Published:Updated:

ரெண்டாவது படம்!

ரெண்டாவது படம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாவது படம்!

நா.சிபிச்சக்கரவர்த்தி

ரெண்டாவது படம்!

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
ரெண்டாவது படம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாவது படம்!
ரெண்டாவது படம்!

வர்கள் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்கள். `வாவ்’, ‘செம’, ‘தரமான முயற்சி’, என்றெல்லாம் அங்கீகாரங்களையும் வசூலையும் வாங்கிக் குவித்த தமிழ் சினிமா அறிமுக இயக்குநர்களின் அடுத்த படங்கள் என்ன?

ரெண்டாவது படம்!

`உறியடி’

ரெண்டாவது படம்!


விஜயகுமார்

``நான் மக்கள் கலைஞனா இருக்கத்தான் ஆசைப்படுறேன். கமர்ஷியலா படம் இயக்கினாலும், அது சமூகத்துக்குப் பயன்படுற மாதிரி இருக்கணும். அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அடிப்படையா வெச்சு, இப்போ ஒரு கதை எழுதியிருக்கேன்.  ஃபர்ஸ்ட் டிராஃப்ட் வரைக்கும் எழுதி முடிச்சுட்டேன். ஆனா, அதுக்கே பட்ஜெட் நிறைய தேவைப்படும்போல. அதை உடனே பண்ண முடியாத ஒரு சூழல். இப்ப அதைக் கொஞ்சம் தள்ளிவெச்சுட்டு, வேற ஒரு ஸ்க்ரிப்ட் புதுசா எழுதிட்டிருக்கேன். இது த்ரில்லர் கம் அரசியல் ஸ்டோரி. இந்தக் கதையிலும் நான் நடிக்கிறேன். படத்துல நடிக்கப்போற ஆர்டிஸ்ட் யார் யாருன்னு  இன்னும் முடிவாகலை.”

ரெண்டாவது படம்!

`அதே கண்கள்’

ரோஹின் வெங்கடேசன்

`` ‘அதே கண்கள்’ படம் பார்த்துட்டு இயக்குநர் பாக்யராஜ் சார் ஒரு சினிமா நிகழ்ச்சியில பாராட்டி பேசியிருந்தார். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவரை நேர்ல மீட் பண்ணபோது ‘நான் தான் ‘அதே கண்கள்’ இயக்குநர்னு சொன்னேன். ‘ரொம்ப நல்லா திரைக்கதை எழுதி இருக்கே’னு வாழ்த்தினார். அந்த ஃபீலும் மனசுக்கு இன்னமும் நெருக்கமா இருக்கு. அடுத்தும் ஒரு சின்ன பட்ஜெட் படமா பண்ணலாம்னு ஐடியா. இப்ப எழுதிய வரைக்கும் கதை ரொமான்ஸ் த்ரில்லரா வந்திருக்கு. முழுசா எழுதி முடிச்சாத்தான் அது என்ன மாதிரி சினிமானு சொல்ல முடியும். ஆனா, நிச்சயம் அடுத்த லெவல் ஆஃப் சினிமாவா இருக்கும். ஸ்க்ரிப்ட் முடிச்ச பிறகுதான் ஆர்ட்டிஸ்ட் யார் யார்னு முடிவு பண்ணனும். ஆனா, டெக்னிக்கல்னு டீம் `அதே கண்கள்’ டீம்தான்!”

ரெண்டாவது படம்!

‘8 தோட்டாக்கள்’

ஸ்ரீகணேஷ்

“யார் படமெல்லாம் பார்த்துட்டு நான் சினிமா எடுக்கணும்னு ஆசைப்பட்டனோ... அவங்க அனைவரும் என் படத்தைப் பார்த்துட்டுப் பாராட்டினது வாழ்த்தினது ரொம்ப உற்சாகத்தைக் கொடுத்தது. அடுத்த படத்துக்கான ஸ்க்ரிப்ட்  முழுக்க எழுதி முடிச்சுட்டேன். அதர்வாதான் ஹீரோ. ஹீரோயினுக்குப் பேசிட்டு இருக்கோம். இன்னமும் ஒரு மாசத்துல ஷூட்டிங் தொடங்குறோம்.”

ரெண்டாவது படம்!

‘ஒரு நாள் கூத்து’

நெல்சன் வெங்கடேசன்


“ `ஒரு நாள் கூத்து’ படம் மக்கள் முதல் சினிமா துறையினர் வரை எல்லாருக்குமே ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்தப் படம் தெலுங்குல ‘Pelli Roju’னு டப்பாகி ரிலீஸ் ஆகப்போகுது. தெலுங்குல நிறைய தயாரிப்பாளர்களும் தியேட்டர் விநியோகஸ்தர்களும் படம் பார்த்துட்டுப் பாராட்டுத் தெரிவிச்சாங்க. என் அடுத்த படம் இதைவிட ஒரு படிமேல கொடுக்கணும்னு நினைக்கிறேன். அடுத்தடுத்து தொடர்ந்து மூணு ஸ்க்ரிப்ட் எழுதினேன். அதுல ஒரு ஸ்க்ரிப்ட் ரொம்பப் பக்காவா வந்திருக்கு. இதுவேற ஒரு ஜானர், அவுட் ஆஃப் த பாக்ஸ் சினிமாவாக இருக்கும். கொஞ்சம் குறைவான கேரக்டர்களை வெச்சுத்தான் ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கேன். பெரிய தயாரிப்பு நிறுவனத்தின்கூட இணைந்து வொர்க் பண்ணப்போறேன். ஓரிரு மாசத்துல ஷூட்டிங் போய்டுவோம்.”

ரெண்டாவது படம்!

`மாநகரம்’

லோகேஷ் கனகராஜ்

``எங்க படம் ரிலீஸானப்ப டாப் டைரக்டர்ஸ் பலர் கூப்பிட்டு வாழ்த்தினாங்க. படத்துல பல நுணுக்கமான சீன்ஸ் வெச்சிருந்தேன். ரஜினி சாரும் ஷங்கர் சாரும் அதையெல்லாம் கோட் பண்ணி ரொம்ப நேரம் என்கூட பேசினாங்க. இதெல்லாம்  என்னை இன்னும் பொறுப்புள்ளவனா மாத்தியிருக்கு. `மாநகரம்’ படம் ரிலீஸ் ஆனதுமே... அடுத்த பட வேலைகளைத் தொடங்கிட்டேன். இப்பக் கிட்டத்தட்ட முழு ஸ்க்ரிப்ட்டையும் எழுதி முடிச்சுட்டேன். ஆனா, இதுக்கான ரிசர்ச் வேலைகள் இன்னமும் நிறைய இருக்கு. இது ஒரு `சூப்பர் நேச்சுரல் ஆக்‌ஷன்’ ஜானர் படமா இருக்கும். `மாநகரம்’ தயாரித்த எஸ்.ஆர்.பிரபு சார் டீம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்குறாங்க. நடிப்பு, கேமரா, இசைன்னு எல்லாம் ஃபைனல் ஆனதும் ஷூட்டிங் தொடங்கிடுவோம்.”

ரெண்டாவது படம்!

‘ரங்கூன்’

ராஜ்குமார் பெரியசாமி

“ ‘ரங்கூன்’ படத்துல இந்தியா - மியான்மர்  பார்டர்ல இருக்கும் ‘மோரே’னு ஒரு ஊரைக்  காமிச்சுருப்போம். படத்தைப் பார்த்த அந்த ஊர் பர்மா தமிழர்கள் அங்கிருந்து பல ஆயிரம் மைல்கள் கடந்து என் வீடு தேடி வந்துட்டாங்க. ‘எங்க ஊர் லைஃப் ஸ்டைலை அப்படியே படத்துல காமிச்சிருக்கீங்க. உங்களுக்கு ஒரு பரிசு தர்ரோம்’னு சொல்லி என்னை அப்படியே ஓவியமா வரைஞ்சு கொடுத்தாங்க. நெகிழ்ந்து போனேன். அடுத்து ஒரு திரில்லர் ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருக்கேன். முடியற ஸ்டேஜ்ல இருக்கு. முடிச்சதும்தான் தயாரிப்பாளர், ஹீரோ எல்லாம் முடிவாகும். நிச்சயம் அடுத்தபடமும் இதே மாதிரி நிறைய பாராட்டுகள் வாங்குற ஹிட் படமா இருக்கும்.”

ரெண்டாவது படம்!

`ஒரு கிடாயின் கருணை மனு’

சுரேஷ் சங்கையா

``கடல்களைக்  கடந்து, பல மொழிகளைக் கடந்து பல வெளிநாட்டினரும் `கிடாயின் கருணை மனு’ படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சாங்கனு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இந்தப் படம் வெளியாகும்போதே அடுத்த பட ஸ்க்ரிப்ட் வேலைகளைத் தொடங்கிட்டேன். இந்தப் படத்துல ஒரு பெரிய ஹீரோதான் ஹீரோவா நடிக்கிறார். சமுதாயம் சார்ந்த படமா இது இருந்தாலும் முழுக்க முழுக்க காமெடி இருக்கும். `ஒரு கிடாயின் கருணை மனு’ படத்துல எப்படி ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பட்டாளமே நடிச்சிருப்பாங்களோ... இந்தப் படத்துலயும் அப்படி நிறைய பேர் நடிக்க இருக்காங்க.  சில சீன்களில் எல்லாம் 300-ல இருந்து 400 பேர்லாம் வருவாங்க. இப்படி ஒரு பெரிய கூட்டத்துல வேலை செய்யத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. ஈராஸ் இன்டர்நேஷனல்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறாங்க. முழு விவரத்தையும் விரைவில் சொல்றேன்.”