Published:Updated:

“என் கதைக்கு ஓகே சொன்ன ஒரே ஹீரோ அஜித்!’’

“என் கதைக்கு ஓகே சொன்ன ஒரே ஹீரோ அஜித்!’’
பிரீமியம் ஸ்டோரி
“என் கதைக்கு ஓகே சொன்ன ஒரே ஹீரோ அஜித்!’’

கே.ஜி.மணிகண்டன் - படங்கள்: பா.காளிமுத்து

“என் கதைக்கு ஓகே சொன்ன ஒரே ஹீரோ அஜித்!’’

கே.ஜி.மணிகண்டன் - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
“என் கதைக்கு ஓகே சொன்ன ஒரே ஹீரோ அஜித்!’’
பிரீமியம் ஸ்டோரி
“என் கதைக்கு ஓகே சொன்ன ஒரே ஹீரோ அஜித்!’’

``என் காலத்து இளைஞர்களுக்கு இளையராஜா சார் பெரிய இன்ஸ்பிரேஷன். அவரைமாதிரி, இசைத்துறைல ஏதாவது சாதிக்கணும்னு ஆசை. என் குடும்பத்துல பாதிப்பேர் அரசு வேலையில இருந்ததுனால, எனக்கான வழிகாட்டுதலோ, திட்டமிடலோ யாரும் கொடுக்கலை. ஃபிலிம் டெக்னாலஜி படிச்சா சினிமாவுக்குப் போயிடலாம்னு படிச்சேன்.  வீட்ல, எது படிச்சாலும் அரசாங்க உத்யோகத்துக்குப் போகணும்னு ஆர்டர். ஃபிலிம் டெக்னாலஜி படிச்சா தூர்தர்ஷன்ல வேலை கிடைக்கும்னு வீட்டை சமாளிச்சேன். காலேஜ்ல படிக்கும்போது ‘புரியாமல் பிரிவோம்’ங்கிற என் குறும்படத்துக்கு நல்ல அங்கீகாரம் கிடைச்சது. இன்ஸ்டிடியூட்ல கோல்டு மெடலிஸ்ட்டா வெளியே வந்தேன். ஆனால், சினிமாவுக்குள் அவ்ளோ ஈஸியா நுழைய முடியல. சரி, அரசாங்க வேலைக்கே போயிடலாம்னு `இஸ்ரோ’ல வேலைக்கு அப்ளை பண்ணேன். பதிலே இல்லை. இதுக்கு நடுவுல இளையராஜா சாரோட பல படங்களுக்கு சவுண்ட் இன்ஜினியரா வேலை பார்த்த பாண்டுரங்கன் சார் அறிமுகம் கிடைச்சது. பாண்டுரங்கன் மணிரத்னம் சாரை அறிமுகப்படுத்தி வெச்சார். அழகம் பெருமாளாகிய நான் சினிமாவுக்கு வந்த வரலாறு இதுதான்!” - நட்பும், நகைச்சுவையுமாகப் பேசுகிறார் அழகம் பெருமாள். இயக்குநராகத் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் இன்று தமிழ் சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர். `தரமணி’ பர்னபாஸின் பேச்சில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.

“என் கதைக்கு ஓகே சொன்ன ஒரே ஹீரோ அஜித்!’’

‘` ‘ஃபிலிம் டெக்னாலஜி படிச்சுட்டு, ஏன் உதவி இயக்குநரா வேலை பார்க்கணும். நேரடியா சினிமா எடுக்கலாமே? உதவி இயக்குநர் வேலை ஒரு க்ரியேட்டிவ் ஏரியா கிடையாதே!’னு முதல் மீட்டிங்கில் மணிரத்னம் சார் என்கிட்ட கேட்டார். ‘நீங்க சொல்றது சரிதான். ஆனா, எனக்கு கிளாப் போர்டுகூட அடிக்கத் தெரியாது. அதைக் கத்துக்கிட்டுப் போறேனே?’னு சொன்னேன். அப்போ ‘தளபதி’ படத்துக்குப் பூஜை போட்டு, ஷூட்டிங் பிளான் பண்ணிக்கிட்டிருந்த சமயம்.  கொடுமை என்னன்னா, மணிரத்னம் சார்கிட்ட சேர்ந்த சில நாள்கள்ல எனக்கு ‘இஸ்ரோ’ல இருந்து லெட்டர் வந்திடுச்சு. ‘இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. இந்த வேலைக்குப் போயிடுனு’ மணி சார் சொல்ல, நான் லெட்டரைக் கிழிச்சுப் போட்டுட்டு கிளாப் போர்டைக் கையில் எடுத்தேன். முதல் படத்திலேயே இளையராஜா - ரஜினிகாந்த் - மம்மூட்டி காம்போல வொர்க் பண்ற அற்புதமான அனுபவத்தை விட்டுட்டு ஒரு சினிமா ரசிகன் வெளிய வருவானா...” - அதிர்ந்து சிரிக்கிறார் அழகம்பெருமாள்.

“உதவி இயக்குநர் டு இயக்குநர் ஆனது எப்படி?”

‘` ‘தளபதி’யிலிருந்து ‘இருவர்’ வரைக்கும் மணி சார்கிட்ட வேலை பார்த்தேன். தொடர்ந்து டிராவல் பண்ணுனதுனால, ரஹ்மான் என் படத்துக்கு இசையமைப்பாளர் ஆனார். ‘உதயா’ கதையைச் சொல்ல, விஜய் சம்மதிச்சார். சில பல காரணங்களால் அந்தப் படம் ரொம்ப லேட் ஆகிடுச்சு. என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்ட மணி சார், அவரோட தயாரிப்புல ‘டும் டும் டும்’ படத்தை இயக்குற வாய்ப்பைக் கொடுத்தார். இன்னைக்குவரைக்கும் ஓர் இயக்குநரா எனக்கான அடையாளம் ‘டும் டும் டும்’ படம்தான்.”

‘` `ஜூட்’ படத்துக்குப் பிறகு ஏன் எந்தப் படமும் இயக்கலை?’’

‘` அந்தப் படம் சரியா போகல. ஆனால், அதன் தோல்விக்கு நான் மட்டுமே காரணம் இல்லை. அதனால் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கலாம்னு நினைச்சேன். அந்த பிரேக் ரொம்ப நீண்டுருச்சு. சூழல் மாறிடுச்சு. ஒருகாலத்துல ‘எனக்கு ஒரு படம் பண்ணுங்களேன்’னு சொன்ன ஹீரோக்கள்கிட்ட, ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்களேன்’னு கேட்கவேண்டியதா இருந்தது, கேட்டேன். இந்தச் சூழல்லதான் ‘புதுப்பேட்டை’ படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்தார் செல்வராகவன். எனக்கும் ஒரு டைவர்ஷன் தேவைப் பட்டதுனால, போனேன். தொடர்ந்து நடிக்கிறேன்.”

“என் கதைக்கு ஓகே சொன்ன ஒரே ஹீரோ அஜித்!’’

‘`அடிப்படையில் ஓர் இயக்குநர் நீங்கள். நடிக்க வாய்ப்புகள் வந்தபிறகும், இயக்குறதுக்கான ஆர்வம் குறைஞ்சிருக்காது. அதை எப்படிக் கடந்தீங்க?”

‘`நான் எழுத்தாளர்களோட நல்ல நட்போட இருந்தேன். ‘உதயா’ படத்துக்கு சுஜாதா சார் வசனம் எழுதினார். அப்படி, எனக்காக எழுத்தாளர் ஜெயமோகன் ‘ஏழுகோட்டை வீடு’னு ஒரு கதை எழுதினார். நானும் அவரும் சில மாற்றங்கள் செஞ்சு, அதை சினிமாவுக்கான திரைக்கதையா மாத்தினோம். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் அது. இன்டஸ்ட்ரியில் ரஜினி, கமலைத் தவிர எல்லா பெரிய ஹீரோக்கள்கிட்டேயும் அப்ரோச் பண்ணிட்டேன். அப்போ இருந்த சூழல்ல யாரும் டூயல் ஹீரோ கதையில் நடிக்கச் சம்மதிக்கலை. ஒரே ஒருத்தர் மட்டும் ஓ.கே சொன்னார். அவர், அஜித்குமார். அஜித்துக்கு அந்தக் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆர்வமாகவும் இருந்தார். கடைசியில அதுவும் கைகூடலை.”

‘`மீண்டும் டைரக்‌ஷன் பண்ற ஐடியா இருக்கா?”

‘`அதெப்படி விட்டுடமுடியும். அடுத்து ஒரு படம் பண்ணா, அதைச் சரியா பண்ணணும்னு நினைக்கிறேன். நாம இப்ப ரொம்ப இறுக்கமான சூழல்ல வாழுறோம். மொபைல்தான் வாழ்க்கைனு ஆயிடுச்சு. வெளியில் ஒரு நிகழ்ச்சிக்குப் போனாலும் மொபைலைத்தான் நோண்டிக்கிட்டிருக்கோம். செத்தவங்க வீட்டுக்குப் போனாலும் செல்ஃபிதான் எடுத்துக்கிட்டிருக்கோம். இந்தத் தலைமுறைக்காக ஒரு படம் கண்டிப்பா பண்ணணும்னு தோணுது. திருத்துறதுக்காக இல்லை... நாம எப்படி இருந்தோம், எப்படி வாழ்ந்தோம்னு காட்டுறதுக்காகத்தான்.”