Published:Updated:

"குரல்வளையைக் கடிச்சிருவேன் பார்த்துக்க!”

"குரல்வளையைக் கடிச்சிருவேன் பார்த்துக்க!”
பிரீமியம் ஸ்டோரி
"குரல்வளையைக் கடிச்சிருவேன் பார்த்துக்க!”

ஆர்.சரண், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

"குரல்வளையைக் கடிச்சிருவேன் பார்த்துக்க!”

ஆர்.சரண், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
"குரல்வளையைக் கடிச்சிருவேன் பார்த்துக்க!”
பிரீமியம் ஸ்டோரி
"குரல்வளையைக் கடிச்சிருவேன் பார்த்துக்க!”

துரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் ‘ஆம்பள’ சரவணன், ‘திமிரு’ கணேஷ், ‘நான் சிகப்பு மனிதன்’ இந்திரன், ‘துப்பறிவாளன்’ கணியன் பூங்குன்றன், ‘மருது’ மருது, ‘சத்யம்’ சத்யம், ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ கார்த்திக், ‘அவன் இவன்’ வால்டர் வணங்காமுடி ஆகியோர் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது காலத்தின் கோலமன்றி வேறென்ன..? யாருக்கோ சவால் விட்டு யார்கூடவோ சண்டை போட பஞ்ச் டயலாக் பேசியபடி மாட்டுத்தாவணியில் முட்டிக்கொண்டார்கள்... ஸாரி, சந்தித்துக்கொண்டார்கள்.

  “ஹாய் கணி அண்ணே, நீ ஏன் மந்திரிச்சிவிட்ட கோழிமாதிரியே இருக்கே? முதல்ல அந்தக் கூலிங்கிளாஸையும் தொப்பியையும் கழட்டுணே. மனசுக்குள்ள பெரிய ஷெர்லாக் ஹோம்ஸ்னு நெனப்பு. ஆனா, உலகத்துலயே புத்தகத்தைத் தலையில கவுத்தி ஆவி பிடிக்கிற ஆளு நீ மட்டும்தாண்ணே” - முதல் திரியைக் கொளுத்திப்போட்டது வால்டர் வணங்காமுடியேதான். ``சரிடா சரிடா... ஒருத்தன் ஹாலிவுட் ஸ்டைல்ல நடிச்சிரக்கூடாதே... நானும் மதுரைக்காரன் தான்டா!” என்று சமாளிஃபிகேஷன் தட்டினார் கணியன் பூங்குன்றன்.

“ஏய்... நீ மதுரக்காரன்னா அப்போ நான்லாம் மலேசியக்காரனா..?” - ‘திமிரு’ கணேஷ் திமிறி எழுந்தார். “கூல் ப்ரோஸ்... நாம எல்லோருமே மதுரைக்காரய்ங்கதான். நைட்டு முட்டைப் பரோட்டா சாப்பிட்டுட்டுப் பஸ் ஏறுனா விடியக் காலைல எல்லோரும் சென்னைக் காரய்ங்கதான்” - சமாதானப்படுத்தினார் ‘ஆம்பள’ சரவணன்.

"குரல்வளையைக் கடிச்சிருவேன் பார்த்துக்க!”

``யாத்தே... யாருப்பா இது... ஆம்பளையா? நீ ஆம்பளைனா அப்போ நாங்கள்லாம் பொம்பளையா..?’’- கட்டையைக் கொடுத்தார் வால்டர் வணங்காமுடி.

``இந்தப்பாரு... நீ ஏதோ காமெடி பண்ணுவேனு சொன்னாங்க. இப்படி பாலா படத்துல வர்ற மாதிரி ரத்தம் வர்ற அளவுக்கு காமெடி பண்ணினா குரல்வளையைக் கடிச்சிருவேன் பார்த்துக்க!’’- ‘ஆம்பள’ சரவணனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சரவணனுக்கு மட்டுமா சாமி வந்தது..?

``வாய மூடுடி... வாய மூடுடி... இந்தாடி வெளக்கமாறை வெச்சுப் பஸ் ஸ்டாண்டைக் கூட்டுடி!’’ எனத் திடீரென ஹை-பிட்ச்சில் கத்துகிறார் கணியன் பூங்குன்றன்.

``ஆத்தி...! கழுத்தைத் தொங்கப்போட்டு இந்தாளு வந்தப்பவே நினைச்சேன். நரம்புத்தளர்ச்சி இருக்கும்னு. எங்க அப்பத்தா கிட்ட சொல்லி நல்லி எலும்பு சூப்பு வெச்சுக் கொடுக்கச் சொல்லணும். அப்போதான் கழுத்து நிக்கும். ஆமா, யாரை டி போட்டுப் பேசுறாரு... இங்கேதான் பொண்ணுங்களே இல்லையே..?’’ என்று சீரியஸாய்க் கேட்டார் லோடுமேன் மருது.  

``யோவ் கொழும்பு வெளக்கெண்ணெ... இந்தாளு பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவரு. ஒன்லி நாய்க்குட்டி பூனைக்குட்டிங்க மேலதான் அன்பு வெச்சிருப்பாரு. பொம்பளைனு சொன்னா மட்டுமில்ல, ஆம்பளைனு யாராச்சும் சொன்னாகூடப் பொண்ணுங்களை வாடி போடினு திட்ட ஆரம்பிச்சிடுவாரு. ஏன்னா பிரெஞ்சு  இலக்கியத்தைப் பிசைஞ்சு சாப்பிட்டவரு. கொரியன் லிட்ரேச்சரைக் கொறிச்சுச் சாப்பிட்டவரு. ஆப்பிரிக்கன் லிட்ரேச்சரை அவிச்சுச் சாப்பிட்டவரு..!’’

 “ம் ஓகேண்ணே... சினிமாவா இருந்தாலும் சரி, நடிகர் சங்கமா இருந்தாலும் சரி, சண்டக்கோழியா நிப்போம். நமக்குள்ள சண்டைக்கு நிக்கக்கூடாது. ஓகேயா சின்னப்பய மக்களே?” என சமாதானக் கொடியேற்றினார் வால்டர் வணங்காமுடி. அப்போது பக்கத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது ஓர் உருவம்.

 ``ஆமா... யாருடா இவன் வந்ததுலருந்து தூங்கிக்கிட்டே இருக்கான்?” என்று சத்யம் கேட்க, பின்னால் ‘பொத்துனாப்ல’ தூங்கிக் கொண்டிருந்தார் ‘நான் சிகப்பு மனிதன்’ இந்திரன். ``அண்ணே, அவனுக்கு அதிர்ச்சி தர்ற எதையாச்சும் பார்த்தா தூங்குற வியாதிண்ணே!’’ என்றார் வால்டர். ``அப்படின்னா இவன் டெய்லி பாத்ரூமை விட்டே வெளில வர முடியாதடா. எப்படி வந்தான்? சரி சரி தொத்து வியாதியா இருக்கப்போகுது. அவனை அங்கிட்டே தூங்கச் சொல்லு!’’ என்றார் `ஆம்பள’ சரவணன்.

``மொத்தமா நாம எல்லோரும் ஒண்ணு கூடுனதைப் பார்த்து வண்டியூர்க் கண்மாய்க்குள்ள விழுந்த பயதான். இங்கன தூக்கிட்டு வந்து போட்ருக்கோம். எப்படியும் கட்டுரை முடியிற வரைக்குமாச்சும் எந்திரிக்க மாட்டான். நாம பேசிக்கிட்டிருப்போம்” என மருது சொன்னபோது இந்திரனின் குறட்டைச் சத்தமும் அதோடு ஸின்க் ஆனது.

``ஆமா... அதென்ன ஆபீஸர், சத்யம்னு ஒரு பேரு..? அப்போ நாங்கள்லாம் யாரு... பொய்யி பித்தலாட்டமா?” என்று லந்தைப் போட்டார் வால்டர் வணங்காமுடி.

`` `சத்யம்’னு தியேட்டர் பேரை வெச்சாலாவது கூட்டம் வரும்னு பார்த்தா அந்தப் படத்துக்குச் சத்யம் தியேட்டர்ல மட்டும்தான் கூட்டம் வந்துச்சு. `ஆறடி காத்தே... அத்துக்கிச்சு பாத்தே’னு ஓப்பனிங்லயே வார்னிங் கொடுத்தும் நீங்க கேட்கலைனா நாங்க பொறுப்பா ப்ரோ..?’’ -மிடுக் துடுக் தோரணையில் கேட்டார் சத்யம் ஐ.பி.எஸ்.

``சரி சரி... நம்ம விஷால் சார் மேட்டருக்கு வருவோம். நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்டுன பிறகுதான் கல்யாணம்னு சொன்னாரு. கட்டடமும் கட்டல. தாலியும் கட்டல. வீட்டுல வரலெட்சுமி விரதமிருக்க இன்னும் ஆள் வரலையேனு அவங்க அம்மா ஃபீல் பண்ணுறாங்களாம். ‘சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கடா’னு அவங்கப்பா இவருகிட்ட சொன்னா, ‘இன்னும் வளர்ந்துக்கு றேன்’னு சொல்றாராம். இதுக்கு மேல ஆளு வளர்ந்தா சீலிங்கைப் பொத்துக்கிட்டுதான் வளரணும். ஐனஸ் முன்னாடி `டியா டியா டோலே’ பாடுன கண்டமனூர்காரி உசரத்துக்குத்தான் பொண்ணு தேடணும் ஆமா!” என்றார் கண்களை ஒன்றரைக் கண்ணாக மாற்றி அழகு காட்டும் வால்டர்.

``ஏம்ப்பா அவரைக் குத்தம் சொல்றீங்க? அவருக்குப் பெரிய பெரிய லட்சியம்லாம் இருக்குப்பா. ஒரு புரட்சிக்கலைஞர் வந்தப்போ புரட்சித்தளபதி வரக்கூடாதா..? அவருக்கும் அரசியல் ஆசை இருக்காதா? ட்ரம்ப் ஜெயிச்சப்போ வந்த டிவி லைவைவிட நடிகர் சங்கத் தேர்தல்ல லைவ் போட்டு பவர் காட்டுனவருப்பா நம்மாளு..!” என்றார் கணியன் பூங்குன்றன், விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு.  “என்னது... விஷாலுக்கும் அரசியல் ஆசை இருக்கா..!” என்று ஏகத்துக்கும் ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்தார் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ கார்த்திக். “ஷாக்கைக் குறை தம்பி. புரட்சித் தளபதினு ஏன் பேரு வெச்சுக்கிட்டாரு? சிப்பாய் கலகத்துலயா கலந்துக்கிட்டாரு? எல்லாம் மனக்கணக்குதான்!’’

``அரசியல்ல குதிச்ச மதுரைக்காரரே மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்துட்ருக்காரு. நம்மாளு மதுரைக்காரனா நடிச்சிட்டா அரசியல்ல ஜெயிக்க முடியுமா?’’ என்று பரிதாபமாகக் கேட்டார் `தீ.வி.பி’ கார்த்திக். ``தம்பி, நீங்க பொம்பளப் புள்ளைகளோட கடலையப் போடுறதோட நிப்பாட்டிக்கங்க. தமிழ்சினிமால அதிகமா  தமிழ்நாடு பூரா டிராவல் பண்ணின ரெக்கார்டு இருக்கு நம்மாளுகிட்ட. ரவுடியிஸத்தையும் திருட்டு விசிடியையும் குந்தாங்கூறா இவரு அளவுக்கு எந்த அதிகாரியும் ஒழிச்சதில்லை. எனக்கே அவர்தான் ரோல் மாடல்!’’ எனத் தெறிக்க விட்டார் சத்யம் ஐ.பி.எஸ்.

 ``அதுக்கில்ல, 40 வயசாச்சு. இவர் வயசு ஆளுகளுக்கு ஸ்கூலுக்குப் போற புள்ளைங்க இருக்குதுங்க. இவரு இன்னும் சண்டக்கோழியாவே திரியுறாரு. டக்குனு வைப்ரேட் மோடுக்குப் போயிடுறாரு. ஆனா ஊனா உள்பனியன் தெரிய பட்டனைக் கழட்டிவிட்டுட்டு பேட்டி கொடுக்குறாரு.  நம்ம வரு அப்பா நடிச்ச `நாட்டாமை’ படத்துலகூட அவருக்குப் பிடிச்ச சீன் ஒண்ணே ஒண்ணுதான். என்ன தெரியுமா? ‘பாயாசம் சாப்பிடுறீங்களா ஃப்ரெண்ட்?’ தான்!’’ என்றார் கணியன் பூங்குன்றன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"குரல்வளையைக் கடிச்சிருவேன் பார்த்துக்க!”

``என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? அவரை மாதிரி யாரும் `கத்திச்சண்டை’ போட முடியாது. `கதகளி’ ஆட முடியாது. அவரோட `தோரணை’க்கு முன்னாடி ‘பாண்டியநாடு’ மட்டுமில்லை, தெற்கே `தாமிரபரணி’ல ஆரம்பிச்சு வடக்கே `மலைக்கோட்டை’யைத் தாண்டியும் `பட்டத்து யானை’யா பட்டையைக் கெளப்பினவரு. விரைவில் தமிழ்நாடே ‘செல்லமே’னு கொஞ்சும் பாருங்க எங்க புரட்சித்தளபதிய!  ஏன்னா, அடிக்கிறதுல மூணு வகை. பேசுறதுக்கு முன்னாடி அடிக்கிறது... பேசும்போது அடிக்கிறது... பேச விட்டு அடிக்கிறது. எங்காளு பேச நினைச்சாலே அடிப்பாரு!’’- புகழுக்கே புழுக்கம் வரவைத்தார் மருது.
``புரட்சித்தளபதி, புரட்டாசி ஐப்பசிலாம் இருக்கட்டும். இந்த வால்டர் வணங்காமுடியோட நடிப்புத்  திறமைக்கு முன்னால அவர்லாம் ஒண்ணுமே இல்லை. எங்கூட சோடி போட்டு ஜெயிச்சிட்டா நான் வரைஞ்ச மீசையை அழிச்சிக்கிறேன். அப்புறமா அவரு அரசியலுக்கு வந்து ஆனா ஊனா படிக்கட்டும்!’’- சவால் விட்டார் வால்டர் வணங்காமுடி.

``இவன் வேற நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு. சரிசரி... இன்னிக்கு சென்னைக்கு பஸ் கேன்சல் ஆகிடுச்சாம். கொசஸ்தலை, கூவம், அடையாற்றுல வெள்ளமாம். சென்னைக்கு ஃப்ளைட் சர்வீஸ் மட்டும்தான் இருக்காம். இப்ப என்ன பண்றது டூட்ஸ்?’’ என்று பரிதாபமாகக் கேட்டார் `தீராத விளையாட்டுப்பிள்ளை’ கார்த்திக்.

``நாந்தான் இருக்கேன்ல... வாங்க சுமோல உங்களை சேஃபா கூட்டிட்டுப் போறேன்’’ என்றபடி சாவியைச் சுழற்றிக்கொண்டே அவர்களைப் பார்த்துச் சிரிக்க... எல்லோரும் தெறித்து ‘பாயும்புலி’யாய் மாறி வண்டியூர்க் கண்மாய்க்குள்  பாய்ந்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism