Published:Updated:

“என்னால் பட்டினி கிடக்க முடியாது!”

“என்னால் பட்டினி கிடக்க முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
“என்னால் பட்டினி கிடக்க முடியாது!”

ஆர்.வைதேகி

“என்னால் பட்டினி கிடக்க முடியாது!”

ஆர்.வைதேகி

Published:Updated:
“என்னால் பட்டினி கிடக்க முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
“என்னால் பட்டினி கிடக்க முடியாது!”

தென்னிந்திய சினிமாவின் ஆல்ரவுண்டர் நித்யா மேனன். நடிப்பு ராட்சசி... தமிழ், மலையாளம், தெலுங்கு என எல்லா ஏரியாவிலும் அப்ளாஸ் அள்ளியவர், அடுத்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். அழகு தமிழ் பேசும் நித்யாவிடம் பேசினேன்.

‘‘சினிமா வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு?’’

``ஜர்னலிஸம் படிச்ச பொண்ணு நான். திடீர்னு சினிமாப் பக்கம் வந்துட்டேன். நிறைய மொழிகள்ல நடிச்சாலும், நல்லா நடிக்கிறேன்னு பேர் வாங்கினாலும் இன்னும் ஆழமான கேரக்டர்ஸ் என்னால் பண்ண முடியும். ஆனால், அப்படி நடிக்கிறதுக்கான வாய்ப்புகள் எனக்கு இன்னும் வரல.’’

``ஒவ்வொரு தமிழ்ப்படத்துக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி?’’

‘`நான் நாலு மொழிகள்ல படங்கள் பண்ணிட்டிருக்கேன். தமிழ்ல மட்டுமே நடிச்சுட்டிருந்தா நிறைய படங்கள் பண்ண முடியும். மற்ற மொழிகள்லயும் பண்றதால ஒரு வருஷத்துல மூணு, நாலு படங்கள்தான் பண்ண முடியுது.’’

`` `24’ படத்துல பண்ணின மாதிரி அதே ஃப்ளாஷ்பேக் கேரக்டர்தான் `மெர்சல்’லயும் பண்ணீங்க. ஒரே மாதிரி கேரக்டர் போரடிக்கலையா?’’

‘` ‘24’ படம் பண்ணின பிறகு என்னைச் சாகடிக்கிற மாதிரியான நிறைய கேரக்டர்ஸ் பண்ணிட்டேன். `போதும்... இனிமே அது மாதிரி நடிக்க வேண்டாம்’னு நினைச்சுட்டிருந்தேன். ஆனாலும் அட்லி  கேட்டப்ப மறுக்க முடியல. `மெர்சல்’ல ரொம்ப க்யூட் அண்ட் போல்டான கதாபாத்திரம். அதான் நடிச்சேன்.’’

“என்னால் பட்டினி கிடக்க முடியாது!”

`` ‘மெர்சல்’ படத்துல கொஞ்சம் குண்டா இருந்தீங்க.அந்தக் கேரக்டருக்காகவே வெயிட் போட்டீங்களோ?’’

‘`ரியல் லைஃப்ல நான் எப்படி இருப்பேனோ அப்படித்தான் படங்கள்லயும் இருப்பேன். ‘மெர்சல்’ படத்துல அந்தக் கேரக்டருக்கு சைஸ் ஸீரோ தேவைப்படலை. ஒருவேளை அப்படி ஏதாவது தேவை இருந்திருந்தா அதுக்காக ஏதாவது பண்ணியிருக்கலாம். என் வாழ்க்கையில என்னுடைய உடல்வாகு என்னை எந்த வகையிலும் பாதிக்கலை. நடிகையாவும் என் வாய்ப்புகள் குறையல. பொண்ணுங்கன்னா ஒல்லியாதான் இருக்கணும், சைஸ் ஸீரோவாதான் இருக்கணும்னு சொல்றதெல்லாம் ஹெல்த்தியான விஷயமே இல்லை. அடுத்தவங்க நல்லா இருக்குன்னு பாராட்டுறதுக்காக என்னால் பட்டினி கிடக்க முடியாது. அது சரியும் இல்லை. நீங்க குண்டா இருக்கீங்களா... ஒல்லியா இருக்கீங்களாங்கிறது முக்கியமே இல்லை. ஆரோக்கியமா இருக்குறதுதான் அவசியம். அதனால என் சைஸ் எனக்கு ஓகே. அதைப் பத்தின கமென்ட்ஸ் என்னை எந்த வகையிலயும் பாதிக்காது.’’

``உங்க கூட நடிச்ச ஹீரோக்கள் பத்திச் சொல்லுங்க?’’

``நான் பார்த்ததுலயே ரொம்ப ரொம்ப நல்ல மனிதர் சூர்யா. அவர்கூட வேலை செய்யறப்ப அவ்ளோ பாசிட்டிவ்வா இருந்துச்சு. துல்கரும் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவர்கூட நடிக்கிறப்ப கம்ஃபர்ட் லெவல் நல்லாருக்கும். விஜய் சார் ரொம்ப அமைதி. இருக்கிற இடமே தெரியாதபடி அவர் பாட்டுக்கு இருப்பார். அவ்வளவா பேசமாட்டார்.’’

``அடுத்து தமிழ்ல என்ன படம் பண்றீங்க?’’

‘`ரோகிணி இயக்குற `அப்பாவின் மீசை’ படத்தில் நடிச்சிருக்கேன். ரோகிணி என் க்ளோஸ் ஃப்ரெண்ட்.  அதனால அவங்க என்ன படம் பண்ணினாலும் நான்  அதில் நடிப்பேன். `அப்பாவின் மீசை’ ரொம்ப நல்லா வந்திருக்கு. அந்த மாதிரிப் படங்கள்தான் எனக்கு நடிக்கப் பிடிக்கும். யாரும் அந்தப் படத்துல மேக்கப் போட்டு நடிக்கலை. ரொம்ப யதார்த்தமான கதை... அந்தப் படம் எப்போ ரிலீஸாகும்னு  பெரிய எதிர்பார்ப்போட காத்திட்டிருக்கேன்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism