Published:Updated:

சாதியைத் தவிர்த்திடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!

சாதியைத் தவிர்த்திடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!
பிரீமியம் ஸ்டோரி
சாதியைத் தவிர்த்திடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!

கே.ஜி.மணிகண்டன்

சாதியைத் தவிர்த்திடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!

கே.ஜி.மணிகண்டன்

Published:Updated:
சாதியைத் தவிர்த்திடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!
பிரீமியம் ஸ்டோரி
சாதியைத் தவிர்த்திடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!

“நம்ம நாட்டுல நகரங்களைவிட கிராமங்கள்தாங்க அதிகம். அவங்ககிட்ட, அவங்க வீட்டுப் பிள்ளையா நான் ரீச் ஆகிட்டேன். நீங்க க்ளிஷேன்னு சொல்றீங்க. ஆமா, க்ளிஷேதான். நீங்க உங்க கிராமத்துக்குப் போறதும், கிராமத்துல இருக்கிற உங்க வீட்டுக்குப் போறதும்கூட க்ளிஷேதான். அதுக்காக வீட்டுக்கும், ஊருக்கும் போறதை விட்டுட்டோமா என்ன? கிராம மக்களோட அன்பையும், நேசத்தையும் விட்டுட்டு என்னால வர முடியுமான்னு தெரியலை. ஏன்னா, கான்வென்ட்ல படிச்சாலும், நானும் ஒரு கிராமத்தான்தானே?” - ``தொடர்ந்து  கிராமத்துப் படங்களிலேயே நடிக்கிறீங்களே?’’ என்பதற்கான சசிக்குமார் பதில் இது. கிராமம், பாசம், நேசம் என  மீண்டும் டிபிக்கல் சசிக்குமார் ரெடி. 

சாதியைத் தவிர்த்திடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!

‘`சரி... ‘கொடிவீரன்’ என்ன கதை? இதைத் தேர்ந்தெடுத்ததுக்கான காரணம் என்ன?”

“ ‘குட்டிப்புலி’ பண்ணும்போதே, ‘அண்ணன் - தங்கச்சி பாசத்தைச் சொல்ற கதை ஒண்ணு பண்ணுங்களேன்’னு முத்தையாகிட்ட சொல்லியிருந்தேன். ஏன்னா, முத்தையாவுக்குக் கிராமத்துச்சூழல், உறவுகளோட தேவை, பேச்சு வழக்கு எல்லாம் யதார்த்தமா வரும். இது ஓர் அண்ணன் - தங்கச்சி இல்ல... பல அண்ணன் - தங்கச்சிகளோட கதை. உறவுகளுக்குள்ள இருக்கிற கோபம், நியாயம், அநியாயம் எல்லாம் இந்தப் படத்துல இருக்கும். கூடவே, உறவுகளோட முக்கியத்துவத்தையும் சொல்லியிருக்கோம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதியைத் தவிர்த்திடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!

ஏன்னா, இன்னைக்கு எல்லார் கையிலும் மொபைல் போன் இருக்கு. உலகமே அதுல அடங்கும்னு சொன்னாலும், உறவுகளோட ஃபீல் அதுல கிடைக்காது. ஃபேஸ்புக், ட்விட்டர்ல ஒதுக்குற நேரத்தைக்கூட அம்மா, அப்பாவோட பேசுறதுக்கு நாம ஒதுக்குறதில்லை. தனிமையும், மொபைலும்தான் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு. படம் பார்க்கும்போது, நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கிற இந்த இறுக்கமான சூழலைக் கொஞ்சமாவது மாத்திக்கணும்னு தோணும். ஏன்னா, வெற்றியோட சந்தோஷத்துக்கும், தோல்வியோட வலிக்கும் உறவுகள்தான் பலம். அதை எந்த டெக்னாலஜியும் நமக்குக் கொடுக்காது. படத்துல ஊர்த் திருவிழாவுல குறி சொல்ற ‘கொடிவீரன்’ நான். தங்கச்சிப் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாத பாசமான அண்ணனா நடிச்சிருக்கேன்.”

“ ‘சாதி ரீதியான படங்கள் மட்டும்தான் பண்றார்’னு இயக்குநர் முத்தையாமீது விமர்சனம் இருக்கு. அவரின் படங்களிலும் அது வெளிப்படுது. இதைப்பற்றி அவர்கிட்ட பேசியிருக்கீங்களா?”

“அவர்கிட்டனு இல்லை... பொதுவா இப்போ கதை கேட்கும்போதே, முடிஞ்ச அளவுக்கு சாதியைத் தவிர்க்கச் சொல்றேன். என்கிட்ட கதை சொல்ல வர்றவங்க, அவங்க வாழ்ந்த சூழலைத்தான் சொல்ல முடியும், அதை நான் கதையா மட்டும்தான் கேட்க முடியும். ஆனா, இப்பல்லாம் கதை சொல்றவங்ககிட்ட ஓப்பனாவே ‘சாதியைத் தவிர்த்திடுங்க’னு சொல்ல ஆரம்பிச்சுட்டேன். ஒரு சாதிக்குள் நடக்கிற கதையா இருந்தாலும் அது வேறு எந்தச் சமூகத்தையும் ஹர்ட் பண்ணக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கேன். ‘குட்டிப்புலி’ பண்ணும்போதே, வில்லனுக்குப் பல பெயரைப் பரிசீலனை பண்ணிக் கடைசியா, எங்க எக்ஸிகியூடிவ் ப்ரொடியூஸர் மூர்த்தி பெயரை வெச்சோம். அதுக்கும் யாராவது ஏதாச்சும் சொல்லிடுவாங்களோனு, ‘எம்.எம்.எஸ்.மூர்த்தி’னு மாத்தினோம். தலைவர்களோட போட்டோவைக் காட்டுற சீன் வந்தா, எல்லாத் தலைவர்களும் இடம் பிடிக்கிற மாதிரி பார்த்துக்கிறேன். கேரக்டரோட நடை, உடை, பாவனைகள்னு சில விஷயங்களை மாத்த முடியாதே தவிர, மேக்ஸிமம் என்னால எவ்வளவு தவிர்க்க முடியுமோ, தவிர்த்திடுவேன்.”    

சாதியைத் தவிர்த்திடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!

“ரெண்டு,மூணு ஹீரோயின்கள் படத்துல இருக்கணும்னு அடம் பிடிப்பீங்களோ?”

‘`திட்டமிட்டா இதெல்லாம் பண்ணுவாய்ங்க... கதைக்குத் தேவைப்பட்டுச்சுங்க. ஒண்ணு தெரிஞ்சுக்குங்க, ஹீரோயினைத் தேடுறது கஷ்டமான காரியம். முத்தையா, ‘இந்தக் கதைக்கு மூணு ஹீரோயின்ஸ் வேணும்’னு சொன்னப்பவே பக்குனு இருந்துச்சு. இந்தப் படத்துல மஹிமா எனக்கு ஜோடியாவும், சனுஷா எனக்குத் தங்கச்சியாவும் நடிச்சிருக்காங்க. பூர்ணாவுக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர். படத்துல வர்ற ரெண்டு சீனுக்காக அவங்க மொட்டை அடிச்சாங்க. எந்த ஹீரோயினும் மொட்டை அடிக்க ஒப்புக்க மாட்டாங்க.  தன் கேரக்டருக்கான வீரியம் தெரிஞ்சு சம்மதிச்சாங்க. முடியோட பார்த்துட்டு, கடைசியில அவங்களை மொட்டையா பார்க்கிறதுக்கு எனக்கே சங்கடமாத்தான் இருந்துச்சு. ஆனா, இந்தப் பரிதாபம் படம் பார்க்கிற ஆடியன்ஸையும் நிச்சயம் தொத்திக்கும்.  பூர்ணாவோட நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும்.”

‘’நீங்க நடிகர் ஆனதே எதிர்பாராதது. அதுவே இப்போ முழு நேரமா தொடருது... எப்படி ஃபீல் பண்றீங்க?”

“எப்போ இயக்கப் போறீங்கன்னு சுத்தி வளைச்சுக் கேட்கிறீங்க... ரைட்டு. நடிகர் ஆகணும்னு நான் பிளான் பண்ணலை. ஆனா, ரசிகர்கள்  என்னை நடிகராவும் ஏத்துக்கிட்டாங்க. மற்றபடி, எனக்கு டைரக்‌ஷன் பண்றதுதான் ரொம்பப் பிடிக்கும். ஒரே நேரத்துல பல வேலைகளைப் பார்க்கிற ஆள் நான் கிடையாது. நடிகரா இன்னும் சில கமிட்மென்ட்ஸ் இருக்கு. அதையெல்லாம் முடிச்சுட்டுதான், இயக்குநரா களமிறங்கணும். ரெண்டு ஸ்கிரிப்ட் முடிச்சு வெச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் டேக் ஆஃப் ஆகும்.”  

சாதியைத் தவிர்த்திடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!

“இயக்குநரா ‘சுப்ரமணியபுரம்’, தயாரிப்பாளரா ‘பசங்க’, ‘தலைமுறைகள்’னு அழுத்தமான பதிவுகள் இருக்கு. நடிகர் சசிகுமாருக்கு?”

“இதுவரை யோசிக்கலை. ஒரு நடிகரா, ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கைக் கொடுக்கணும். அதைச் சரியா பண்றேன். தவிர, என்கிட்ட கதை சொல்ற இயக்குநர்களும் எனக்கு இதுதான் செட் ஆகும்ங்கிற மனநிலையோட வர்றாங்க. அந்த எண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாதான் உடைக்கணும். மத்தபடி, நடிப்பு எனக்கு கமர்ஷியலுக்கான ஏரியாதான்.”   

சாதியைத் தவிர்த்திடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!

“ ‘என் குடும்பம் இதுதான்னு தெரியாதவரை, அவங்க ஆட்டோவுல போவாங்க, பஸ்ஸுல போவாங்க. அவங்களுக்கான சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு இருப்பாங்க’ - ஃபேமிலியை ஃபோகஸ் பண்ணிக்காம இருக்கிறதுக்கு நீங்க சொன்ன காரணம் இது. இது மட்டும்தான் காரணமா?”

‘`ஆமா. மதுரைக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துல வாழ்ற கூட்டுக்குடும்பம் எங்களோடது. நான் வீட்டுக்குப் போனா, நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்... எதுவும் கிடையாது. அவங்க என்னை அப்படித்தான் நடத்துவாங்க. நானும் அப்படித்தான் இருப்பேன். மனைவி, குழந்தைங்க ஊர்லதான் இருக்காங்க. என்னால அவங்களோட நார்மல் லைஃப் பாதிச்சிடக் கூடாது.”