Published:Updated:

வர்றாங்க வாரிசுகள்..!

வர்றாங்க வாரிசுகள்..!
பிரீமியம் ஸ்டோரி
வர்றாங்க வாரிசுகள்..!

சனா - படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தி.குமரகுருபரன், ப்ரியங்கா

வர்றாங்க வாரிசுகள்..!

சனா - படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தி.குமரகுருபரன், ப்ரியங்கா

Published:Updated:
வர்றாங்க வாரிசுகள்..!
பிரீமியம் ஸ்டோரி
வர்றாங்க வாரிசுகள்..!
வர்றாங்க வாரிசுகள்..!

‘விவேகம்’ படத்தில் அறிமுகமான கமல் சார் பொண்ணு அக்‌ஷராவுக்கு நான்தான் டயலாக்ஸ் சொல்லிக்கொடுத்தேன்.

வர்றாங்க வாரிசுகள்..!

ப்பா, கமல்ஹாசன் வீட்டுக்குப் போகும் போது என்னையும் அழைச்சுட்டுப் போவார்.அவங்க பேசுறதைக் கேட்க அவ்ளோ ஆர்வமா இருக்கும்.

வர்றாங்க வாரிசுகள்..!

``சினிமா ஆசை இருக்கிறவங்க விஷுவல் கம்யூனிகேஷன்தான் படிப்பாங்க. ஆனால், லயோலா-ல நான் பி.காம் படிச்சேன்.

வர்றாங்க வாரிசுகள்..!

ப்பாவுக்காக இன்ஜினீயரிங் படிச்சேன். அதன்பிறகும் அப்பா சினிமாவுக்குள் விடலை. ‘ரெண்டு வருஷம் படிப்புக்கேத்த வேலையைப் பாரு’ன்னு சொல்லிட்டார்.

பிரபலங்களின் வாரிசுகள் இவர்கள். தந்தைகளைப் போலவே தமிழ்சினிமாவில் தடம் பதிக்கக் காத்திருக்கும் உதவி இயக்குநர்கள் பற்றிய அறிமுகம் இங்கே...

வர்றாங்க வாரிசுகள்..!

“அப்பாவை ஹீரோவாக்கணும்!”

ஹேமசந்திர பிரபு

“என் வீட்ல அண்ணன், அண்ணி, என் மனைவினு மூணு பேருமே டாக்டர்ஸ். நான்  மட்டும்தான் அப்பா வழியில சினிமாவுக்கு வந்திருக்கேன். ஆஸ்திரேலி யாவில் மல்ட்டி மீடியா படிச்சிட்டு சென்னை வந்ததும், ‘டைரக்‌ஷன்தான் என் விருப்பம். நான் யார்ட்டயாவது உதவி இயக்குநரா சேரப்போறேன்’னு சொன்னேன். ‘நான் ரெகமண்ட் பண்ண மாட்டேன். நீயா முயற்சி செஞ்சு யார்கிட்ட வேணும்னாலும் சேர்ந்துக்க. ஆனால், நிறைய கஷ்டப்படணும்கிறதை மறந்துடாத’னு சொன்னார். அதைத்தவிர இன்னைக்கு வரைக்கும் அவர் வேற எந்த அட்வைஸும் எனக்குக் கொடுத்ததே இல்லை!”- உற்சாகமாகப் பேசுகிறார் ஹேமச்சந்திர பிரபு. நகைச்சுவை நடிகர் செந்திலின் இளைய மகன். இயக்குநர் சிவாவின் இணை இயக்குநர். இப்போது தனியாகப் படம் இயக்கும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார்.

“ஹேமச்சந்திரபிரபு. சுருக்கமாக சந்துரு. சின்ன வயசுல அப்பாகூட நிறைய ஷூட்டிங் போவேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் ஷியாமலா கார்டன் ஸ்டுடியோ இருந்தது. எப்படி ஷூட் பண்றாங்க, டயலாக் எப்படிப் பேசுறாங்க, இயக்குநர் எப்படி வேலை வாங்குறார்னு கவனிப்பேன். அப்படித்தான் எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா டைரக்‌ஷன் ஆசை வந்துச்சு.

முதலில் இயக்குநர் வெங்கடேஷ் சார்கிட்ட உதவி இயக்குநரா கொஞ்சநாள் இருந்தேன். பிறகு சிவா சார்.  ‘வீரம்’, ‘வேதாளம், `விவேகம்’னு அவர்கூட மூணு படங்கள் பண்ணிட்டேன். முதல் படத்தில் உதவி இயக்குநரா இருந்த எனக்கு `விவேகம்’ படத்துல கோ-டைரக்டரா புரமோஷன் கிடைச்சது. சிவா சார், ரொம்ப நல்ல மனிதர். யாராவது தப்பு பண்ணுனா, அதட்டி மிரட்டித் திட்டமாட்டார். அன்பா எடுத்துச் சொல்லுவார். பக்குவப்படுத்துவார். நம்ம திறமையை இன்னும் டெவலப் பண்ண முயற்சி எடுப்பார். ‘விவேகம்’ படத்தில் அறிமுகமான கமல் சார் பொண்ணு அக்‌ஷராவுக்கு நான்தான் டயலாக்ஸ் சொல்லிக்கொடுத்தேன். ஒரு விஷயத்தைச் சொன்னதுமே  அவ்ளோ ஈஸியா அதை உள்வாங்கிக்கிட்டாங்க. செம இன்ட்டலிஜென்ட்.

அடுத்த வருஷம் நான் தனியா படம் இயக்குறேன். சிவா சார் படம் மாதிரியான கமர்ஷியல் ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. அஜித் சார், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இந்த மூவரையும் இயக்கணும்னு ஆசை. அடுத்து அப்பாவின் உண்மையான கேரக்டருக்கு ஏத்தமாதிரி அவரின் வயசுக்கு ஏத்தமாதிரி அவரை ஹீரோவா வெச்சு ஒரு படம் பண்ணணும். ஏன்னா அவர்தான் என் முதல் ஹீரோ!”

வர்றாங்க வாரிசுகள்..!

“பாலகுமாரன் பையன் காதல் படம் எடுக்கலைனா எப்படி!”

சூர்யா பாலகுமாரன்

``அப்பா பெயரை இதுவரை சிபாரிசுக்குப் பயன்படுத்தியதே இல்லை’’ அடக்கமாகப் பேசுகிறார்  பிரபல எழுத்தாளரும்,  ‘நாயகன்’,  `பாட்ஷா’, ‘ஜீன்ஸ்’, ‘முகவரி’,  ‘சிட்டிசன்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல படங்களின் வசனகர்த்தாவுமான பாலகுமாரனின் மகன் சூர்யா.

‘` நான் வளர்க்கப்பட்டதே சினிமாவில்தான்.எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அப்பா, கமல்ஹாசன் வீட்டுக்குப் போகும் போது என்னையும் அழைச்சுட்டுப் போவார்.அவங்க பேசுறதைக் கேட்க அவ்ளோ ஆர்வமா இருக்கும். எனக்கு ரோல்மாடலே அவர்கள் இருவரும்தான். அவர்கள் பேச்சைக் கேட்டு கேட்டு நானும் சினிமாதான் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன். ஆனா, நேரா சினிமாவுக்கு வரல.

வர்றாங்க வாரிசுகள்..!எம்.பி.ஏ படிச்சேன். 5 வருஷம் டி.சி.எஸ்-ல ஹெச்.ஆரா வேலை பார்த்துட்டுதான் சினிமாவுக்குள் வந்தேன். இயக்குநர் வஸந்த் சாரின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ படம்தான் உதவி இயக்குநரா எனக்கு முதல் படம்.  அதன் பிறகு, அட்லியிடம் சேர்ந்தேன். அட்லி குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே பழக்கம். அட்லியின்  ‘முகப்புத்தகம்’ குறும்படத்தில் வசனம் நான்தான் எழுதினேன். இப்போ நான் ‘மெர்சல்’ பட வேலைகள்ல செம பிஸி. ஸ்க்ரிப்ட்டில் இருக்கும் விஷயத்தை ஸ்கிரீனில் அப்படியே கொண்டுவந்தாதான் நல்ல இயக்குநர்னு அர்த்தம். அதுக்கு சரியான உதாரணம் அட்லிதான். அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்ட விஷயங்களை வெச்சுதான் நான் இப்போ இயக்குநர் ஆகியிருக்கேன்.

என்னுடைய முதல் படத்தைக் காதல் படமாக எடுக்க ஆசை. பாலகுமாரன் பையனா இருந்துட்டு காதல் படம் எடுக்கலைனா எப்படி? அதேபோல் கமல் சாரின் தாக்கமும் நிச்சயம் என் படத்தில் எதிரொலிக்கும்.  நிச்சயமா கமல் சாரையும் சீக்கிரமே இயக்குவேன்’’ என நம்பிக்கையோடு பேசுகிறார் சூர்யா.

வர்றாங்க வாரிசுகள்..!

இயக்குநர் சஞ்சய் ரெடி!

சஞ்சய் பாரதி

‘`எங்க  குடும்பத்துல மூணாவது தலைமுறை சினிமாக் கலைஞன் நான்’’ என அறிமுகமாகிறார் சஞ்சய் பாரதி. கமல்ஹாசனின் ‘குணா’, ‘மகாநதி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன்தான் சஞ்சய் பாரதி. இவர் இப்போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் உதவி இயக்குநர். விரைவிலேயே படம் இயக்கும் கனவில் இருக்கிறார் சஞ்சய்.  

``சினிமா ஆசை இருக்கிறவங்க விஷுவல் கம்யூனிகேஷன்தான் படிப்பாங்க. ஆனால், லயோலா-ல நான் பி.காம் படிச்சேன். காலேஜ் முடிச்சவுடனேயே நேரா நடிக்க வந்துட்டேன்.  என்னை முதன் முதல்ல  நடிகனா அறிமுகப்படுத்தினது இயக்குநர் செல்வா சார்தான்.  அவருடைய ‘நாங்க’ படத்தில்தான் அறிமுகமானேன். அதன்பிறகு ‘புத்தகம்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘மாஸ்’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’னு சில படங்கள்ல நடிச்சேன்.

 சந்தான பாரதி பையன்றதால சினிமாவில் எனக்கு நிறைய பேரைத் தெரியும். ஆனால், தெரியாத ஆள்கிட்ட வேலை செய்யணும்னு யோசிச்சுதான் ஏ.எல்.விஜய் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன். ‘தேவி’, ‘வனமகன்’ படங்களும், நிறைய விளம்பரப் படங்களும்னு கடந்த இரண்டு வருஷமா அவர்கூடதான் இருக்கேன்.

சீக்கிரமே நான் இயக்கப்போகும் என் முதல் படத்தின் அறிவிப்பு வரும். படம் அடுத்த வருஷம் ரிலீஸ் ஆகும். நடிகர்கள் யார் யார்னு பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு. சீக்கிரமே இயக்குநர் சஞ்சயைப் பேட்டி எடுப்பீங்க’’ எனக் கைகுலுக்குகிறார் சஞ்சய் பாரதி.

வர்றாங்க வாரிசுகள்..!

அஜித்தும் மணிரத்னமும்!

ஜஷ்வந்த் கண்ணன்  & பிரஜீஷ் திவாகரன்

ரமேஷ் கண்ணனின் இரண்டு மகன்கள் ஜஷ்வந்த் கண்ணன்  மற்றும்  பிரஜீஷ் திவாகரன். தமிழ் சினிமாவில் இயக்குநராகும் கனவோடு உதவி இயக்குநர்களாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  இதில் ரமேஷ்  கண்ணனின் முதல் மகன் ஜஷ்வந்த் கண்ணன் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

‘`ப்ளஸ்-2 முடிச்சதுமே அப்பாகிட்டயே உதவி இயக்குநரா சேரணும்னு அடம்பிடிச்சேன். `காலேஜ் படிச்சு முடிச்சாத்தான் சினிமா’ன்னு அப்பா சொல்லிட்டார். அப்பாவுக்காக இன்ஜினீயரிங் படிச்சேன். அதன்பிறகும் அப்பா சினிமாவுக்குள் விடலை. ‘ரெண்டு வருஷம் படிப்புக்கேத்த வேலையைப் பாரு’ன்னு சொல்லிட்டார். அதனால், விப்ரோவில் ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். இதுக்கு மேல முடியாதுப்பான்னு சொல்லிட்டு சினிமா பக்கம் வந்துட்டேன்.

திருக்குமரன் எடுத்த ‘கெத்து’ படத்தில் உதவி இயக்குநரா வேலை செஞ்சு முடிச்சுட்டு  `ஸ்பைடர்’ படத்தில் முருகதாஸ் சார்கிட்ட சேர்ந்துட்டேன்.

அடுத்து, நான் இயக்கப்போகும் படங்களும் கண்டிப்பா ஏ.ஆர்.முருகதாஸ் சார் படங்கள் மாதிரியே ஆக்‌ஷன், கமர்ஷியல் படங்களாதான் இருக்கும். எந்த ஸ்க்ரிப்ட் நான் யோசிச்சு எழுதினாலும் அஜித் சார்தான் மனசில் வருவார். அஜித்தை வெச்சு நிச்சயம் ஒரு படம் இயக்குவேன்’’ என ஜஷ்வந்த் மாரத்தான்போல் பேசி முடிக்க, அவர் தம்பி பிரஜீஷ் பேசுகிறார்.

‘`எனக்கும் என் அண்ணனுக்கும் எங்க அப்பா எந்த வித்தி யாசத்தையும் காண்பிச்சதே இல்லை. அண்ணன் மாதிரியே இன்ஜினீயரிங் படிச்சு, அவர் போலவே விப்ரோவில் கொஞ்ச நாள் வேலையும் பார்த்த பிறகுதான் சினிமாவுக்குள் நுழைய விட்டார். மணிரத்னம் சாரைப் போய்ப் பார்த்தேன். ‘முதலில் ஒரு குறும்படம் இயக்கி எடுத்துட்டு வா. அப்புறம் பார்ப்போம்’னு அனுப்பிவெச்சார். 

அவருக்காகவே ‘தி காட் ஃபாதர்’னு ஒரு குறும்படத்தை இயக்கினேன். அது செம ஹிட். மணிரத்னம் சார் என்னை அசிஸ்டென்ட்டா சேர்த்துக் கிட்டார். மணிரத்னம் சார்கிட்ட வேலை செய்ய செம எனர்ஜி வேணும். ஏன்னா, அவர் ஒரு 20 வயசு பையன்போல அவ்ளோ எனர்ஜெட்டிக்கா இருப்பார். யோசிக்கிறதெல்லாம் வேற லெவல்ல இருக்கும். எனக்கு சினிமாவை அவர் தவிர வேறு யாராலும் இவ்ளோ பிரமாதமா சொல்லிக்கொடுக்க முடியுமான்னு தெரியலை. இன்னும் பல வருஷங்கள் அவர்கூட வேலைசெஞ்சுட்டுதான் படம் இயக்கணும்னு இருக்கேன். அப்புறம்தான் என் முதல் படம்.’’ தெளிவாகப் பேசுகிறார் பிரஜீஷ்.