Published:Updated:

சிவகார்த்திகேயன் 25

சிவகார்த்திகேயன் 25
பிரீமியம் ஸ்டோரி
சிவகார்த்திகேயன் 25

பரிசல் கிருஷ்ணா

சிவகார்த்திகேயன் 25

பரிசல் கிருஷ்ணா

Published:Updated:
சிவகார்த்திகேயன் 25
பிரீமியம் ஸ்டோரி
சிவகார்த்திகேயன் 25

ந்து வருடங்களில் ஹீரோவாக பரபரவெனப் பத்துப் படங்கள்.சிவகார்த்திகேயன் பட ரிலீஸென்றால் மல்ட்டிப்ளெக்ஸும், டென்ட்கொட்டாயும் ஒரே விதமான கொண்டாட்டத்தில் திளைக்கின்றன. சிவகார்த்திகேயன் பற்றிய பளிச் 25 இங்கே!

சிவகார்த்திகேயன் 25

1 சிவா, கார்த்தி - சுருக்கமாகக் கூப்பிடுவதில் சிவகார்த்திகேயனுக்குப் பிடித்தது எஸ்.கே.

2 அம்மா, அக்கா, ஆர்த்தி, ஆராதனா என்று சிவாவின் குடும்பம் பெண்களால் நிறைந்தது. மகள் ‘ஆராதனா’வின்  பெயர் சிவாவின் செலக்‌ஷன். ஆ - மனைவி ஆர்த்தி. ரா - அம்மா ராஜி. த - அப்பா தாஸ். மூன்றையும் சேர்த்து ஆராதனா என்று வைத்தார்.

3 நிச்சயதார்த்த நாள் குறித்துவிட்டு, ‘மாமா பொண்ணு ஆர்த்தியைத்தான் உனக்குப் பார்த்திருக்கு’ என்று அம்மா சொல்லியிருக்கிறார். தலையாட்டிவிட்டு, தாலிகட்டியிருக்கிறார்.

4 பள்ளிக் காலத்திலிருந்தே கிரிக்கெட்தான் உயிர்மூச்சு. மீடியம் பேஸ் பவுலர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். சென்னையில் இருந்தால், இன்றைக்கும் நண்பர்களோடு ஏதாவது ஒரு கிரவுண்டில் விடியவிடிய கிரிக்கெட்தான்.  சிவாவின்  டீம் பெயர் `அடேங்கப்பா லெவன்ஸ்.’ சச்சின் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

5 பிடித்த நிறம் வெள்ளை. அலுவலகம், வீடு, கார் எல்லாமே வெள்ளை வெளேர்தான். பிடித்த எண் 10. காரணம்? சச்சின் நம்பர்.

6 பிடிக்காத விஷயம் பார்ட்டி. ரொம்ப தவிர்க்க முடியாத ஆட்கள் கூப்பிடும் போது நடுங்கி, நெளிந்து எப்படியாவது சமாளித்து எஸ்கேப் ஆகிவிடுவார்.

சிவகார்த்திகேயன் 25


7 பிரபலமான பிறகு மிஸ் செய்யும் ஒரு விஷயம் காற்று முகத்திலறையப் பறக்கும் பைக் ரைடு. பைக்குகளின் காதலன். முதல் பைக் CBZ. இப்போதும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு ஃப்ரெண்ட்ஸ் பைக்கில் திடீர் ரைடு போவதுண்டு.

8 தனது 17 வயதில் தந்தையை இழந்தார் சிவா. சிறைத்துறை சூப்பரின் டெண்டென்ட்டாக இருந்தவர் அப்பா தாஸ். `என் ஒவ்வொரு வெற்றியிலும் அப்பாவின் ஆசி இருக்கிறது’ என்பார்.

9 அக்கா கௌரி மனோகரி. டாக்டரான இவர் சிவாவுக்காகவே சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டார். சிவா பயப்படுவதும், அளவு கடந்த மரியாதை கொடுப்பதும்  அக்காவுக்குத்தான்.

10 வருமானவரி விவகாரங்களைக் கையாள்வதெல்லாம் மனைவி ஆர்த்திதான். முழுமையான கணக்குத் தாக்கல் மற்றும் வரி செலுத்தியதற்காக, வருமானவரித் துறையிடமிருந்து கடந்த வருடம் ‘தங்கச் சான்றிதழ்’ வாங்கியிருக்கிறார் சிவா. அதை வீட்டில் ஃப்ரேம்  செய்தும் வைத்திருக்கிறார்.

11 டயட்தான் எப்போதுமே. இப்போது இன்னும் ஸ்ட்ரிக்ட். காபி, டீ எப்போதுமே நோ. பிடித்த உணவு...  பிரியாணி!

