Published:Updated:

ஸ்பைடர் - சினிமா விமர்சனம்

ஸ்பைடர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பைடர் - சினிமா விமர்சனம்

ஸ்பைடர் - சினிமா விமர்சனம்

ஸ்பைடர் - சினிமா விமர்சனம்

ஸ்பைடர் - சினிமா விமர்சனம்

Published:Updated:
ஸ்பைடர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பைடர் - சினிமா விமர்சனம்

க்களைப் பாதுகாப்பதையே முழுநேர வேலையாகக் கொண்ட சூப்பர் ஹீரோ; மக்களை அழிப்பதையே முழுநேர வேலையாகக் கொண்ட சைக்கோ வில்லன். இருவருக்கும் இடையே நடக்கும் காத்தல், அழித்தல் ஆட்டம்தான் `ஸ்பைடர்.’

டோலிவுட் `தளபதி’ மகேஷ் பாபுக்கு முதல் நேரடித் தமிழ்ப்படம்.  அளவான முகபாவனைகள், அலட்டிக்கொள்ளாத உடல்மொழி என அக்கடதேசத்தில் எப்படி நடிப்பாரோ, இக்கட தேசத்திலும் அப்படியே நடித்திருக்கிறார்! டப்பிங்கில், நாக்கில் தெலுங்கு எட்டிப்பார்த்தாலும், உதடுகளில் பக்கா ஸின்க்!

ஸ்பைடர் - சினிமா விமர்சனம்

வில்லன் சுடலையாக எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரகளையோ ரகளை. சின்ன சின்ன மேனரிசங் களிலும், மாடுலேஷன் களிலும் மிரட்டுகிறார். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் சில  இடங்களில்  `டார்க் நைட்’ ஜோக்கரின் சாயல். படத்திலும் அதே படத் தின் சாயல் தூக்கலாகவே!

ஸ்பைடர் - சினிமா விமர்சனம்



இவர்கள் இருவரைத் தவிர வேறு எந்த நடிகருக்கும் சொல்லிக் கொள்ளும் அளவிலான கதாபாத்திரம் இல்லை. ரகுல் ப்ரீத் சிங், பரத், ஆர்.ஜே.பாலாஜி, ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரங்களைப் படத்திலிருந்து கொத்தாக‌த் தூக்கினாலும், கதையின் ஓட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஸ்பைடர் - சினிமா விமர்சனம்



எஸ்.ஜே.சூர்யாவின் பாதிமுகமும் அதன் பிரதிபலிப்பும் சேர்ந்து தெரியும் `ஃப்ரேமி’ல் தெரிகிறது சந்தோஷ் சிவனின் தனித்துவம்! படத்தின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது ஸ்ரீகர்பிரசாத்தின் படத்தொகுப்பு. முதற்பாதியை அவர்தான் காப்பாற்றி யிருக்கிறார். ஹாரிஸின் பின்னணியில் எல்லாமே `எங்கேயோ கேட்ட இசை!’ பாறை உருண்டு வரும் காட்சி,  மகேஷ்பாபு தனது குடும்பத்தைக் காப்பாற்றும் காட்சி, குடும்பப்பெண்கள் பண்ணுகிற சீக்ரெட் ஆபரேஷன் என ஆங்காங்கே அசத்துகிறார் முருகதாஸ்.

அறிவாளி ஹீரோ, சைக்கோ வில்லன், க்ரைம் கதை. தலை கிறுகிறுக்கும் புதிர்களும் முடிச்சுகளும் வினாக்களும் நிறைந்திருக்க வேண்டிய திரைக்கதையில் `எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்’ டைப் வினாக்கள் எட்டிப்பார்க்கின்றன‌. ஒருவரால் எப்படி தனியாளாக இவ்வளவு நாசகார வேலைகளைச் செய்யமுடிகிறது என லாஜிக் குழப்பங்கள் ஏராளம்.

ஆந்திர வீடுகளில் `சரவணன் மீனாட்சி’, தெலுங்கு மக்கள் வாழும் கிராமத்தில் `மயான பூமி’ எனத் தமிழில் பலகை, மல்டிலிங்வல் வேலைகளிலும் குளறுபடிகள் நிறையவே...

வலையை இன்னும் வலிமையாகப் பின்னியிருக்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு