`` `நம்பிக்கையோட பலமே அதை முழுசா நம்புறதுலதான் இருக்கு’னு பிச்சைக்காரன் படத்துல ஒரு வசனம் வரும். அது மாதிரிதான் `பிச்சைக்காரன்’ படத்தின்மேல் நான் முழுசா நம்பிக்கை வெச்சேன். என்னுடைய முதல் படத்திலிருந்து `இந்தியா பாகிஸ்தான்’ படம் வரைக்கும் பிற மொழியில் டப் பண்றதுக்கு ரைட்ஸ் கொடுத்ததில்ல. ஆனால், பிச்சைக்காரன் படத்தை ஏதோ ஒரு நம்பிக்கையில தெலுங்கில் டப் பண்ணச் சொல்லி, கொடுத்தேன். அது அந்த ஊர் மக்களுக்குப் பிடிச்சிருச்சு. அதுக்கப்பறம் தொடர்ந்து என்னோட படங்களை தெலுங்கிலும் டப் பண்ணிட்டிருக்கேன். நல்லா போயிட்டிருக்கு ப்ரோ’’ - நடிப்பு, இசை, தயாரிப்பு என செம பிஸியாகச் சுற்றிக்கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியிடம் பேசினேன்.

`` `அண்ணாதுரை’னு டைட்டிலே கொஞ்சம் அரசியலா இருக்கே?’’

‘` அரசியலுக்கும் படத்துக்கும் துளி சம்பந்தமும் இல்லை. இரட்டை வேடத்தில் நான் நடிக்கும் முதல் படம் இதுதான். என் படங்கள்ல நல்ல கதை, சுவாரஸ்யமான திரைக்கதை இருக்கணும்னு நினைப்பேன். அதே மாதிரி இந்தப் படத்தில் கதை, திரைக்கதை இரண்டுமே நல்லா வந்திருக்கு. சுசீந்திரன், வசந்தபாலன் படங்களில் உதவி இயக்குநரா வேலை பார்த்த சீனிவாசன் இந்தப் படத்தை இயக்கியிருக்கார். அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்குற விஷயங்கள்தான் இந்தப் படமே. அதான் `அண்ணாதுரை’.’’

``கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி’ எப்படி வந்திருக்கு?’’

‘`ரொம்ப நல்லா வந்துட்டிருக்கு. `பிச்சைக்காரன்’ படம் மாதிரி இதுவும் அம்மா பாசத்தை மையமா வெச்சு எடுக்கிற படம். பிச்சைக்காரனில் ஒரு மாதிரியான சென்டிமென்ட்னா இதில் வேற மாதிரியான சென்டிமென்ட். ஆஸ்திரேலியாவில் ஆரம்பித்து கடம்பாடி என்கிற கிராமத்தில் முடியும் இந்தப் படம். அஞ்சலி, சுனைனா, நாசர், யோகி பாபுனு நிறைய நட்சத்திரங்கள் நடிக்கிறாங்க.’’

``படத்துக்கு ரஜினி படத் தலைப்பு வெச்சிருக்கீங்களே?’’

‘`படத்தோட பெயர் எப்பவுமே சிம்பிளா இருக்கணும்னு ஆசைப்படுவேன். அதுனாலதான் நான், `சலீம்’, `பிச்சைக்காரன்’னு எளிமையான பெயர்களைப் படத்துக்கு வைப்பேன். அதுமட்டுமில்லாம, சில பெயர்கள் வைத்தால் ராசியாக இருக்காதுனு சொல்லுவாங்க. ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இருக்காது. என்ன நடக்குதுனு பாக்கலாம்னுதான் அந்தப் பெயர்களை வைக்கிறேன்.’’

``கிருத்திகா உதயநிதியின் இயக்கம் எப்படி இருக்கு?”

‘`இயக்குநரா கிருத்திகா உதயநிதி ரொம்ப தேர்ந்தவரா இருக்காங்க. நான் அவங்ககிட்ட ஒரு டைம், ‘எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுவச்சிருக்கீங்க. ஏன் நிறைய படங்கள் பண்ணலை’னு கேட்டேன். அதுக்கு அவங்க ‘எனக்குப் படம் எடுக்கணும்கிற கட்டாயம் இல்ல. எனக்குத் தோணுச்சுன்னா படம் இயக்குவேன். இல்ல எழுதுவேன். உங்களை மாதிரி கமிட்மென்ட்டில் சிக்க மாட்டேன். நான் வாழ்க்கையை வாழ நினைக்கிறேன்’னு சொன்னாங்க. அவங்க ரொம்ப டேக் இட் ஈஸி மனுஷி.’’

``விஜய்யை வெச்சு சீமான் இயக்குறதா இருந்த `பகலவன்’ படத்தில் நீங்க நடிக்கறீங்களாமே..?

‘`ஆமாம் பிரதர். சீமான் சார் கதை சொன்னார். ரொம்ப நல்ல கதை. நான் இன்னும் முடிக்க வேண்டிய சில படங்கள் இருக்கு. அவருக்கும் சில அரசியல் வேலைகள் இருக்கு. அதையெல்லாம் முடிச்சிட்டு `பகலவன்’ படத்தைப் பண்ணுவோம்.’’

``நீங்க ரொம்ப சட்டிலான கேரக்டரில் நடிக்கிறவர். சீமான் பேசும் போதே ரொம்ப ஆக்ரோஷமா பேசக்கூடியவர். அவர் உங்ககிட்ட கதை சொல்லும்போது எப்படி இருந்தது?’’

``சீமான் சாரை நான் அதிகமா ஃபாலோ பண்ணினது இல்ல. அவர் என்கிட்ட கதை சொல்லும்போது நான் எந்த ஐடியாவும் இல்லாம போய் உக்கார்ந்தேன். அவர் சொன்ன கதை எனக்குப் பிடிச்சிருந்தது. அதைவிட அவரோட எனர்ஜி ரொம்ப பிடிச்சிருந்தது. அவரோட எனர்ஜி ஜெயிக்கும்.’’

``உங்கள் படங்களுக்கு நீங்களே இசையமைக்க வேண்டும் என்பதுதான் முடிவா?’’

‘` `இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் மட்டும் தீனானு ஒரு புது இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தேன். பெரும்பாலும் என்னோட படங்களின் எமோஷன்ஸ் எனக்கு நல்லா தெரியும்கிறதனால நானே இசை அமைக்கும் போது ஒரு மன நிறைவு கிடைக்குது. இசை மட்டுமில்லாம என்னோட படங்களுக்கு நானே எடிட்டிங்கும் பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்கேன். கலர் கரெக்ஷன் பண்றதும் கத்துக்கிட்டிருக்கேன். ரொம்ப ப்ரஷர் வரும் போது இதையெல்லாம் வேற ஆள்கிட்ட கொடுப்பேன். அப்படி என்னோட படத்துக்கு வேற இசையமைப்பாளரை இசையமைக்கச் சொல்ல ணும்னா டி.இமானிடம் சொல்லுவேன்.’’

``பர்சனல் வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு?’’

``என் மனைவி ஃபாத்திமா தான் தயாரிப்பு நிறுவனத்தைப் பார்த்துக்கிறாங்க. அவங்களும் இதே துறையில இருக்கிறதனால நல்ல புரிதல் இருக்கு. ஆனால், குழந்தைகளோடு விளையாட நேரம் கிடைக்கிறது இல்ல. நைட்டு நான் தூங்கிட்டிருந்தாலும் என் மனைவி என் பொண்ணைத் தூக்கி என் மேல போட்ருவாங்க. ஒரு அம்மாவா அவங்க குழந்தைகளை நல்லபடியா பார்த்துக்கிறது னால என்னால நிம்மதியா வெளில வேலை பார்க்க முடியுது.’’