Published:Updated:

விக்ரமின் வில்லன் யார்? - சர்ப்ரைஸ் சொல்லும் கௌதம் மேனன்

விக்ரமின் வில்லன் யார்? - சர்ப்ரைஸ் சொல்லும் கௌதம் மேனன்
பிரீமியம் ஸ்டோரி
விக்ரமின் வில்லன் யார்? - சர்ப்ரைஸ் சொல்லும் கௌதம் மேனன்

ம.கா.செந்தில்குமார்

விக்ரமின் வில்லன் யார்? - சர்ப்ரைஸ் சொல்லும் கௌதம் மேனன்

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
விக்ரமின் வில்லன் யார்? - சர்ப்ரைஸ் சொல்லும் கௌதம் மேனன்
பிரீமியம் ஸ்டோரி
விக்ரமின் வில்லன் யார்? - சர்ப்ரைஸ் சொல்லும் கௌதம் மேனன்

“வழக்கமாவே விரும்பி, ரசிச்சு வேலை செய்வோம். அதிலும் ஒரு நல்ல நடிகர் வந்தால், அவரோட பயணப்பட்டு நான் சொல்லும் விஷயங்களை அவர் எப்படிப் புரிஞ்சுக்கிட்டு ப்ரசென்ட் பண்றார்னு ரொம்பவும் ரசிச்சு வேலை செய்வேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். அப்படி என் ‘துருவ்’வா இதில் விக்ரம் சார். ‘காக்க காக்க’ சமயத்தில் பேச ஆரம்பிச்சு இப்பதான் இந்தக் காம்பினேஷன் அமைஞ்சிருக்கு. இத்தனை வருஷக் காத்திருப்புக்கு ‘துருவ நட்சத்திரம்’ நிச்சயம் நியாயம் செய்யும்.”  கானகத்தில் உள்ள தன் வீட்டின் தரைத்தளத்தில் இருந்து மூத்த மகன் வாசிக்கும் பியானோ இசையை ரசித்தபடி பேசுகிறார் இயக்குநர் கௌதம்மேனன். 

`` ‘இவங்க உலகத்துக்குள்ள நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன். அந்த உலகத்துக்குள்ள நீங்க வர்றீங்கனு நினைச்சு இந்தப் படத்தைப் பாருங்க....’ங்கிற டிஸ்க்ளைமரோடதான் இந்தப்படம் ஆரம்பிக்கும். நாட்டுக்காகத் தங்களோட அடையாளத்தை மறைச்சுக்கிட்டு ஒர்க் பண்ற 10 பேரோட உலகத்துக்குள்ள உங்களை அழைச்சிட்டுப் போகப்போறேன். துருக்கி, ஜார்ஜியா, ஸ்லோவேனியானு என் படங்களுக்காக இதுக்கு முன் நான் இத்தனை நாடுகள் பயணமானது இல்லை. 50 நாள் ஷூட் முடிச்சிட்டு வந்திருக்கோம். திருப்தியா இருக்கு” எனக் கண்களைப் பார்த்து நிதானமாகப் பேசுகிறார் கெளதம்.

விக்ரமின் வில்லன் யார்? - சர்ப்ரைஸ் சொல்லும் கௌதம் மேனன்

“துருவ நட்சத்திரம்’ என்ன கதை?”

“நாட்டின் பாதுகாப்புக்குத் தரைப்படை, விமானப்படை, கப்பல்படை, உளவுத்துறை இவர்களைத் தாண்டி, ஒரு டீம் தேவைப்படுது. யாருனு தெரியாது. ஆனால்,  நமக்கு வேண்டிய ஒரு விஷயம் பண்ணிட்டாங்கனு மட்டும் புரியும். அவங்களுக்குச் சட்டதிட்டங்கள் எதுவுமே கிடையாது. எமர்ஜென்சியில இறங்கி வேலை செய்வாங்க. மேலும், உளவுத்துறை, போலீஸ் துறைக்குத் தரவேண்டிய விஷயங்கள் இவங்க மூலமாகவும் போகும். எல்லா நாடுகள்லயும் இது இருக்கு. இந்தியாவிலும் இருக்கு. யாருக்கும் தெரியாது. அப்படி நாட்டுக்காகத் தங்களோட அடையாளங்களை மறைச்சு ஒர்க் பண்ற குழுவைப் பற்றிய கதை இது. அவங்க யார், என்ன பண்றாங்க, அவங்களோட வலி, சந்தோஷம், வாழ்க்கைனு நிறைய விஷயங்கள் இதில் பண்ணலாம்னு இருந்தது விக்ரம் சாருக்குப் பிடிச்சிருந்தது. ஒவ்வொரு வருஷமும் ஒரு பார்ட்னு இந்தப் படத்தை மூணு பார்ட் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். ‘பாகுபலி’யில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார் என்ற விஷயத்தை முதல் பகுதியில் லூப்பா வெச்சிருந்த மாதிரி, இதில் ஒரு விஷயத்தை ஓப்பன் பண்ணி வெச்சிட்டு ஒரு சீரிஸா ‘துருவ்’ கேரக்டரை வெச்சுப் பண்ணலாம்னு ஐடியா. நிச்சயம் ஸ்கிரீன்ல  பெரிய பிரமாண்டமான ஃபீல் உங்களுக்குக் கிடைக்கும்.”

“இந்தப் படத்துக்குள் வந்தபிறகு விக்ரம் என்ன ஃபீல் பண்ணினார்?”

“ என்னோட முதன்மை அசோசியேட் இயக்குநர் மாதிரி வேலை செய்றார். என் டீம் எதுவுமே பண்ணவேண்டாம். அவரே இறங்கி அந்தச் சூழலை செட் பண்ணிடுவார். ‘விடுறா சாரே பண்ணட்டும்’னு என் உதவி இயக்குநர்கள்கிட்ட சொல்லிடுவேன். ஆக்‌ஷன் காட்சிகள்ல ரொம்ப வித்தியாசமாவும், டூப் இல்லாமலும் நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கார். நாம இப்படி இருந்தால் நல்லா இருக்கும்னு சொல்லும்போது அதை ரசிச்சு உள்வாங்கிப் பண்றார். சில விஷயங்கள் மாத்திப் பண்ணலாம்னு ஐடியாக்கள் கொடுப்பார். இங்கிலீஷ் நிறைய வேணாம்னு சொல்வார். சில இடங்கள்ல, ‘இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துச் சொல்லுங்க கெளதம், இப்படி இருந்தால் பெட்டரா இருக்கும்’னு ஃப்ரெண்ட்லியா கேட்பார். கொஞ்சம் யோசிச்சு 10 நிமிஷம் கழிச்சு நான் சொல்லும்போது, ‘இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்’னு என்கரேஜ் பண்ணுவார். இயல்பாகவே ரொம்ப நட்பா பழகக்கூடிய கேரக்டர். பல நாடுகள், ஏகப்பட்ட அழுத்தங்கள். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட் அவ்ளோ இயல்பா இருக்கு. அதுக்குக் காரணம் இந்த மனிதர்தான்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விக்ரமின் வில்லன் யார்? - சர்ப்ரைஸ் சொல்லும் கௌதம் மேனன்

“ஐஸ்வர்யா ராஜேஷ், ரீது வர்மானு இரண்டு ஹீரோயின்கள். அவங்களுக்கு என்ன மாதிரியான கதாபாத்திரம்?”

“40 வயது ஆண், 28 வயசுப் பெண். இருவருக்குமான காதல். இதுவரை தமிழில் படம் பண்ணாத ஹீரோயின்ஸ் இருந்தா நல்லாருக்கும்னு தேடினோம். அந்த வகையில், ‘பெல்லி சூப்புலு’ பண்ணின  ரீது வர்மா சரியா இருப்பாங்கனு தோணுச்சு. பொண்ணு செம ஷார்ப். அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ், பிரமாதமான ஆர்ட்டிஸ்ட். வித்தியாசமா இருக்கட்டும்னுதான் அவங்களையும் கேட்டோம். `எப்ப ஷூட்’னு கேட்டாங்க. நாளைக்குனு சொன்னதும், அதிர்ந்துட்டாங்க. முதல்நாளே பெரிய சீன். ஆனால், அழகா ஹேண்டில் பண்ணினாங்க. இது காதல், ரொமான்ஸ்னு ஹீரோயின் பற்றிய படம் இல்லை. இரண்டு பேருக்குமே குறைவான காட்சிகள்தான். ஆனால், அந்த லவ் ஸ்டோரிகள் பாலுமகேந்திரா சார், பாலசந்தர் சார் படங்களோட டோன்ல சிறப்பா இருக்கும். இவங்க கேரக்டர்கள் அடுத்தடுத்த பார்ட்லயும் தொடரும்.”

“சிம்ரனுடன் மீண்டும் படம் பண்றீங்க. என்ன ஸ்பெஷல்?”

“அவங்ககிட்ட புதுசா எதுவும் விளக்கணும்னு அவசியம் இல்லை. ‘இன்னமும் நான் ஒர்க் பண்ணணும்னு விரும்புறீங்களா கௌதம்’னு கேட்டாங்க. ‘நிச்சயமா மேம்’னு சொல்லி அவங்களை அழைச்சுட்டு வந்தேன். பல்கேரியா, இஸ்தான்புல், ஜார்ஜியானு ஃபேமிலியை விட்டுட்டு வந்தாங்க. நாம சொல்லும் விஷயத்தை அப்படி உள்வாங்கி ஒண்ணு பண்ணுவாங்க. அதுல எந்த மாற்றமும் சொல்லத் தேவையே இருக்காது. அதேபோல ராதிகா மேம். அவங்க 10 வருஷங்களுக்கு மேல என் நண்பர். ஒரு தயாரிப்பாளரா எனக்கு நிறைய விஷயங்கள்ல உதவி பண்ணியிருக்காங்க. அப்படி இந்த லிஸ்ட்ல டிடியும் சேர்ந்தாங்க. நான் படம் பற்றி  சொல்லிக் கூப்பிட்டதும் யோசிக்காம வந்தாங்க. இவங்க தவிர ப்ரீத்தி, மாயா, `வேட்டையாடு விளையாடு’ வில்லன் சலீம், வம்சினு பலர் இருக்காங்க.”

“விக்ரமுடன் நடிக்கும் அந்த 10 பேர் ஓ.கே. வில்லன் யார்?”

“அது சர்ப்ரைஸ். அவரோட வாய்ஸ் மட்டும்தான் ட்ரெய்லர்ல கேட்கும். அவரோட பெர்ஃபார்மன்ஸ் பார்த்த விக்ரம் சார், ‘அவரை இப்போதைக்கு அறிவிக்காதீங்க. எவ்வளவு முடியுமோ அதுவரை சர்ப்ரைஸா வெச்சுக்கங்க’னு சொன்னார். ஓரளவு தெரிஞ்ச ஆள்தான். வேறவேற இடங்கள்ல பிரபலம். பயங்கரமா வந்துட்டிருக்கார். செம ப்ரசன்ஸ். கொஞ்சம் அலசி ஆராய்ஞ்சா யாருனு கண்டுபிடிச்சிடுவீங்க. விக்ரம் சாரே, ‘ஐ’ம் யுவர் ஃபேன்’னு சொல்லிட்டார். அவரை நடிக்கவைக்கலாம் என்பது டிடி கொடுத்த ஐடியாதான். அவரை வெச்சு இஸ்தான்புல்லதான் முதல்ல ஷூட் பண்ணுனோம். அவர் பண்ணின விஷயங்களைப் பார்த்துட்டு அங்க இருந்த வெளிநாட்டு நடிகர்கள் உள்பட எல்லாருமே கைதட்ட ஆரம்பிச்சிட்டாங்க. தனித்துவமான உடல்மொழி, வாய்ஸ் மாடுலேஷன்னு விக்ரம் சார்க்கு இணையா இருந்தார். அதை விக்ரம் சாரும் ரசிச்சார். அந்த வில்லன் படம் முழுக்க இருப்பார். இவரைத்தவிர இன்னொரு ஸ்பெஷல் நடிகரும் இருக்கார். 10 பேர் கொண்ட கமாண்டோ டீமை வடிவமைக்கும் அந்தப் பெரியவர் கேரக்டர் யார் என்பதும் சஸ்பென்ஸ்.”

விக்ரமின் வில்லன் யார்? - சர்ப்ரைஸ் சொல்லும் கௌதம் மேனன்

“ `எனை நோக்கி பாயும் தோட்டா’ எப்ப ரிலீஸ்?”

“இன்னும் 15 நாள்கள் ஷூட்டிங்தான் இருக்கு. தனுஷ் வந்துட்டார்னா முடிச்சிடுவோம். அது அடர்த்தியான காதல் கதை, கூடவே ஆக்ஷன். ஜாலியான ரவுசுவிட்டு சுத்திட்டு இருக்கிற கேரக்டரா இல்லாம ஸ்டைலிஷா தனுஷைப் பார்க்கலாம். ஒரு படம், அடுத்த மூணாவது வாரத்தில் இன்னொரு படம்னு இதுவும், ‘துருவ நட்சத்திரமு’ம் அடுத்த வருஷம் வெளியாகும்”
 
“வேற என்னென்ன புது முயற்சிகள்?”

“தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என மொழிக்கு ஒருவராக நான்கு நடிகர்களை  வைத்து நான்கு மொழிகளில் ஒரு படம். படத்தின் தலைப்பு ‘ஒன்றாக.’ நாலு பேருமே நண்பர்கள். காலேஜ்ல ஒண்ணா படிச்சவங்க. காலேஜ் முடிஞ்சு 10 வருஷம் கழிச்சு அந்தக் கதையை ஓப்பன் பண்றோம். அவங்க நாலு பேரும் இன்னொரு ஃப்ரெண்டோட கல்யாணத்துக்கு அமெரிக்கா பயணமாகுறாங்க. அதற்கு முன் நாலு பேரின் கதை,   அமெரிக்கப்பயணம், அதில் நடக்குற எமோஷன்ஸ்னு அழகான விஷயம். இதில் மூன்று ஹீரோயின்கள். ரஹ்மான் சார் இசையமைக்கிறேன்னு சொல்லியிருக்கார். கர்நாடகாவின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் கன்ஃபர்ம் பண்ணியிருக்கார். அடுத்த வருஷம் இதைத்தான் ஆரம்பிக்கிறோம். இதுதவிர இரண்டு படங்களின் தயாரிப்பு; ‘வீக் எண்ட் மச்சான்’னு ஒரு வெப் சீரிஸ்னு  பண்ணியிருக்கோம்.”

“சீனியர் இயக்குநர் நீங்க. தமிழ் சினிமாவின் இப்போதைய போக்கை எப்படிப் பார்க்குறீங்க?’’

“வட்டி, வரினு தமிழ் சினிமா அவ்வளவு ஆரோக்கியமா இல்லை. இன்டஸ்ட்ரியிலேயே ஒரு படம் நல்லா போயிட்டு இருந்தால் அதைக் கொண்டாடணும், அதுதான் சினிமாவுக்கான வெற்றினு நினைக்கணும். ஆனால், அப்படி நடக்கமாட்டேங்குது. எப்படிக் கவிழ்க்கலாம், காலி பண்ணலாம்னு நினைக்கிறதுதான் சாபக்கேடு. ஒரு நல்ல படத்தை, நல்ல படம்னு ஒப்புக்க டைம் ஆகுது. ‘மேயாத மான்’ படம் நல்ல வெற்றி. ஆனால்,  அதை வெற்றினு ஒப்புக்க ஆள் இல்லை.’’

“இந்தச் சூழல்ல சினிமாத் துறைக்கு அவசியம்னு நீங்க நினைக்கிறது?”

``ஃபைனான்ஸ், கந்து வட்டி, எல்லாத்தையும் விட்டுடுங்க. கன்டென்ட்! அதுதான் அவனைத் தியேட்டருக்கு வரவைக்கும்.  நாம இது போதும்னு நினைச்சுத் தர்றதுதான் தப்பு. இதுக்குமேல சொல்லவேணாம்னு ஏன் நினைக்கணும். புது விஷயங்களைச் சொல்லுங்க. நிச்சயம் வருவாங்க. ஒவ்வொரு காலமா பார்த்துட்டுதானே இருக்கோம். இன்னும் பழைய மாவைத்தான் அரைச்சிட்டிருக்கோம்னு தோணுது. ஹீரோ கால்ஷீட் கிடைச்சிடுச்சு, உடனடியா பண்றோம் ஓ.கே. ஆனால், ஒரு வருஷம் ப்ரீ ப்ரொடக்‌ஷன் செஞ்சு பண்ற படங்களும் அப்படித்தான் இருக்கு. என்ன சொன்னாலும் `விக்ரம் வேதா’ புது அட்டெம்ப்ட்.  அதுதான் அந்த இயக்குநர்களை பாம்பே வரை அழைச்சிட்டுப்போய், அதில் அமீர்கான், ஷாருக் பண்ணத் தயாரா இருக்காங்க. அவங்களை எல்லாத் தயாரிப்பு கம்பெனிகளும் வரவேற்றுப் பேசிட்டிருக்காங்க. ஆனால் நான் பண்ணின தப்பை அவங்க பண்ணக்கூடாதுனு நினைக்கிறேன். அதை அவங்க ரீமேக் பண்ணக்கூடாது. இந்தி என்ட்ரிக்காக முயற்சி பண்ணலாம். நல்ல விஷயம். ஆனால், அதே விஷயம் ரீ-க்ரியேட் பண்ணும்போது வராது. அதை அவங்க வேறு டைரக்டர் வெச்சு தயாரிக்கலாம். அவங்ககிட்ட உள்ள வேறு ஸ்க்ரிப்டை ஃப்ரெஷ்ஷா பண்ணணும் என்பது என்  அட்வைஸ்.  இப்படியான   கன்டென்ட்கள்தான் இன்றைய சினிமாவுக்கு உடனடித் தேவை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism