Published:Updated:

ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

ஆமா, இப்ப என்ன பண்றாங்க?
பிரீமியம் ஸ்டோரி
ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

சுஜிதா சென் - படம்: தி.குமரகுருபரன்

ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

சுஜிதா சென் - படம்: தி.குமரகுருபரன்

Published:Updated:
ஆமா, இப்ப என்ன பண்றாங்க?
பிரீமியம் ஸ்டோரி
ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

10 ஆண்டுகளுக்கு முந்தைய டி.வி டிஆர்பி நாயகர்கள் இவர்கள். இவர்களுடன் போனில் பேசவே காத்திருந்து காத்திருந்து காலம் கடத்தினான் தமிழன். கொஞ்சிக் கொஞ்சிப் பேசிய இவர்களுடன் எஸ்.எம்.எஸ் அனுப்பியே பரவசத்தைப் பகிர்ந்துகொண்டான் ரசிகன். ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் இல்லாத காலத்திலேயே லட்சக்கணக்கில் ஃபாலோயர்களைக்கொண்டிருந்த இந்த டி.வி பிரபலங்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? 

ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

ப்ரஜின் 

``நானும் ஹீரோதான்!’’

ரசிகைகளின் அன்புத்தொல்லைகளால் ஹிட் அடித்தவர் ப்ரஜின். சன் மியூஸிக்கில் இவர் தொகுத்து வழங்கிய ‘ஹலோ ஹலோ’ நிகழ்ச்சி முழுக்க லேடீஸ் கால்ஸ்தான்.  இன்று ப்ரஜினின் பயணம் சினிமாவில்.

“இயக்குநர் தாமிராவோட ‘ஆண் தேவதை’  படத்துல இரண்டாவது லீட் ரோல்ல நடிக்கிறேன். சினிமாவில் சமுத்திரகனி சார்தான் என் குரு. முதன்முதலில் நடிக்கக் கத்துக்கொடுத்துத் திரையில் அறிமுகப் படுத்தினவர் அவர்தான். இந்தப் படத்தில் அவரோடு சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு. மலையாளத்துல நான்கு படங்கள்ல ஹீரோவா நடிச்சிருக்கேன். சீரியல்லேயும் நடிக்கிறேன். நடிப்புக்குத் தற்காலிகமா ஒரு பிரேக் விடணும் என்பதுதான் என் அடுத்தகட்ட பிளான். நானும் சாண்ட்ராவும் கிட்டத்தட்ட எட்டு வருஷங்களா நடிச்சுட்டு இருக்கோம். இது எல்லாத்தையும் மூட்டைகட்டி வெச்சுட்டு சீக்கிரமே உங்க எல்லோருக்கும் ஒரு நல்ல செய்தி சொல்லணும்.”

ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

நிஷா

``நமீதாவோட டிரெஸ் எல்லாமே என் கற்பனைதான்!’’


கலைஞர் டி.வி-யில் ‘சூப்பர் சமையல்’, விஜய் டி.வி-யில் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்’ எனப் பசியும் ருசியுமாகக் கலந்தடித்த  நிஷா இப்போது நமீதாவின் காஸ்ட்யூம் டிசைனர். “ஃபேஷன் டிசைனிங் படிச்சு முடிச்சுட்டு சாலிகிராமத்தில் தனி பொட்டிக் ஷோரூம் வெச்சிருக் கேன். நிறைய டி.வி மற்றும் சினிமாப் பிரபலங்களுக்கு காஸ்ட்யூம்ஸ் பண்றேன். அதில் ஒருத்தவங்கதான் நமீதா. நானே பார்க்கிறதுக்கு பேபி மாதிரிதான் இருக்கேன். நான் இன்னொரு அமுல் பேபிக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணிட்டு இருக்கேன். ஆமாம், நமீதாவின் காஸ்ட்யூம்ஸ்ல பெரும்பாலானவை என் கற்பனையில உருவானதுதான். அவங்களுக்கு சேலை கட்டுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ரொம்ப வித்தியாசமான சேலைகளை செலக்ட் பண்றதுல, ‘நான்தான் பெஸ்ட்’னு சொல்வாங்க. நமீதாவோட டும் டும் டும்-முக்கு நான்தான் டிரெஸ் டிசைன் பண்ணப்போறேன்.”

ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

க்ரெய்க்

``பூஜாவை மறக்க முயற்சி பண்றேன்’’

எஸ்.எஸ் மியூஸிக்கின் அதிரடி காம்பியர். தமிழும் ஆங்கிலமும் கலந்து இவர் டி.வி-யில் அடிக்கும் லூட்டிகள் பிரபலம். “தாத்தா பிரெஞ்சு. பாட்டி ஆங்கிலோ இந்தியன். அம்மா ஸ்பானிஷ், அப்பா இந்தியன். ஸோ, வீட்ல யாருமே தமிழ் பேச மாட்டாங்க. என் சொந்த முயற்சியில்தான் தமிழ் கத்துக்கிட்டேன். இப்போ ஒரு மீடியா டெவெலப்மென்ட் கம்பெனியோட தலைவரா இருக்கேன். இது ஒரு மார்க்கெட்டிங் வேலைதான். ஆனால், மீடியாவில வேலை பார்த்த அனுபவம்தான் இப்போ எனக்கு வியாபாரத்துல கைகொடுக்குது.

ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

வாழ்க்கையில நாம நெனக்கிற மாதிரி எல்லாமே நடக்குறது இல்லை. கார்ப்பரேட் வாழ்க்கையில தொடங்கி கல்யாண வாழ்க்கை வரை எல்லாமே அப்படித்தான். நானும், பூஜாவும் பிரியணும்னு விதி இருந்திருக்கு. எங்களோட பத்து வருஷக் காதலுக்கு திடீர்னு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்னு நெனைச்சுக்கூடப் பார்க்கலை. மறுபடியும் இன்னொரு கல்யாணம் பண்ணி அந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்துல நான் இல்லை. பூஜாவை மறக்கிறதுக்கு எனக்கு இன்னும் பல வருஷங்கள் ஆகலாம்.”

ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

பூஜா

``சினிமாதான் என் ஏரியா!’’


ஒரு காலத்தில் எஸ்.எஸ் மியூஸிக்கை எப்போது ட்யூன் செய்தாலும் பூஜா தரிசனம்தான். ஒரு நிகழ்ச்சியில் நேயருக்கு காதல் டிப்ஸ் சொல்லி உருகவைப்பவர், அடுத்த நிகழ்ச்சியில் ‘பிரபலத்தின் பேட்டியில்’ அவரின் காதல் அனுபவங்களைச் சொல்லவைத்து ரசிக்கவைப்பார். எல்லோரையும்போல  ‘சினிமாவுக்குப் போறேன்’ என்று சேனலை விட்டுக் கிளம்பியவர் இப்போது எங்கே இருக்கிறார்?

“முழுமூச்சா சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சுட்டேன். கூடிய சீக்கிரம் தமிழ்ல ஹீரோயினா அறிமுகமாவேன். இப்போ ஒரு தெலுங்குப் படத்துலேயும் ‘அந்தகாரம்’னு ஒரு தமிழ்ப் படத்துலயும் லீட் ரோல் பண்ணிட்டு இருக்கேன். எதிர்காலத்துல சினிமா எனக்கு எப்படிக் கைகொடுக்கும்னு தெரியாது.ஆனால், நான் சினிமாவில் தீவிரமா இருக்கேன்” என்பவர் இப்போது வேர்ல்டு ட்ரிப்பில் இருக்கிறார். 

ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

விஜய் ஆதிராஜ்

``லைஃப் ரொம்ப நல்லாப் போயிட்டு இருக்கு!’’

சன் டி.வி-யின் ‘நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சியின் முதல் தொகுப்பாளர். அடுத்து ‘ராகமாலிகா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்  விஜய் ஆதிராஜ்.

“நிகழ்ச்சித் தொகுப்பாளரா மாறியது என் வாழ்க்கையில நடந்த ஒரு விபத்து. தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக்கூட, ‘நான் ஒரு நடிகனாகணும்’னுதான் சொல்வேன். சில படங்கள்லேயும் நடிச்சேன். இப்போ ‘யப் டி.வி’ சேனல்ல கிரியேட்டிவ் ஹெட்டா இருக்கேன். நிகழ்ச்சிகளுக்கான ஸ்கிரிப்ட் எழுதுறேன். லைஃப் ரொம்ப நல்லாப் போயிட்டு இருக்கு. இப்போ இருக்கிற வி.ஜே-க்கள் நல்ல திறமைசாலியா இருக்காங்க. அவங்களோட நகைச்சுவைத் திறனுக்கு அளவே இல்லை. ஆனா, யாரும் தமிழை சரியா உச்சரிக்க சிரமப்படறாங்க. அதை மட்டும் கொஞ்சம் சரி பண்ணிட்டா நல்லாயிருக்கும்.”

ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

சாண்ட்ரா:

``நடிப்புக்கு ரெஸ்ட்டே கிடையாது!’’

கேரளாவில் ஆரம்பித்த சாண்ட்ரா புயல் தமிழ்நாட்டைத் தீவிரமாகத் தாக்கியது. ப்ரஜினைத் திருமணம் செய்துகொண்ட பிறகுதான் சாண்ட்ரா சீஸன் உச்சம் தொட்டது.

“ `கிரண் டி.வி’ மலையாள சேனலா இருந்தாலும், தமிழ் நேயர்கள்தான் அதிகமா போன் பண்ணிப்பேசுவாங்க. அதனால், தமிழும் மலையாளமும் கலந்து ஒருமாறிப் பேசி நிகழ்ச்சிகளை நடத்திட்டு இருந்தேன். என் கணவர் ப்ரஜின் சப்போர்ட் இருந்ததால, சினிமாவிலயும் நடிக்க ஆரம்பிச்சேன். குறிப்பா ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படம் பெரிசா ஹிட் ஆகலைனாலும், விமர்சனரீதியா எனக்கு நல்ல பேரை வாங்கித் தந்துச்சு. இப்ப ‘மூணாவது நபரைக் காணோம்’ங்கிற படத்தில் கமிட் ஆகியிருக்கேன். படங்கள்ல நடிச்சாலும் டி.வி சீரியல்ல நடிக்கிறதையும் விடக் கூடாதுனு முயற்சி பண்றேன். குறிப்பா ‘தலையணைப் பூக்கள்’ சீரியல் முடியும் வரை அதுல நடிக்கணும். இப்போ நடிப்புலதான் என் முழுக் கவனமும் இருக்கு.”

ஆமா, இப்ப என்ன பண்றாங்க?

வினோ சுப்ரஜா

``இப்ப நான் துபாய்ல இருக்கேன்!’’

ஜெயா டி.வி-யின் ‘ஸ்டார்ஸ் உங்களுடன்’ நிகழ்ச்சியின் மூலம்  லைக்ஸ் அள்ளியவர் வினோ சுப்ரஜா.

“பொண்ணுங்க வாழ்க்கையில திருப்புமுனையா அமைவது கல்யாணம்தான். அப்படி என் கல்யாணத்துல நடந்த திருப்பு முனை, ‘சீனாவுல செட்டில் ஆகணும்’னு மாப்பிள்ளை வீட்ல சொன்ன அந்தத் தருணம். சீனாவுக்குப் போனோம். பொழுது போகலை. ‘படிக்கலாம்’னு முடிவெடுத்தேன். அங்கே ஃபேஷன் டிசைனிங் மட்டும்தான் இங்கிலீஷ்ல சொல்லித்தர்றாங்க. அந்த கோர்ஸ் முடிச்சு வேலைக்குப் போகலாம்னு இருந்த சமயத்தில், இந்த முறை அமெரிக்காவில் செட்டில் ஆகணும்கிற கட்டாயம். அங்கே போய் சொந்தமா ஃபேஷன் ஸ்டூடியோ ஆரம்பிச்சேன். திரும்ப துபாய்க்குப் போக வேண்டிய சூழல். இப்போ துபாய்லதான் என் ஃபேஷன் தொடர்பான வேலைகளைப் பண்ணிட்டு இருக்கேன். ‘உலகம் சுற்றும் வாலிபர்’ மாதிரி ஒரு கணவர் வந்தா, இப்படித்தான் நாடுவிட்டு நாடு சுற்ற வேண்டி வரும். எப்போ இந்தியாவுக்கு வருவேன்னு கனவு கண்டுட்டு இருக்கேன்.”