Published:Updated:

“இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா!”

“இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா!”

ப.சூரியராஜ், சுஜிதா சென், படம்: சொ.பாலசுப்ரமணியன்

“இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா!”

ப.சூரியராஜ், சுஜிதா சென், படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
“இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா!”

`மெர்சல்’ புயலுக்கிடையேயும் துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டிருக்கிறது `மேயாத மான்’.  ``இந்தப் படத்துல எது மக்களே உங்களை ஹெவியா லைக் பண்ண வெச்சுது?’’ என `மேயாத மான்’ படத்தின் ஒட்டுமொத்தக் குழுவும் நம் முன் வந்து நிற்க, பேச்சும் பாட்டும் கலாயும் என அந்த இடமே அதிர்ந்தது!

“ `மது’ன்னு நாங்க எடுத்த குறும்படம்தான் இப்போ பெரும்படமா `மேயாத மான்’ ஆகியிருக்கு. எப்போ பார்த்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் `மது’ குறும்படம் உங்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தும். குறும்படம் பார்த்த நிறைய  பேர், படமா பண்ணுனா நல்லாருக்கும்னு சொன்னாங்க. அப்போ ரத்னகுமாரைக் கூப்பிட்டு, `ஏதாவது கதையிருந்தா சொல்லுங்க, படம் பண்ணுவோம்’னு ஆரம்பிச்சு, கடைசியா `மது’வையே டெவலப் பண்ணி `மேயாத மான்’ பண்ணிட்டோம்’’ என இன்ட்ரோ கொடுக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ்.

“இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா!”

“`மது’க்குப் பதிலா நிறைய டைட்டில் யோசிச்சுட்டி ருந்தோம். முதல்ல `இதயம் முரளி’னு வெச்சோம். ஒருசில காரணங்களால அந்த டைட்டில் வைக்க முடியாமப் போச்சு. அப்போ  ஒருநாள் `மேயாத மான்’ங்கிற தலைப்பு, மூளைக்குள்ள ஸ்பார்க் ஆச்சு. அதையே டைட்டிலாகவும் வெச்சாச்சு. சரி, அதை விடுங்க... `மேயாத மான்’ டைட்டில் நல்லாதானே இருக்கு” என, சுற்றி இருப்பவர்களிடம் இயக்குநர் ரத்னகுமார் பாவமாய்க் கேட்க, `அட நல்லாருக்கு... நல்லாதான் இருக்கு’ எனக் கோரஸாய் அவர் மனதைத் தேற்றினார்கள்.

`` `மது’ குறும்படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு வைபவும் வந்திருந்தார். அவருக்குப் பார்த்ததும் படம் பிடிச்சுப்போச்சு. `மது’வைப் பெரிய படமா பண்ணலாம்னு சொல்வார். ராத்திரி பகல்னு எப்போ பார்த்தாலும் இதைப் பத்தியே டிஸ்கஸ் பண்ணிட்டே இருப்போம்.  ‘லவ்வர்ஸ்கூட இந்த அளவுக்குப் பேச மாட்டாங்கடா’னு எங்களைக் கலாய்ச்சவங்க ஏகப்பட்ட பேர். படத்துக்குக் கதாநாயகியைத் தேடிட்டிருந்தப்போ ப்ரியாவோட படங்கள் யதார்த்தமா கண்ணுல சிக்குச்சு. விவேக் பிரசன்னா ஏற்கெனவே `மது’ குறும்படத்துல நடிச்சிருந்ததனால அவரையே இந்தப் படத்துலயும் நடிக்க வெச்சுட்டோம். சுடர் கதாபாத்திரத்துக்குத்தான் சரியான நடிகையைக் கண்டுபிடிக்க ரொம்ப டைம் ஆச்சு. படத்துக்கு ஆபீஸெல்லாம் போட்டாச்சு, ஆனால், தங்கச்சியை மட்டும் எங்களால கண்டுபிடிக்கவே முடியலை. அண்ணனோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டாலும், உறுத்தாமல் இருக்குற, அதேநேரம் ஒவ்வொருத்தரும் தன் தங்கச்சியாவே பார்க்குற மாதிரியான ஒரு முகத்தைத் தேடி அலையாத இடம் கிடையாது. கடைசியாதான் இந்துஜாவைப் பார்த்தோம். ஆடிஷன்லேயே கெட்டப் செட்டப் எல்லாத்தையும் மாத்தி ஒரு கலக்கு கலக்கீட்டாங்க. பலநாள் தேடினதுக்கு பலன் கிடைச்சுடுச்சுனு நம்புறோம்” என்கிறார் ரத்னகுமார்.

 “இந்துஜா இப்போ ரொம்ப பிஸி. அடுத்தடுத்து படங்கள்ல கமிட்டாகி ஷூட்டிங்ல பிஸியாவே இருந்துட்டிருக்காங்க. ஹேப்பி” எனப் புன்னகைத்தார் வினோகுட்டி. ஸாரி, விவேக் பிரசன்னா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஹீரோ-ஹீரோயின் லவ் ஸ்டோரியைவிட, வினோகுட்டி-சுடர் லவ் ஸ்டோரிதான் செமையா இருக்குனு விமர்சனங்கள் வருது. அதை எப்படிப் பார்க்குறீங்க?” என்ற கேள்விக்கு எல்லோரிடமிருந்தும் பதில் வருகிறது.

“இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா!”

``இந்தப் படத்துல ஹீரோக்கு மட்டுமில்லை, எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் ஒரு கதை இருக்கும், ஒரு வாழ்க்கை இருக்கும். இதுவரைக்கும் ஹீரோவோட ஃப்ரெண்ட் கேரக்டர்னா ஹீரோவுடைய காதலுக்கு ஹெல்ப் பண்ணிட்டு, அவருக்காக வீரவசனம் பேசிக்கிட்டு, `ராஜாவுக்கேத்த கூஜா’ மாதிரியே இருப்பார். ஆனா, இதெல்லாத்தையும் உடைச்செறிஞ்சா என்னன்னு தோணுச்சு. அதுதான் படத்துலேயும் நடந்துச்சு” எனக் கார்த்திக் சுப்பராஜ் முடித்ததும், விவேக் பிரசன்னா தொடர்ந்தார்.

 ``ஒரு ஆன்டி ஹீரோ, க்யூட் லவ்வர் பாயா  நடிக்க முடியுமான்னு எனக்கு ரொம்ப சந்தேகம் இருந்துச்சு. தாடி மீசையை எடுத்துப் பார்க்கலாமானுகூட முடிவெடுத்தேன். நான் எல்லாப் படத்துலேயும் கேங்ஸ்டர் ரோல்ல, வயசான ரோல்ல நடிச்சுட்டே இருக்கவும், எனக்கே நான் ரொம்ப வயசானவன்போலத் தோண ஆரம்பிச்சுடுச்சு. ஆனா, அது எல்லாத்தையும்விட முக பாவனைகளால நடிப்பை வெளிப்படுத்துறதுதான் முக்கியம்னு சொல்லி ஊக்கப்படுத்துனது ரத்னகுமார்தான். அதனாலதான் இந்த கெட்டப்போடவே மக்கள் என்னை ஹீரோவா ஏத்துக்கிட்டாங்க. நன்றி ரத்னகுமார்” என்றார், அவ்வளவு மகிழ்ச்சியாக.

“இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா!”

“அப்புறம் உங்களுக்கு விஷயம் தெரியுமா... ப்ரியா பவானிசங்கருக்கு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் எல்லாம் வெச்சிருந்தாங்களே, கேள்விப்பட்டீங்களா..? இந்த ஃபேன்ஸ் தொல்லை தாங்கமுடியலப்பா” என வைபவ் ப்ரியாவைக் கலாய்க்க ``அய்யய்யோ... இவங்க ஆரம்பிச்சா நிறுத்தமாட்டாங்களே” எனச் சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தார் ப்ரியா.

`` `கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல்ல நடிச்சப்போ, நிறைய ரசிகர்கள் பாராட்டி போன் பண்ணுவாங்க. ஆனா, எனக்கு ‘ஃபேன் ஃபாலோயர்ஸ் இருக்காங்க’னு சொல்றதெல்லாம் பெரிய வார்த்தை. இப்போதைக்கு ரெண்டு மூணு படங்கள் பண்ற வாய்ப்பு வந்திருக்கு. அதுக்காக பேச்சுவார்த்தைகளும் போயிட்டிருக்கு. இனிமேல் நீங்க என்னைத் தொடர்ந்து ஹீரோயினா பார்ப்பீங்க” என்ற ப்ரியாவுக்கு ஒரு பிரேக் கொடுத்த வைபவ், ``ஏண்டீ... ஏண்டீ எஸ் மது’’ எனப் பாட ஆரம்பிக்க, ஏரியாவே கானாவால்  களைகட்டியது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism