Published:Updated:

“முத்தம் அன்பின் பிரதிபலிப்பு!”

“முத்தம் அன்பின் பிரதிபலிப்பு!”
பிரீமியம் ஸ்டோரி
“முத்தம் அன்பின் பிரதிபலிப்பு!”

ஆர்.வைதேகி

“முத்தம் அன்பின் பிரதிபலிப்பு!”

ஆர்.வைதேகி

Published:Updated:
“முத்தம் அன்பின் பிரதிபலிப்பு!”
பிரீமியம் ஸ்டோரி
“முத்தம் அன்பின் பிரதிபலிப்பு!”

இப்போது ஆந்திராவே ஆராதிக்கும் அழகி ஷாலினி. `அர்ஜுன் ரெட்டி’ இந்த அமுல் பேபியை இந்தியா முழுக்க பிரபலமாக்கிவிட்டது. ஜபல்பூர் பொண்ணு, இன்ஜினீயரிங் படித்து முடித்திருக்கிறார் ‘100 பர்சென்ட் காதல்’ படத்தின் மூலம் தமிழுக்கும் வருகிறார் ஷாலினி.  

“முத்தம் அன்பின் பிரதிபலிப்பு!”

‘`சின்ன வயசுல நான் அறுந்த வாலு.  ‘பெரியவளானதும் என்னவாகப் போறே’ன்னு யார் கேட்டாலும் ஸ்டைலா ‘ஹீரோயின் ஆகப் போறேன்... குட்டிக்குட்டியா டிரெஸ் போட்டுப்பேன்’னுதான் சொல்வேன்.  அந்த வயசுலயே எப்பவும் மேக்கப்போடதான் இருப்பேன். அப்புறம் ஸ்போர்ட்ஸ்ல தீவிரமாயிட்டேன். எப்பப் பார்த்தாலும் வெயில்ல விளையாடிக் கறுத்துப்போன ஸ்கின்னும் அடிபட்ட தழும்புமா இருப்பேன். சில வருஷங்களுக்கு முன்னாடி என்னைப் பார்த்திருந்தீங்கன்னா ‘அவளா நீ...’ன்னு கேட்டிருப்பீங்க...’’

ஒரு நிமிடப் பேச்சிலேயே ஏகப்பட்ட எக்ஸ்பிரஷன்ஸ் காட்டுகிற ஷாலினி, முதல் படத்திலேயே உலக நாயகனுக்கு சவால் விட்டிருக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் மொத்தம் 19 முத்தக் காட்சிகள்!

``எப்படிம்மா?’’

‘`நீங்க ஏன் முத்தத்தை வித்தியாசமா பார்க்குறீங்க? அம்மா, அப்பாவை கிஸ் பண்றதை யாரும் தப்பாகப் பார்க்கறதில்லை. அதுவே பாய் ஃப்ரெண்டை கிஸ் பண்ணினா தப்பா? அந்தப் படத்துல வந்த கிஸ்ஸிங் சீன் எல்லாமே அன்பின் பிரதிபலிப்பு. அவ்ளோதான்...’’  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“முத்தம் அன்பின் பிரதிபலிப்பு!”

``சினிமாவுக்குள் எப்படி வந்தீங்க?’’

``எனக்குள்ள இருந்த நடிகையைக் கண்டுபிடிச்சது என் தோழிதான். ‘நீ ஏன் தியேட்டர் ட்ரை பண்ணக்கூடாது’னு வழிகாட்டினாங்க.  தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆனேன். அப்புறம் டி.வி நிகழ்ச்சிகள் பண்ணினேன். இன்னொரு பக்கம் என் போட்டோ ஆல்பமும் தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்திட்டிருந்தது. அதைப் பார்த்துட்டுதான் ‘அர்ஜுன் ரெட்டி’ டைரக்டர் சந்தீப் ரெட்டிகிட்ட இருந்து அழைப்பு வந்தது. முதல் நாள் எனக்குக் கதை சொன்னார். ரெண்டாவது நாள் போட்டோ ஷூட். மூணாவது நாள் படத்துல கமிட் ஆயிட்டேன். அடுத்து நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு. ‘அர்ஜுன் ரெட்டி’ ரிலீசானது... ஓவர்நைட்ல நான் இவ்வளவு பாப்புலரானது, மக்களோட இந்த அன்புனு எல்லாத்தையும் திகட்டத் திகட்ட என்ஜாய் பண்ணிட்டிருக்கேன்...’’

`` ‘100 பர்சென்ட் லவ்’ படம் பற்றிச் சொல்லுங்க?’’

``என் முதல் தமிழ்ப் படம். ஜி.வி.பிரகாஷ்கூட நடிக்கிறேன். ஜி.வியோட மியூசிக் கேட்டிருக்கேன். ஆனா, அவர் படங்கள் பார்த்ததில்லை. அவர்கூட நடிக்கறதுக்காகவாவது அந்தப் படங்களைப் பார்க்கணும். இதுதவிர நடிகை சாவித்ரியின் பயோபிக் ‘மகாநதி’யிலும் நடிக்கிறேன்.’’  

“முத்தம் அன்பின் பிரதிபலிப்பு!”

``தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பிச்சிட்டீங்களா?’’

‘`தமிழ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நிறைய தமிழ்ப் பாடல்கள் கேட்குறேன். சித் ஸ்ரீராம் பாடல்களை மனப்பாடம் பண்றதுதான் இப்போ எனக்கு வேலையே. தமிழ்ல எனக்குப் பிடிச்ச வார்த்தை காதல்.’’

``வார்த்தையில் ஓகே. வாழ்க்கையில்?’’

‘`சத்தியமா சொல்றேன்பா.... நம்புங்க. இதுவரைக்கும் ஒரு ப்ரபோசல்கூட வரல. ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல தப்பில்லைனு நினைக்கிறேன். எதிர்காலத்துல எனக்கு யாரையாவது பிடிச்சு அப்படி இருக்கணும்னு தோணினா, எனக்கு ஓகேதான்.’’

செம தில்லு!