12 கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ரசிகர்களைச் சந்திக்கிற நபர். அதே போல, வரும் ரசிகர்கள் ‘உங்களைப் பார்த்தேன்னு சொன்னா நம்ப மாட்டாங்க. என் ஃப்ரெண்ட்கிட்ட பேசறீங்களா?’ என்று கேட்டால், உடனே ரசிகரின் போனை வாங்கி, அவர்களின் நண்பர்களுக்கு வீடியோ காலில் சர்ப்ரைஸ் கொடுப்பார்.

சிவகார்த்திகேயன் 25

13 கல்லூரிக் காலத்திலிருந்தே திரைப்படங்கள் பார்ப்பது பொழுதுபோக்கு. சென்னை வந்த பிறகு சத்யம் தியேட்டரில் ஒரே நாளில் நான்கு படங்கள் பார்த்த சரித்திரம் உண்டு. எல்லா மொழிப் படங்களும் பிடிக்கும்.

14 சிவகார்த்திகேயனின் ஷூட்டிங் ப்ரேக் பொழுதுபோக்கு, ஆன்லைனில் வரும் க்விஸ் போட்டிகளில் கலந்துகொண்டு ரிசல்ட் பார்ப்பது. சமீபத்தில் ‘நீங்கள் எப்படிப்பட்ட அப்பா?’ என்ற க்விஸ்ஸில் டிக் அடித்து டாப் மார்க் வாங்கியதை சந்தோஷமாகச் சொல்லிச் சிலாகித்திருக்கிறார்.

15 சிவாவின் செல்போனில் கேம்ஸே இல்லை. ப்ளே ஸ்டேஷனில் ஃபிஃபா ஃபுட்பால் அடிக்கடி விளையாடுவார். இன்னொரு  ஃபேவரிட் டைம்பாஸ்; யூ டியூபில் காமெடி சேனல்கள் பார்ப்பது.

16 கோலிவுட்டில் பழகிய பிறகு க்ளோஸ்ஃ ப்ரெண்ட் லிஸ்ட்டுக்குள் வந்தவர் அனிருத். இப்போது இந்த லிஸ்ட்டில் புதிதாக இன்னொருத்தரும் இடம் பிடித்திருக்கிறார். அவர் ஃபஹத் ஃபாசில்.

17 “நாம ஜெயிக்கறதுக்காக உழைக்கணுமே தவிர, அடுத்தவங்களைத் தோற்கடிக்க உழைக்கக்கூடாது” -இதுதான் சிவா ரியல் லைஃப் பன்ச் டயலாக்!

18 விடிந்ததும் முதலில் தேடுவது செல்போன். ஆப்பிள் செவன் இப்போது வைத்திருக்கும் மாடல். அடுத்து  ஆப்பிள் X போனுக்காக வெயிட்டிங்.

19 இரண்டு வி.வி.ஐ.பிக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதைத்தான் வாழ்நாள் பொக்கிஷமாகச் சொல்வார் சிவா. ஒருவர் சச்சின். இன்னொருவர் ரஜினிகாந்த்.

20 வாட்ஸ் அப்பில் உடனடி ரெஸ்பான்ஸ் நிச்சயம். பார்த்ததும் பதில் சொல்லிவிடுவார். வருடக்கணக்காக ஒரே வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்தான். அது: ‘Keep ur parents happy... Life will be the happiest...’

21 உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுண்டு. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ட்ரெய்னர். ஆரம்பத்தில் ஒழுங்காகப் போகாதவர் இப்போதெல்லாம் ஜிம்முக்கு 100 பர்சென்ட் அட்டெண்டன்ஸ் காட்டுகிறார்.

22 டீடோட்டலர். கல்லூரிக் காலம் வரை கோலாவகைக் குளிர்பானங்கள் குடித்துக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் அறவே அவற்றையும் விட்டுவிட்டார். இப்போது இயற்கைப் பழரசங்கள், இளநி, நுங்கு.

23 இப்போது வரை கல்லூரி நண்பர்கள்தான் எல்லாம். 10 பேர் கொண்ட ஒரு குழு இருக்கிறது. எப்போது சேர்ந்தாலும் அதிர அதிர அதிரடிக் கலகலப்புதான். நண்பர்கள் குழுவில் பெண்களே இல்லை.  ``என்ன ப்ரோ?” என்றால்... ``அது என்னமோ அப்படித்தான் ப்ரோ” என்பார்.

24 பிடித்த கிஃப்ட் - வாட்ச். வாங்கிய முதல் சம்பளம்; ஒரு மிமிக்ரி ப்ரோக்ராமுக்காக 1000 ரூபாய். இன்றுவரை பாதுகாத்து வைத்திருப்பது ‘மெரினா’ படத்துக்குக் கிடைத்த அட்வான்ஸ்.

25 பெரியார், நேதாஜி, வேலு நாச்சியார், எம்.ஜி.ஆர்., அப்துல் கலாம். சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்த தலைவர்கள் இவர்கள்தாம்.