தீபாவளி ரிலீஸ் ‘மெர்சல்’ முறுக்கு மீசை மாறன் விஜய், அடுத்து பொங்கல் கொண்டாட ஆயத்தமாகி பர்ச்சேஸுக்காக தி.நகர் வருகிறார். ரங்கநாதன் தெருவில் கரும்பு ஜூஸ் கடை அருகில் வைத்து ‘பூவே உனக்காக’ ராஜா, ‘காதலுக்கு மரியாதை’ ஜீவா, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ குட்டி, ‘குஷி’ சிவா, ‘கில்லி’ சரவணவேலு, ‘திருப்பாச்சி’ சிவகிரி, ‘சிவகாசி’ முத்தப்பா, ‘போக்கிரி’ தமிழ், ‘நண்பன்’ பஞ்சவன் பாரிவேந்தன், ‘கத்தி’ கதிரேசன், ‘தெறி’ விஜய்குமார் டீம் அவரைச் சந்திக்கிறது. அப்புறம் என்ன... தெறி ‘கான்வோ’ ஆரம்பம்...

முதல் திரி கொளுத்தியது ‘தெறி’ டிசிபி தான். “ஹல்லோ, ஆளப்போறான் தமிழா! எப்படி இருக்கீங்க? சி.எம் என்ன சொன்னாரு?” இந்த விசாரிப்புக்குத் தெறித்தார் முறுக்கு மீசை. “போங்க ப்ரோ... ரஹ்மானை மனசுல வெச்சு லிரிக்ஸ் எழுதி நான் பாடுனாலும் வில்லங்கம்தான். நம்மளை வெச்சு செய்றதுதான் இவங்க ஐந்தாண்டுத் திட்டம் போல... (ஏதோ யோசனை வந்தவராய் சுதாரித்தபடி...) மரியாதை நிமித்தமான சந்திப்புதான். நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. யாரு இதுக்குப் பின்னாடி இருக்காங்கன்னும் தெரியலை. மாண்புமிகு ஐயா காபி கொடுத்து உபசரித்தார். அந்த ஃபில்டர் காபியின் தித்திப்பு என் நெஞ்சில் இப்பவும் இருக்கு!” - நாக்கை வாய்க்குள் சுழற்றிச் சிரிக்கிறார் மிஸ்டர் முறுக்கு.

“பேசாம அரசியலுக்கு வந்துடுங்க. உங்க சீனியர்ஸ்ல ஒருத்தர் போருக்குத் தயாராகிட்டார். இன்னொருத்தர் புயலா மையம் கொண்டு கிளம்பிட்டார். செந்தூரபாண்டி தம்பி நீங்கதான். செந்தூரபாண்டியே ஓரமா நிக்கிறப்போ நீங்கதான் முதல்ல களத்துல குதிச்சிருக்கணும். எப்பயோ வந்திருக்கணும், எப்படியோ வந்திருக்கணும். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலைங்ணா. நாட்டரசன்கோட்டைல நயன்தாராவை இறக்கிவிட்ட மாதிரி எமி ஜாக்ஸனையும் காஜல் அகர்வாலையும் வெச்சு ஊர் ஊரா போய் குத்தாட்டாம் போட்டு ஓட்டு கேட்குறேன். ம்முனு சொல்லுங்க” என்கிறார் ‘சிவகாசி’ முத்தப்பா. “ஆமாங்ணா... நான்கூட உங்க வெற்றிக்காக முகத்துல சந்தனத்தைப் பூசிக்கிட்டு நாக்குல அலகு குத்தி பழனிக்குப் பால்காவடி எடுக்குறேன். பட்டாசு பாலு, சனியன் சகடை, மூலி மங்காலாம் இப்போ வட்டச் செயலாளர்களா இருக்காங்க. நீங்க தைரியமா வாங்கணா!” - இது சாட்சாத் அந்தத் ‘திருப்பாச்சி’ சிவகிரியேதான்!

குழம்பிப்போன மிஸ்டர் முறுக்கு, “எல்லாம் சரி ப்ரோஸ்... ஆனா நீங்க ரெண்டு பேரும்தான் இப்போ ஃபீல்டுலயே இல்லையே... இப்படித்தான் ‘ஃபேன்டசி’ புலிவேந்தன்னு ஒருத்தர் வந்து 100சி, 200 சினு சொன்னாரு. கடைசில புதருக்குள்ள ஒரு கறுஞ்சிறுத்தைகிட்ட என்னைத் தனியா மாட்டிவிட்டுட்டுப் போயிட்டாரு. பூராப்பயலுகளும் ‘க்ளாமர் அப்பீல்’ மீம்ஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க. இன்னொருத்தரு ‘டாம் க்ரூஸ் ஹேர்ஸ்டைல் ப்ரூ’னு சொல்லி பைரவா விக்கைத் தலையில கவுத்திட்டாரு. அம்புட்டு மீம் பாய்ஸும் ‘வர்லாம் வர்லாம் வா’னு ஓட்டி எடுத்துட்டானுக. ‘தலைவாசல்’ விஜய்கூட தன் பேரை மாத்திக்கலாமானு யோசிக்கிறாரு தெரியுமா?” - மிஸ்டர் முறுக்கின் புலம்பலைக் கேட்டு எல்லோரும் தெறித்துப் போனார்கள்.

நெஞ்சில் கை வைத்தபடி முன்னே வந்தார் பஞ்சவன் பாரிவேந்தன். “டோண்ட் ஒர்ரி ப்ரோ, நான் உங்களுக்கு சப்போர்ட்டா ஸ்டூடண்ட் பவரைக் காட்டுறேன். தமிழ் சினிமால சங்கவியோடயும் சுவாதியோடயும் சேர்ந்து முதன்முதல்ல ஸ்டூடன்ட் பவர்னா என்னன்னு காட்டுனது நீங்கதான். உங்களுக்காகப் பலபேரோட பேன்ட்டைக் கழட்ட வைக்கிறேன். ஆனா, நீங்க யாருக்கும் சோப்பு மட்டும் போடக்கூடாது. மத்தபடி ஆல் இஸ் வெல்!” என்றார் ‘நண்பன்’ பாரிவேந்தன். “ஆமாங்ணா... நான்கூட கட்டிப்பிடி டான்ஸ்ல கில்லிங்ணா. பாப்பு பாப்புனு காலேஜ்ல டாப்பைப் போட்டு டாப் கியர்ல காலேஜ் பொண்ணுங்களைத் தூக்கியிருக்கேன். கொல்கத்தால இருந்து குலசேகரன்பட்டணம் வரைக்கும் நம்ம கட்சியில சேர்க்க நான் ரெடி. சின்னவயசுல ஆல் இந்தியா டூர் போனப்போ நிறைய கேர்ள்ஸ்க்கு கை குடுத்து விஷ் பண்ணியிருக்கேன். என் சுண்டுவிரல்ல அப்படி ஒரு லவ் பவர் இருக்கு ப்ரோ!” என்றபடி குஷி பி.ஜி.எம்மை வாயில் வாசிக்கிறார் ‘குஷி’ சிவா.

இதைக் கேட்டதும், ‘து.ம.து’ குட்டிக்குக் கோபம் வருகிறது. “காதலுக்காக கிட்னியையே வித்தவன் நானு. அந்தப் படத்துல க்ளைமாக்ஸ்ல ருக்கு என்னைத் தேடி வந்து, ‘நீதான் குட்டியா..?’னு கேட்டப்போ ‘இல்ல... நீதான்டி குட்டி!’னு சொல்லிப்புட்டேனாம். வாயை உடைச்சு கடைசியில பாட்டுப்பாட வெச்சு, ‘நல்லா பாடுறே மேன்... சூப்பர் சிங்கருக்கு ரெக்கமெண்ட் பண்றேன்’னு போயிட்டா. அது எழில் படங்கிறதால எடிட்டிங்ல போயிடுச்சு.”- பின்னணியில் ‘லலலல லாலாலா’ ஒலிக்க, சோகம் அப்பிய குரலில் பேசினார் குட்டி.

`காதல்ங்கிறது பூ மாதிரி. ஒரு தடவைதான் பூக்கும். விழுந்தா ஒட்ட முடியாது’னு சொன்னேன். பயலுக இப்பவரைக்கும் ஓட்டுறானுக. ஆனா, இப்ப யோசிச்சுப் பார்த்தா காதல்ங்கிறது ஒரு கார்பன் பேப்பர் மாதிரி. ஒரு தடவை எழுதினதை காப்பி எடுத்து இன்னொருத்தருக்குக் கொடுத்தா லைஃப் இஸ் பியூட்டிஃபுல் மச்சி” என்று ‘பூவே உனக்காக’ ராஜா சொல்ல... கடுப்பான `மெர்சல்’ முறுக்கு மீசை, “லவ் மூடுக்குப் போயிட்டீங்களா ப்ரோஸ்... கொஞ்சம் பாலிட்டிக்ஸ் பேசலாம் ப்ளீஸ்!” என ரூட்டை மாற்றி விடுகிறார்.

“ஆங்... அப்படி வாங்க ப்ரோ. நான் முத்துப்பாண்டி கோட்டையிலயே கழுத்துல துண்டைப்போட்டு இழுத்து, பொண்ணைத் தூக்கினவன். இது ப்ரோ கபடி சீஸன் வேற. செமையா டோர்னமென்ட் வெச்சு யூத்களை கவர் பண்ணிடலாம். சவுத்துக்கு நான் கியாரன்டி. ச்சும்மா பட்டையக் கிளப்பிடுவோம்! இன்னிக்கி தைப்பூசம் இல்லை. ஆனாலும் நல்லநாள்தான். இன்னிக்கே பிரஸ்மீட் வெச்சிடுங்க” - ‘கில்லி’ சரவணவேலு தம்ஸ் அப் சிம்பல் காட்ட மீசையை முறுக்குகிறார் `மெர்சல்’ அரசன். ரவுண்ட்ஸ் கிளம்பிய டிசிபி ‘தெறி’ விஜய்குமார் ஜூவி கழுகார் ஸ்டைலில் கிசுகிசு ஒன்றைச் சொல்லிவிட்டுப் பறந்தார். “உளவுத்துறை என்ன சொல்லுதுன்னா உங்க பேரை தன் பேர்ல பாதியா வெச்சிருக்குற மக்கள் செல்வன் அரசியலுக்கு வர சான்ஸ் இருக்காம். அதனாலதான் உங்களுக்கு முன்னாடி அவர் கருப்பான படத்துல காளையை அடக்கினாராம். அதனால ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்னு என்னை மாதிரி எல்கேஜி ரைம்ஸ் பாடிட்டிருக்காம சீக்கிரமா கட்சிப் பேரை அறிவிச்சிடுங்க. அட்லி படத்துலயே நடிச்சிட்டு காலத்தை அழிச்சிடாம ஜெட்லீ வேகத்துல முடிவெடுங்க” என்றபடி டிசிபி ஜிவ்வ்வினார்.

“அட்லினதும் எனக்கு இட்லி தத்துவம் ஞாபகம் வருது சகோ. `நீ சாப்பிட்டு மிச்சம் இருக்குற இட்லி இன்னொருவனோடது’னு நான் சிம்பிளா பேசிட்டு வீட்டுக்குப் போனா, மூணு நாளுக்கு முன்னாடி மீந்துபோன இட்லில உப்புமா செஞ்சு போட்டா என் மனைவி. கத்தி கம்யூனிஸத் தத்துவத்தை அவகிட்ட சொன்னா, காய்கறி நறுக்குற கத்தியால குத்திடுவேன்னு பயமுறுத்துறா. ஸோ ஸேட். பேசாம நானே அரசியல்ல குதிக்கலாம்னு இருக்கேன். இப்பெல்லாம் கத்தி கத்தினு கூப்பிடுறதுகூட என் காதுல கட்சி கட்சினுதான் விழுது!’’ எனப் புலம்புகிறார் ‘கத்தி’ கதிரேசன்

“ஆமா... நான்லாம் ஒரு தடவை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானேகூடக் கேட்க மாட்டேன். நீங்க உங்க அப்பா பேச்சை மட்டும் கேட்டு, தெளிவா முடிவெடுக்க மாட்டேங்குறீங்க.” - கர்ச்சீப்பை உதறி, கையில் கட்டியபடி ஹஸ்கி வாய்ஸில் உசுப்பேத்தினார் ‘போக்கிரி’ தமிழ். “சரி சரி... நீங்கெல்லாம் இவ்ளோ கேட்டுக்குறதால நான் அரசியலுக்கு வர்றேன். ஆனா, ஒரு கண்டிஷன்!” என மீசையை முறுக்கியபடி எல்லோரையும் பார்த்துச் சிரிக்கிறார் மெர்சல் மாறன். “சொல்லுங்க ப்ரோ... நாங்க உங்க உத்தரவுக்காகக் காத்துக்கிட்டிருக்கோம்’’ என்றனர் கோரஸாக. மையமாகச் சிரித்தபடி அந்த விபரீத ஆசிட் டெஸ்ட்டைச் சொன்னார் `மெர்சல்’ மிஸ்டர் முறுக்கு. “சுறா படத்தை மூணுவாட்டி பார்க்கணும்!” - இந்த வார்த்தைகளை ஸ்லோ மோஷனில் ப்ளே பண்ணியதைப்போல ஃப்ரீஸாகி மனக்கண்ணில் ஓடவிட்டு, “எஸ்ஸ்ஸ்....க்க்க்க்க்க்....கே....ப்ப்ப்ப்!” என எகிறிக் குதித்து ஓடுகிறார்கள் எல்லோரும்.