Published:Updated:

ஆத்திரங்கள் வருது ஆத்ரேயா!

ஆத்திரங்கள் வருது ஆத்ரேயா!
பிரீமியம் ஸ்டோரி
ஆத்திரங்கள் வருது ஆத்ரேயா!

ஆர்.சரண், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

ஆத்திரங்கள் வருது ஆத்ரேயா!

ஆர்.சரண், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஆத்திரங்கள் வருது ஆத்ரேயா!
பிரீமியம் ஸ்டோரி
ஆத்திரங்கள் வருது ஆத்ரேயா!

`வாலே வாலே வாலே லே... போலே போலே போலே லே’- டி.எஸ்.பியின் இசை அந்த ரெஸ்ட்டாரன்ட்டில் எகிறித் தெறிக்கிறது. ‘சிங்கம்-4’க்காக ஹெவியாக ஒர்க்-அவுட் செய்து கும்மென உட்கார்ந்து சாத்துக்குடி ஜூஸ் குடிக்கிறார் நம்ம தூத்துக்குடி சிங்கம்... துரைசிங்கம். `பிதாமகன்’ சக்தி, ‘காக்க காக்க’ அன்புச்செல்வன், ‘கஜினி’ சஞ்சய் ராமசாமி, `ஆயுத எழுத்து’ மைக்கேல் வசந்த், `ஏழாம் அறிவு’ போதி தர்மர், `அஞ்சான்’ ராஜுபாய், `24’ ஆத்ரேயா, ‘மாசு’ என்ற மாசிலாமணி ஆகியோர்  உள்ளே வருகிறார்கள். தானா சேர்ந்த கூட்டம். சொல்லவா வேணும். அப்புறமென்ன... அதிரடி சரவெடிதான்.

``என்ன சிங்கம், கழுத்துல பேண்டேஜ் போட்டிருக்கே..? சிங்கத்துக்கே கட்டா..? திருப்பதிக்கே லட்டா?’’  - ‘அஞ்சான்’ ராஜுபாய் வாக்கிங் ஸ்டிக்கோடு சிரித்துக்கொண்டே கேட்க, வெறியாகிறார் சிங்கம்.
``என்னலே எகத்தாளமா? ஓங்கி அடிச்சா, இல்லைவே... ஓங்கிக் கத்துனா பத்தரை மில்லியன் டெஸிபல்வே... கேக்குறியா... கேக்குறியா...?’’ என ராஜுபாயின் காதைத் திருகி, வாயைக் கொண்டுபோய் வைக்கிறார். ``ஐயய்யோ... சிங்கம்!  நீ தூத்துக்குடில கத்துனது வடபழனி ஏவிஎம் சிக்னல்ல டூட்டி பார்த்த டிராபிக் கான்ஸ்டபிள்க்கே கேட்டிருச்சாம்... நான்லாம் பாவம்ப்பா!’’ என பம்முகிறார் ராஜு பாய். அந்த நேரம் பார்த்து வெய்ட்டர் ஆர்டர் எடுக்க வருகிறார்.

ஆத்திரங்கள் வருது ஆத்ரேயா!

குஷியான ‘பிதாமகன்’ சக்தி, ``ஆங்... அரேபியப் பாலைவனத்துல வெளஞ்ச பேரீச்சம்பழ ஜூஸ் எனக்கு’’ என்று முதல் போணி பண்ணினார்.

``எனக்கு ஆப்பிள் ஜூஸ். அதுல 110 கலோரி கிடைக்கும். தொண்டையை நனைக்கலாம். தொண்டனா மாறலாம். ஜன கண மன பாடலாம்... ஜனங்களை நினைக்கலாம்!’’ - இது `ஆய்த எழுத்து’ மைக்கேல் வசந்த்.

``எனக்கு என்ன சாப்பிடணும்னே மறந்து போயிருச்சு... இருங்க பார்த்துச் சொல்றேன்..’’ என்றபடி உடம்பில் சீரியஸாய்த் தேடியவர், வட்டமாய் வரைந்திருந்த எதையோ பார்த்து குஷியாகி, ``ஆங்... உளுந்தவடை!’’  என்று கத்துகிறார் `கஜினி’ சஞ்சய் ராமசாமி.

``மாயா மாயா எல்லாம் மாயா...’’ என்றபடி தலையை ஆட்டி ``ஒன்லி வாட்டர் ப்ளீஸ்!’’ என்று சிம்பிளாய் சீன் வைத்தார் டி.சி.பி அன்புச்செல்வன்.

``உங்களுக்கு எதுவும் வேணாமா..? ஏன், நீங்க ரஜினி ரசிகரா... மாயா மாயானு சொல்றீங்க?’’ என்று கேட்கிறார் இந்தக் கூட்டத்தின் லந்து பாய் ‘பிதாமகன்’ சக்தி. 

``இல்லைங்க. ஜோதிகா ரசிகன். `காக்க காக்க’ படத்துல ஜோ பேரு மாயா’’ என்று சிரிக்கிறார் அன்புச்செல்வன்.

``ஆமா இவன் யாரு... இலுமினாட்டி மாதிரியே இருக்கான்?’’ என மாசுவைப் பார்த்து ‘ஆய்த எழுத்து’ மைக்கேல் கேட்க, ‘`அந்த நாட்டி கம்னாட்டி பிரேம்ஜி ஃப்ரெண்ட். பார்க்க இலுமினாட்டி மாதிரி இல்லாம எப்பிடி இருப்பான். நீ கண்டுக்காத ப்ரோ” எனக் கலாய்த்தார் ‘பிதாமகன்’ சக்தி. “சாமி... பார்த்து பல வருஷம் ஆச்சு. 18-ம் நூற்றாண்டு ஆளு நீங்க... இன்னும் காவி டிரஸ்லதான் சுத்திட்டிருக்கீங்களா..? கொஞ்சம் உங்க அங்கியைத் துவச்சுதான் போடுறது... பக்கத்துல வர முடியல. இப்படி குளிக்காம இருக்குறதுக்குப்பேருதான் ‘கப்பு வர்மம்.’ எதிரியை விரட்டுற டெக்னிக்குனு சொல்லிரலாம்னு பார்க்குறீங்களா..?” என்று கேட்க, “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை... குளிக்காம இருக்குறதும் ஒருவகை யோகாதான். சென்னைல வாழுற மக்களுக்கு அது ரொம்பப் பயன்படும் தமிழா” என்று சொல்லியபடி ஹாரிஸ் ஜெயராஜ் பி.ஜி.எம்மில் ஏபிசிடி ரைம்ஸ் சொல்ல ஆரம்பித்தார் போதி தர்மர். “அதிருக்கட்டும்... இந்த ஆளு யாரு...பங்குனி வெயில் பல்லக்காட்டிட்டு இருக்கு. கோட்சூட்லாம் போட்டுருக்காரு?” என ஆத்ரேயாவைப் பார்த்து சக்திவேல் கலாய்க்க...

ஆத்திரம் வருது ஆத்ரேயாவுக்கு!  “டேய் லங்கரு... கழண்டுரும் உன் டவுசரு.  டைம் மெஷின் கண்டுபிடிச்ச ஆளுடா நான்... நான் நினைச்சா இப்பவே `நேருக்கு நேர்’ காலத்துக்கு உன்னைப் போக வெச்சு அவள் வருவாளா ஸ்டெப் போட வெச்சிருவேன். சிம்ரன் பின்னாடி பத்து மைல் ஓட வெச்சிருவேன். எல்லாப் பூக்கள் பேரையும் மனப்பாடமா சொல்ல வெச்சு ஒரு பூ மிஸ்ஸானாலும் இம்போசிஷன் எழுத வெச்சிடுவேன்.  லைலா டாக்டருக்குப் படிக்கிறதுக்காக மானம் மரியாதையெல்லாம் அடமானமா வெச்சு சீரழிஞ்சதுலாம் மறந்துட்டியா... பாய்சன் `நந்தா’, `மாற்றான்’ பிரதரைலாம் மறந்துட்டியா..?  சாவடிச்சிருவேன். பீ கேர்ஃபுல்!” என்கிறார். “ஆத்தீ... இவரு பெரிய மந்திரவாதியால்ல இருக்காரு... வாயைப் பொத்திக்கிட்டு ஜூஸைக் குடிச்சிட்டு எஸ்ஸாகிடணும்.” - மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாகவே பேசுகிறார் சக்தி.

“சரி மக்கழே! பீ கூல் அஸ் எ குகும்பர்... நானும் கமல் சார் கெட்அப்புக்கு சரி சமமா பல கெட்அப் போட்டு நடிச்சிட்டேன். ஆனாலும் , `கொண்டைய மறைக்கலையே’ மொமன்ட் மாதிரி நான் நானாவே தெரிஞ்சிடுறேன். என்னோட மூவிஸ்ல எதையெல்லாம் செகண்ட் பார்ட் எடுக்கலாம்?  சொல்லுங்களேன்’னு சூர்யா மெஸேஜ் பண்ணியிருக்காரு. அதுக்குத்தான் இப்போ இந்த மீட்டிங்.”- அண்டர்கவர் ஆபரேஷனில் இருக்கும் ‘சிங்கம்’ துரைசிங்கம் கேட்க, எல்லோரும் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்கள்.  
 
“நம்ம விஜய்கூட  ரோஸ்மில்க் குடிக்க ஆரம்பிச்சிட்டார். முறுக்கு மீசை தாடினு மெர்சல் பண்ணுறார். ஏற்கெனவே `சிங்கம்’லயும் `காக்க காக்க’லயும் போலீஸ் மீசை வெச்சாச்சு. அதனால அடுத்த படத்தோட கதையில ஹிட்லர் மீசைலாம் வெச்சு, இண்டர்போல் ஆபீஸரா நடிக்கலாம். கத்துனாதானே கலாய்க்கிறாங்க. சைலன்ட்டா டயலாக்கே இல்லாம நாசவேலைகள்ல இருந்து நாஸாவையே காப்பாத்துறோம். டி.சி.பி அன்புச்செல்வனும் டி.சி.பி துரைசிங்கமும் சேர்ந்து, கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர்றோம். பிரதமர் மோடியே கூப்பிட்டு , ‘யாருய்யா நீங்க... இத்தனை நாளா எங்கேய்யா இருந்தீங்க?’னு டபுள் இன்க்ரிமென்ட்டோட டபுள் புரமோஷனும் கொடுக்குறாரு... அப்படியே அண்டர்கவர் ஆபீஸர்ஸா ஸ்வாச் பாரத் அம்பாஸிடரா ஆக்கி விட்ராரு. டெல்லில ஜந்தர்மந்தர் பக்கத்துல ரோட்டைக் க்ளீன் பண்ணிக்கிட்டே தீவிரவாதிகளைக் கண்காணிக்கிறதுதான் டூட்டி. டெல்லில ஜோடியா வாக்கிங் போறதோட சிங்கங்களோட வேட்டை தொடரும்னு போட்ரலாம்!” என ‘காக்க  காக்க’ அன்புச்செல்வன் சொல்ல, எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆத்திரங்கள் வருது ஆத்ரேயா!

“ஆக்சுவலி `கஜினி’ பார்ட் 2 எடுக்கலாம்... சஞ்சய் ராமசாமிக்கு ஒரு ஒண்ணுவிட்ட தம்பி இருக்கான். அவன் பேரு சஞ்சீவ் கந்தசாமி. அவனோட காதலி பேரு ஓவர் வாய் ஓவியா. ஃபேஸ்புக்ல ஆண்களைத் தாக்கி ஸ்டேட்டஸ் போட்டுட்டே இருப்பா. கொடூரமா கோணவாய் செல்ஃபி போடுறா. அவளை யாரோ கொன்னுடுறாங்க. அவளோட ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை ஹேக் பண்ணி, ‘என் சாவுக்கு சஞ்சீவ்தான் காரணம்’னு ஸ்டேட்டஸாவே போட்டு விட்டுர்றாங்க. போலீஸ் கண்ணிலிருந்து தப்பி ஒரே நைட்ல ஓவியாவைக் கொன்னவங்களைக் கண்டுபிடிச்சு அழிச்சு அதை லைவ் வீடியோவாவும் போட்டுர்றாரு சஞ்சீவ் கந்தசாமி... நெட்டிசன்ஸ் எல்லோரும் அதை ஷேர் செய்றாங்க. அதோட படம் முடியுது. ‘தாக்க தாக்க’னு டைட்டில் வெச்சிடலாம்” என்று சஞ்சய் ராமசாமி சொல்ல... ‘வாவ்’ சொல்கிறார்கள் எல்லோரும்.

சின்னமனூர் சக்திவேல்னா தக்காளித் தொக்கா? `` `பிதாமகன்’ படத்துல சாக்கு மூட்டைல பொணமா இருந்தது சக்திவேலே இல்லை. அவனை மாதிரியே இருக்குற இன்னொருத்தன். அப்படின்னா சக்தி எங்கே? இதான்  பார்ட்-2வோட ஒன்லைன்” என்று சக்திவேல் அள்ளிவிட, “ஆத்திரங்கள் வருது...வேற வேற... யார் சொல்றீங்க?” என்கிறார் ஆத்ரேயா. அடுத்து கையைத் தூக்கி ஆஜராகி கதை சொல்ல ஆரம்பித்தார் மாசு.

“கதைப்படி என் பேரு கா.சு என்கிற காசிலாமணி. நார்த் மெட்ராஸ்ல இருக்குற கா.சு என்கிற கா.சுந்தரம் ஒருநாள் நிஜமாவே காசில்லாம நிக்கிறான். பிரதமர் மோடி ‘கேஷ்லெஸ் எக்கானமி’னு ஒரேநாள்ல ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாதுனு 8 மணிக்கு லைவ்ல சொல்லுறதுதான் அதுக்குக் காரணம். பாவம் கா.சு சிங்கிள் டீ குடிக்கக்கூட  வக்கில்லாம காசிலாமணியா மாறிடுறான். க்யூல நின்னு ஒவ்வொரு ஏ.டி.எம்-மா போயி கார்டைத் தேய்க்கிறான்.  எல்லா மெஷின்லயும் ‘சில்லாக்கி டும்மா’னு வருது. மனசு வெறுத்துப்போய் தற்கொலை பண்ணிக்கலாம்னு போனா தற்கொலைக்கே பெரிய கூட்டம் க்யூல நிக்கிறாங்க. அப்போதான் அவனுக்கு ஒரு உண்மை புரியுது. தன்னோட அப்பா அம்மா காதலி நண்பன்னு எல்லோரும் அட்வான்ஸ் புக்கிங்ல ஆடி ஆஃபர்ல போனவாரமே செத்துப்போய்ட்டாங்கன்னு தெரிய வருது. பயங்கரமா காண்டாகுற கா.சு என்கிற காசிலாமணி காண்டா மிருகமா மாறி எப்படி எல்லோரையும் பழி வாங்குறான்... சரிஞ்சு கிடந்த இந்தியப் பொருளாதாரத்தை எப்படி செங்குத்தா தூக்கி நிறுத்துறான்கிறதுதான் டிஜிட்டல் இந்தியா க்ளைமாக்ஸ். எப்பூடி..?” என்று செம கதை சொன்னார் மாஸ்.

“சூப்பரப்பு... எங்கிட்டயும் ஒரு பொலிட்டிக்கல் கதை இருக்கு. பாரதிராஜாவை எதிர்த்து பாலிடிக்ஸ் பண்ற மைக்கேல் ஜோசப்  ஜெயிச்சு சி.எம்  ஆகிடுறாரு. ‘துணை முதல்வர் போஸ்ட்டிங்காவது கொடு கண்ணு’னு 93 எம்.எல்.ஏக்களைக் கைக்குள்ள வெச்சிக்கிட்டு அழிச்சாட்டியம் பண்றாரு பாரதிராஜா. ‘குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வேணும்னா வாங்கித் தர்றோம்’னு கலாய்க்குறாரு மைக்கேல். அவன் கட்சியில இருக்குற ஆளுங்களை ஒவ்வொருத்தரா மெடிக்கல் செக்அப்னு கப்பலோ ஆஸ்பிட்டலுக்கு அனுப்புறாரு பாரதிராஜா. கப்பலோ ஆஸ்பிட்டல்ல ஒவ்வொரு எம்.எல்.ஏவா காணாமப்போயிடுறாங்க. காணாமப்போன எம்.எல்.ஏக்கள் திரும்ப வந்தாங்களா... இட்லி சாப்பிட்டாங்களாங்குறதுதான் க்ளைமாக்ஸ்” என்று மைக்கேல் சொல்ல “செம்ம ப்ரோ” என்றனர் கோரஸாய்.

 “நான் `அஞ்சான்’ பார்ட்-2 கதை வெச்சிருக்கேன். கேட்குறீங்களா..?” - என்று ராஜுபாய் கேட்டதுதான் தாமதம், எல்லோரும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism