மடோனா இஸ் பேக். ஆனால், இந்தமுறை மடோனா பேசுவது மலையாளமில்லை, தமிழில்லை; ஆங்கிலம்! ``ஆமாம்... நான் இப்போ பீட்டர் கேர்ள்’’ என ஸ்வீட்டாகப் பேசிய மடோனாவிடம், பேச நிறைய விஷயம் இருக்கு!

``எல்லாருமே நான் நடிக்கிற ஆங்கிலப் படத்தை ஹாலிவுட் படம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. இந்திய சினிமாத் துறையைச் சார்ந்தவங்கதான் படத்தைத் தயாரிச்சிருக்காங்க. நிறைய திரைப்பட விழாவுக்கு இந்தப் படத்தை அனுப்பணும் என்பதுதான் எங்களோட நோக்கம். லீட் ரோல்ல நடிச்சிருக்கேன். மறைந்த மலையாள இயக்குநர் பத்மராஜனுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்துல இந்தப் படம் அமைக்கப்பட்டிருக்கு. முதல்ல இதை ஒரு குறும்படமா எடுக்கலாம்னுதான் முடிவெடுத்தோம். அதுக்கப்புறம் இந்தக் கதையோட முக்கியத்துவத்தைப் புரிஞ்சுக்கிட்டு முழுநீளப் படமா எடுக்கலாம்ன்ற முடிவுக்கு வந்தோம். இந்தியா மட்டுமல்லாம, மத்த மொழி மக்களுக்கும் இந்தப் படம் போய்ச் சேரணும்ன்றதை மனசுல வெச்சு ஆங்கில மொழில படத்தைத் தயாரிச்சிருக்கோம். அடுத்த வருஷம் படத்தை எதிர்பார்க்கலாம்.”

“அடுத்து என்ன படங்கள் பண்றீங்க?”

“இரண்டு படங்கள் பண்றேன். ஒரு மலையாளம் ஒரு தமிழ். இசை இல்லாம என்னோட வாழ்க்கையை நெனச்சுக்கூடப் பார்க்க முடியாது. நடிப்பைவிடப் பாடணும்னு எனக்கு ரொம்ப ஆசை. மலையாளம்-தமிழ் இரண்டு மொழிலயும் பாடிக் கலக்கணும்னு ஆசை.’’

“விஜய் சேதுபதியோட நட்பு பற்றிச் சொல்லுங்க?’’

“சினிமால எனக்கு இருக்குற நல்ல நண்பர்கள்ல விஜய் சேதுபதியும் ஒருத்தர். இவர் நடிக்குறதைப் பார்த்து நம்மளோட நடிப்பை மேம்படுத்திக்கலாம். எல்லோரையும் தன்னோட சக நண்பர்கள் மாதிரி ட்ரீட் பண்ணுவார். பேட்டி எடுக்கும் போது அவர் எப்படிப் பேசுறாரோ, அதே மாதிரிதான் நேர்லயும் பேசுவார். அவர் நம்ம கூட இருந்தா கஷ்டம்னு நினைக்குற வேலையைக்கூட ஈஸியா முடிச்சுத் தருவார். செம ஃப்ரெண்ட்லியான மனிதர்.’’

“சினிமாக்குள் எப்படி வந்தீங்க?”

``எனக்கு சின்ன வயசுல இருந்தே பாட்டு பாடுறதுல ஆர்வம் அதிகம். நிறைய டிவி நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு பாடியிருக்கேன். எனக்கு 14 வயசு இருக்கும்போது ஒரு மலையாளப் பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசு கிடைச்சது. அதுக்கப்புறம் சின்ன ப்ரேக் எடுத்துட்டு, படிப்புல அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் மறுபடியும் பாட ஆரம்பிச்சேன். பாட்டு பாடுறது மட்டும் இல்லாமல் நிகழ்ச்சி தொகுத்து வழங்குறதும் பண்ணிட்டிருந்தேன். அப்போ என்னை டிவில பார்த்த அல்ஃபோன்ஸ் புத்திரன் `ப்ரேமம்’ படத்துல நடிக்குறதுக்கான வாய்ப்பைக் கொடுத்தார். அப்புறம் அந்தப் படத்தோட சவுண்டு டிசைனர் விஷ்ணு கோவிந்தன் டைரக்டர் நலன்கிட்ட என்னை ‘காதலும் கடந்து போகும்’ படத்துக்காக சிபாரிசு செய்தார். அங்க இருந்துதான் சினிமாப் பயணம் ஆரம்பிச்சது.”

``உங்க குடும்பம் பற்றிச் சொல்லுங்க?’’

``அம்மா அப்பா ரெண்டுபேரும் சேர்ந்து டெக்ஸ்டைல் பிசினஸ் பண்றாங்க. என்னோட தங்கச்சிக்கு இப்போதான் ஏழு வயசாகுது. ஸ்கூல்ல இரண்டாவது படிச்சுட்டிருக்காங்க. இப்போ அவளைப் பாத்துக்கிறதுக்கே எங்க அம்மாவுக்கு நேரம் சரியா இருக்கு. ஸோ, என் வாழ்க்கையில எல்லா முடிவையும் நான்தான் எடுக்கறேன். எங்க வீட்லயும் என்னைப்பத்திக் கவலைப்படாம சந்தோஷமா இருக்காங்க.”

“எப்போ கல்யாணம்?”

“என் வாழ்க்கையில் நாளைக்கு என்ன நடக்கும்னுகூட யோசிச்சதில்லை. நடிப்புகூட அப்படித்தான். யோசிக்காத ஒரு தருணத்துல எல்லா வாய்ப்புகளும் தானா கிடைச்சது. கடவுளோட கருணையால் சினிமா வாழ்க்கை நல்லபடியா போயிட்டிருக்கு. ஸோ, என்னோட கல்யாணத்தையும் நான் ப்ளான் பண்ணப் போறதில்ல. நடக்குறப்போ நடக்கட்டுமே... ஏன் அவசரம்!’’