்க சொன்ன கதையைக் கொஞ்சம் பில்டப் பண்ணி ஒரு பெரிய கதையா சொல்லுவான். உடனே நானும், ‘சூப்பரா இருக்கு மாமா டைரக்ட் பண்ணு’னு சொல்லுவேன். அப்போ நீ தான் ஹீரோனு சொல்லுவான். சும்மா பேசிட்டே இருப்போம். ஆனா, ஒரு நாள் அது நடக்கும் பாருங்க’’ எனப் பாபி சிம்ஹா சொல்லிக்கொண்டேபோக, ``பாருங்க, ஃப்ரெண்ட்ஸைப் பத்திப் பேச ஆரம்பிச்சாலே நிறுத்த மாட்டேங்குறார்’’ என ரேஷ்மி பாபியைத் தட்ட, சத்தம்போட்டுச் சிரிக்கிறார் பாபி. அன்பால் அதிர்கிறது வீடு!